பயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி


  பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்


மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.

வீட்டினுள் புகுந்த புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்து அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த வாகனசாரதி அந்த பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். கால்கள் முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த பெண் வெறுமனே கண்ணீருடன் தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.


தனது மகன் தன் கண் முன்னே பிடித்து இழுத்து செல்லப்படுவதை தடுக்க முயன்ற மற்றும் ஒரு தாய் ஓடிச்சென்று மகணை பிடித்து இழுத்துக்கொண்டார். விசனமனந்த புலிகள் அந்த பெண்ணை வேகமாக தள்ளிவிட்டனர். நிலைதடுமாறி கீழே விழுந்த அந்தபெணின் நெற்றி கல்லில் அடிபட்டு இரத்தம் வழிந்த நிலையில் மயக்கமடைந்துவிட்டார். தனது மகனினதும் மனைவியினதும் நிலையை கண்டு கோபமுற்ற தந்தை மகணை பிடித்து இழுத்து செல்ல முயன்றவனை தாக்கினார். இதனை எதிர்பார்த்திராத புலிகள் கோவத்தின் உச்சிக்கே சென்று “ எங்கள் மீதே கைநீட்ட துனிந்துவிடாயா” என கத்திக்கொண்டே அந்த முதியவரை இரக்கமற்று நையப்புடைத்துவிட்டு சென்றனர். பின்னர் அந்த வயதான தம்பதியினர் உறவினர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்துக்கு பிறகு துனிந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக அவர்களை பிடித்துச்செல்ல வரும் புலிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள துணிந்துதனர். புலிகளிடம் பிடிபட்டாலும் மரணம் பிடிபடாவிட்டாலும் மரணம் என்னும் நிலையில் வீடுகளிலேயே இறந்துபோகலாம் என நினைத இளம் ஆண்களுக்கு துனையாக அவர்களின் பெற்றோர்களும் துணிந்துவிட்டதால் ஆட்கடத்தலுக்காக செல்லும் புலிகள் இப்போது ஆயுதங்களுடன் செல்லதொடங்கினர். இந்த நிலையில் தான் தன் கையே தன் கண்னை குற்றியதை அல்லது வேலியே பயிரை மேய்ந்ததை மக்கள் நேரடியாகவே கண்டனர். இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனத்தை பிள்ளை பிடிக்கசென்ற புலிகள் உச்சகட்டமாக அரங்கேற்றியிருந்தனர்.

2007ஆகஸ்ட் 27 இரவு 8.15 மணியளவில சோமலிங்கம் என்பவரது வீட்டினுள் புகுந்த புலிகள் அவருடைய 24 வயது மகனை கடத்திசெல்ல முயன்றனர். ஆனால் புலிகள் தமது வீட்டினுள் அத்துமீறி நுழையப்போவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட அவருடைய தாயார் தனது மகனை வேறு ஒரு உறவினர் வீட்டில் ஒழித்து வைத்துவிட்டிருந்தார். திட்டமிட்டபடியே வீட்டினுள் நுழைந்த புலிகள் தாங்கள் கடத்தி செல்ல வந்த இளைஞனை காணாது கோபமடைந்த நிலையில் வீட்டில் இருந்தவர்களுடன் கைகலப்பில் ஈடுபடதொடங்கினர். கைகலப்பு முற்றிய நிலையில் அந்த இளைஞனின் தாயரின் கால்களில் புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்யதனர். கால்களிலும் கைகளிலும் பலத்த காயத்துக்கு உள்ளான லட்சுமி என்கின்ர 48 வயது பெண்மனி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிட்சை பலனளிக்காமல் அவர் தனது உயிரை விட வேண்டியதாயிற்று.

தொடர்ச்சியாக போர முனைகளில் ஏற்பட்ட சேதங்களால் ஆளணி பற்றாகுறைய எதிர்நோக்கிய புலிகள் அதனை ஈடு செய்வதற்காக இரக்கமற்று, மிக கொடூரமான முறைகளிலெல்லாம் ஆட்களை கடத்திச்சென்று கட்டாய ஆயுதபயிற்சியளித்து போர்முனைகளில் கொண்டு விடுவதில் அதிதீவிரமாக இயங்க தொடங்கியிருந்தனர்.
( தொடரும் )

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...