சேர் ஜெஃப்ரி நைஸ் மற்றும் றொட்னி டிக்ஸன் ஆகியோர் ஸ்ரீலங்கா
பற்றிய பான் கீ முனின் அறிக்கை பற்றிச் சொல்கிறார்கள்.

இராணி
வழக்கறிஞரான சேர் ஜெஃப்ரி நைஸ் முன்னாள் யுகோஸ்லாவிய சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தில் (ஐ.சி.ரி.வை) பணியாற்றியுள்ளார் மற்றும் சேர்பிய ஜனாதிபதி
சொலோபோடான் மிலோசேவிக் இனது வழக்கில் அரச தரப்பு வழக்கறிஞராகவும்
வாதாடியுள்ளார். மற்றும் ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலும் கூட
அவர் பணியாற்றியுள்ளார்.
இராணி
வழக்கறிஞரான றொட்னி டிக்ஸன் முன்னாள் யுகோஸ்லாவிய சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தில் (ஐ.சி.ரி.வை), ருவாண்டா தீhப்பாயம்(ஐ.சி.ரி.ஆர்), கம்போடிய
விசேட நீதிமன்றம், பொஸ்னியா யுத்தக் குற்ற நீதிமன்றம் மற்றும் சியார லியோன்
வீசேட நீதிமன்றம் ஆகியவற்றில் அரச தரப்பு வழக்குகளை தொடர்ந்தும்
குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகியும் பணிகளை செய்துள்ளார்.
(இது
ஒரு சட்டக் கருத்தின் தணிக்கை செய்யப்பட்ட சுருக்கமான பதிப்பு. பொதுவான
ஒரு தலைவருக்குப் பொருந்தும் வகையில் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விரிவான ஒரு சட்டக் கருத்தினை ஒரு பத்திரிகை கட்டுரையாக குறைத்தது,
நிபுணர்களைப் பொறுத்தவரை நியாயப்படுத்த முடியாத ஒன்று. அதனால் நாங்கள்
செய்திருப்பது, திறமையான சர்வதேச நிபுணர்களின் சிந்தனையை ஸ்ரீலங்கா
பொதுமக்கள் அறியும்படி தெளிவு படுத்தும் பணியினையே, இது வழக்கமாக
பொதுமக்கள் கேட்டுவரும், இந்த விடயத்தில் ஆர்வமுள்ள கட்சியினரின்
பிரச்சாரங்களில் இருந்து கணிசமான அளவு மாறுபடும். முழுதான சட்டக் கருத்தினை
கீழ்காணும் இணையத் தளத்தில் காணலாம் http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=121959)
இது
ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர்
குழாம் சமர்ப்பித்த அறிக்கையின் ஒரு மீளாய்வு ஆகும். அந்த நிபுணர் குழு,
அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பன சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித
உரிமைகள் சட்டங்களுக்கு மாறாக வன்முறைகளைப் புரிந்ததுக்கான அடையாளங்களை
உறுதிப்படுத்தும் நம்பிக்கையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக கண்டிருந்தது.
அரசாங்கம் தொடர்பாக நிபுணர் குழு நம்பிக்கையான குற்றச்சாட்டுகளாகக்
கண்டிருப்பது, செப்ரம்பர் 2008 மற்றும் மே 2009 க்கும் இடைப்பட்ட
காலத்திலான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னி பிரதேசத்தின் மீது ஷெல் மாரி
பொழிந்து பொதுமக்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்தது. மரணமான
பொதுமக்களின் எண்ணிக்கை 40,000 வரையான வீச்செல்லையில் இருக்கலாம் என
நிபுணர் குழு நம்புகிறது. அப்படிச் சொல்லப்பட்டதை நிராகரிக்க முடியாது
ஆனால் அதற்கு மேலதிக விசாரணை தேவைப்படுகிறது.
