எந்த நாடுமே இலங்கையை அச்சுறுத்தமுடியாத அளவுக்கு ராஜபக்ச அரசின் வெளிநாட்டுக் கொள்கைகளும், ராஜதந்திரங்களும் அமைந்திருந்தன என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும்.அதனால் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க,ராஜபக்சே அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்தன.அனுப்பிவைத்தனர்.அந்த நன்றிக்கடனை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் காட்டவேண்டிய கடைப்பாடு புதிய அரசிற்கு நிறையவே இருக்கின்றது.ஆனால் சீன அரசின் பாரிய முதலீடுகளுக்கும்,உதவிகளுக்கும் முன்னால் இந்திய அரசின் முதலீடுகளும் உதவிகளும் சொற்பமே.இதனால் பொருளாதார தேக்க நிலை ஒன்று நிச்சயம் உருவாகும்;உருவாகிக்கொண்டிருக்கிறது.
சரி,இந்த அமெரிக்க-சீன-இந்திய மாற்றங்களால் தமிழர் பிரச்சனைக்கு என்ன லாபம்?
நிச்சயமாக 'எதுவுமே இல்லை..!'என்பது தான் நிதர்சனமான உண்மை..!அப்படி எதுவும் கிடைக்குமென்று எதிர்பார்த்தால் அது எங்களின் முட்டாள்தனம்.
அவர்களால் எங்களுக்கு எப்படி ஒருவித நன்மையும் இல்லையோ,அப்படியே அவர்களுக்கும் எங்களால் 'தற்போது' எவ்வித நன்மையும் இல்லை..!
Source: face book : உவைஸ் முஹைதீன்

No comments:
Post a Comment