பயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி


(முறிக்கப்பட்ட கோடாரி காம்புகள்)

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில வாழ்ந்த மக்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.புலிகள் மற்றும் அவர்களின் நேரடி குடும்பத்தினர்.

2.போராளிகுடும்பத்தினர்.

3.மாவீரர்குடுப்பத்தினர்.

4.புலிகள் அமைப்பில் பல்வேறு பணிகளில் இருந்த பணியாளர்கள்.

5.வியாபாரம் போன்ற தொழில் நிமிர்த்தம் புலிகளுடன் இணக்கமாக செயற்பாடாதோர்.


6.எல்லைப்படை போன்ற அமைப்புகளின் குடுப்பத்தினர்.

7.புலிகளின் புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை வைத்திருந்த்து தகவல்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கி வந்தவர்கள்.

8.தாம் செய்கின்ற தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள புலிகளுக்கு ஆதரவாளர்களாக செயற்படுவாதாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டோர்.

9.புலிகளுடன் எவ்வகையிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவிரும்பாதவர்கள்.

கட்டாய ஆட்சேர்பின் இறுதி தருணங்களில் அனைவரும் பாதிக்கப்பட்டாலும் முதலில் புலிகளால் குறிவைக்கப்பட்டவர்கள் இந்த 9வது வகையினர்தான்.

மக்களை வேட்டையாட மக்களையே பயண்டுத்திய புலிகள் இறுதியாக சுயநலத்துடன் கட்டாய ஆட்சேர்ப்பில் தம்முடன் சேர்ந்து இயங்கிய இளைஞர்களை குறிப்பிட்ட எண்னிக்கையில அவர்கள் ஆள்பிடித்து கொடுத்தவுடன் அவர்களையும் பிடித்து சென்றுவிட்டனர். உங்கள் மகனும் எங்களுடன் எங்கள் கொள்கையில் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணந்துவிட்டான் என்று அவர்கள் வீடுகளில் கூறிவிட்டனர்.
 fence-8
ஊருக்குள் அழகான பெண்பிள்ளைகளின் பின்னால் திரிந்த இளைஞர்கள், வேலைவெட்டி இல்லாமல் “ பீடி” பிடித்து கொண்டு சந்திகளிலும், மதகுகுகளிலும் குந்திக்கொண்டிருதவர்களுக்கு இப்போது அந்த பிள்ளைகளை தொட்டு,பிடித்து இழுத்து ஏற்றிசெல்லும் சந்தப்பம் கிடைத்திருந்த்தது, இதனால் புலங்காங்கிதம் அடைதிருந்த இந்த உதவாக்கரைகளை புலிகள் பயன்படுத்திக்கொண்டு கடைசியில் அவர்களையும் வேட்டையாடியிருந்தனர்.

இவ்வாறான ஒரு சம்பவம் ஒன்று கிளிநொச்சி மருதநகரில் நடந்தது.
இந்த பகுதியில் முகாம் அமைத்து செயற்பட்ட புலிகளில் பிரபல பிள்ளைபிடி பொறுப்பாளரான இளம்பரிதியின் ஆட்களுடன் சேர்ந்து இயங்கிய 22வயது இளைஞனை இறுதியில் பிடித்துச்சென்று பயிற்சிமுகாமுக்கு அனுப்பிவிட்டான் இளம்பருதியின் வலது கையாக இயங்கிய நீதிநேசன்
வித்தியாசமாக தங்களுக்கு பெயர்சூட்டிக்கொள்வதில் வல்லவர்களான புலிகள் இந்த கொடிய அயோக்கியனுக்கு நீதிநேசன் என்று பெயரிட்டிருந்த்ததில் ஆச்சரியமே இல்லை. இவன் தனது பெயருக்கேற்ப அந்த குறிந்த மருதநகர் இளைஞன் விடையத்திலும் நீதியாகவே நடந்துகொண்டான் என்று கூறினாலும் தவறில்லை.

இந்த பிள்ளைபிடிகூட்டத்துடன் சேர்ந்து இரவுகளில் வீடுகளில் புகுந்து பிள்ளைபிடித்து கொடுப்பதில இவர்களுடன் சேர்ந்து இயங்குவதால் தனது மகனும் பாதுகாப்பாக இருபாதாக நினைத்துக்கொண்டிருநத இவனது பெற்றோரின் நினைப்பிலும் மண்ணை அள்ளிபோட்டிருந்தான் அந்த நீதிநேசன்.

எதிர்பாராத வகையில் தானே பிடித்து செல்லப்பட்டதாலும், புலிகள் செய்த நம்பிக்கை துரோகத்தாலும் ஏமாற்றம் அடைந்த அந்த இளைஞன் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது ஒரு கட்டத்தில் எவ்வித பயிற்சியும் வழங்காமலேயே அவனை கொண்டு சென்று போர்களத்தில் விட்டுவிட்டனர்

புலிகளுக்கு எதிரான போரில் இரக்கமின்றி செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரு தொழில்முறை இராணுவத்தின் போராயுதங்களை எந்தவித பயிற்சியும் இன்றி சந்திக்க விடப்பட்ட அந்த இளைஞன் பல்குழல் ஏவுகணைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உடற்சிதறிபோனான். ”உங்கள் மகனும் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான்” என்கின்ற தகவல் கூறப்பட்டு ஒன்பதாவது நாள் அந்த இளைஞனின் உடல் அவனது வீட்டுக்கு சீல்வைக்கப்பட்ட பெட்டியில் அனுப்பிவைக்கப்பட்டது. இப்போது அவனது குடும்பத்துனருக்கு புலிகளின் கதையை நம்பி கொடுஞ்செயலில் ஈடுபட்ட தனது மகனுக்கு கடவுள் கொடுத்த தண்டனையாக கருதுவதை தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. அடு்த்வனின் பிள்ளை ஒழிந்திருக்கும் இடத்தை மணந்து பிடித்து புலிகளுக்கு காட்டிக்கொடுத்த அந்த குடும்பம் தனது பாவ செயலுக்கான தண்டனையை அனுபவிக்க தொடங்கியிருந்தது.

ஆனால் நீதிநேசனோ இப்போதும் வேறு காவாலிகளை சேர்த்துக்கொண்டு ஒருவித வெறியுடன் பிள்ளை பிடித்துக்கொண்டிருந்தான். புதிய கோடாரிக்காம்புகளும் மரங்களை வெட்டுவதில் அகோரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன,

தொடரும்..

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...