40,000
வரையான எண்ணிக்கை என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இந்த அறிக்கையில் அடையாளம்
காணப்படவில்லை. இந்த எண்ணிக்கை பற்றி பரவலான சர்ச்சை உள்ளது. நடைபெற்றதாக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மரணங்கள் எங்கே மற்றும் எப்படி இடம்பெற்றது
என்பதற்கு தெளிவான விபரங்கள் அறிக்கையில் காணப்படவில்லை மற்றும் ஒவ்வொரு
குறிப்பிட்ட விடயத்திலும் அவை பொதுமக்களின் மரணம்தான் என்றும் அல்லது யார்
இந்த ஒவ்வொரு மரணத்துக்கும் பொறுப்பு என்று எவ்வாறு வேறுபிரித்து
அறியப்பட்டது என்கிற விபரமும் அறிக்கையில் இல்லை.
எல்.ரீ.ரீ.ஈ
தொடர்பாக நிபுணர் குழு முடிவு செய்திருப்பது, கிட்டத்தட்ட 300,000 –
330,000 வரையான பொதுமக்களை வன்னிப் பிரதேசத்தில் பணயக் கைதிகளாக
எல்.ரீ.ரீ.ஈ பிடித்து வைத்திருந்ததுடன், அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தை
விட்டு வெளியேறுவதையும் தடை செய்திருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினால் அவர்கள்
மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதுடன் ஸ்ரீலங்கா இராணுவம் முன்னேறுவதை
தடுப்பதுக்கான ஒரு மனித தடை உத்தியாகவும் பொதுமக்கள் பயன்படுத்தப்
பட்டார்கள். இந்த பொதுமக்கள் எல்.ரீ.ரீ.ஈயின் அணியில் சேரும்படி
கட்டாயப்படுத்தப்பட்டு கிடங்குகளை வெட்டவும் மற்றும் ஏனைய பாதுகாப்பு
அரண்களை மேற்கொள்ளவும் பயன்படுத்தப் பட்டார்கள், அதன்படி போராளிகளுக்கும்
மற்றும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள வேறுபிரித்தறிவதை தெளிவற்றதாக்க
எல்.ரீ.ரீ.ஈ உதவியுள்ளது என்று அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அந்த
அறிக்கை குறிப்பிடுவது பெரிய குழுவாக பொதுமக்கள் கூடியிருந்த இடத்தின்
சுற்றாடலில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ பீரங்கி வேட்டுகளை சுட்டது மற்றும்
மருத்துவ மனைகள் உட்பட பொதுமக்களுக்கான நிறுவல்களில் இருந்து அது
துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டுள்ளது என்று.
எல்.ரீ.ரீ.ஈயின்
விடயத்திலும் அதன் மூத்த தலைவரை பாதுகாப்பதற்குமாக எல்.ரீ.ரீ.ஈ யின்
பலிபீடத்தில் அநேக பொதுமக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள்
என்று அந்த அறிக்கை முடிவு செய்துள்ளது. எனினும் எல்.ரீ.ரீ.ஈயினால்
கொல்லப்பட்டவர்கள் அல்லது காயம் பட்ட பொதுமக்களைப் பற்றிய ஏதாவது
எண்ணிக்கையை தருவதற்கு அந்த அறிக்கை தவறியுள்ளது மற்றும் இந்த மரணங்கள்
மற்றும் சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுவது எந்த வகையான துல்லியமான
சூழ்நிலையில் இடம்பெற்றது என்பதை பற்றிய பகுப்பாய்வை வழங்கவும் இல்லை.
குற்றம்
சாட்டப்பட்டுள்ள குற்றவியல் மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழுவின்
கண்டுபிடிப்புகள், வழக்கமாக கடுமையான மற்றம் பாரபட்சமற்ற விசாரணைக்கு
சாட்சியாக அத்தகைய கண்டுபிடிப்புகள் அமைவதற்கு ஏற்ற சட்ட வரையறைகளுக்கு
குறைவாகவே காணப்படுகின்றன. அறிக்கையின் கண்டுபிடிப்புகளிலுள்ள சாட்சிகள்
மற்றும் தகவல்கள், ஒன்றில் அறிக்கையின் பிரதான அங்கம் அல்லது
அடிக்குறிப்புகள் மற்றும் இணைப்புகள் போன்ற அனைத்துமே கிட்டத்தட்ட
அடிப்படையில் ஆதாரமற்றவை. கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட சாட்சியங்களில்
முழு அங்கமும் அறியப்படாததினால், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டவை எவை
மற்றும் எதாவது குற்றங்கள் கவனிக்காமல் விடப்பட்டதாக எழுப்பப்படும்
குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதற்கு ஏற்ற முக்கியமான குறிப்பிட்ட சாட்சிகள்
உள்ளனவா என்பதை அறிவதற்கு சாத்தியமில்லை. இது மேலதிக விசாரணை நடத்தவேண்டிய
ஒரு பணியினை ஏற்படுத்துகிறது – அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டவாறு
– அது இன்னும் கடினமானது. தற்போதுள்ள சாட்சியங்கள் பற்றிய ஒரு ஆரம்ப
புள்ளி இல்லாமல் நடத்தப்படும் புதிய விசாரணையில் அதன் விசாரணையாளர்கள்
எங்கிருந்து தேடலை ஆரம்பிப்பார்கள்?
ஸ்ரீலங்கா
இராணுவத்தால் பல்வேறு இடங்களில் வைத்து பொதுமக்கள் மீது ஷெல்மாரி பொழிந்து
அவர்களைச் சட்டத்துக்கு மாறாக கொன்றது சர்வதேச சட்டங்கள் தொடர்பான
விவகாரம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துவது, மேற்படி சாட்டப்பட்டுள்ள
குற்றங்கள் சம்பந்தமாக வாசகர் மத்தியில் ஒரு நியாயமான கருத்தை உருவாக்கும்
உண்மையான அல்லது மனநிலை சம்பந்தமான தேவைகளை அனுமதிப்பதை மாற்றியமைக்கப்
போவதில்லை. குறிப்பாக அந்த அறிக்கையில்; (1) இந்த ஒவ்வொரு தாக்குதல்களும்
நடைபெற்ற சூழ்நிலைக்கான ஆதாரங்கள், (2) எந்தவொரு நியாயபூர்வமான இராணுவ
இலக்குகள் மற்றும் பொருட்களின் பிரசன்னம், (3) அந்த தாக்குதல்கள்
எங்கிருந்து தொடுக்கப்பட்டன என்பதை எந்த சாட்சிகளின் அடிப்படையில் எப்படி
தீர்மானித்தார்கள் மற்றும் (4) அந்த தாக்குதல்கள் பொதுமக்கள் மீது
மெற்கொள்ளப்பட்டதா அப்படியானால் எந்த விகிதத்தில் என்பதற்கான எந்தவொரு
பகுப்பாய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
வன்னியில்
இருந்த பொதுமக்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் பணயக் கைதிகளாக இருந்தார்கள் எனவும்
மற்றும் அவர்களை எல்.ரீ.ரீ.ஈ மனிதக் கேடயங்களாகவும் மற்றும் ஸ்ரீலங்கா
இராணுவத்தக்கு எதிராக போரிடும் போராளிகளாகவும் பயன்படுத்தியது என்பதையும்,
மேலும் அரசாங்கம் ஷெல் வீசியதாக குற்றம் சாட்டப்படும், அரசமருத்துவ மனைகள் உட்பட முக்கியமான இடங்களையும், எல்.ரீ.ரீ.ஈ இலக்கு வைத்திருந்தது என்பதை
நிபுணர் குழு எற்றுக்கொள்கிறது. இவ்வாறான சூழ்நிலை இருந்தபோதும்கூட,
அரசாங்கம்தான் இதே மக்களை சட்ட விரோதமாக கொன்றது என்கிற கண்டுபிடிப்பை
நிபுணர் குழவினால் எப்படி மேற்கொள்ள முடிந்தது? நிபுணர் குழுவின்
அணுகுமுறையும் கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருந்தாலும்
அவர்கள் தாங்களாகவே ஆயுதம் எடுத்தவர்களாக இருந்தாலும் அல்லது எல்.ரீ.ரீ.ஈ
யின் பக்கத்தில் இருந்து எழுந்த அழுத்தம் காரணமாக ஆயுதம் ஏந்தியவர்கள்
ஆனாலும் சரி அவர்கள் அனைவரும் உண்மையில் பொதுமக்களே என்கிற தீர்மானத்துக்கு
வந்துள்ளது.
அந்த
அறிக்கை வழங்கியுள்ள அணுகுமுறையில் மேலதிக விசாரணைக்குத் தேவையான
சர்ச்சைக்குரிய பல குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியங்கள் உள்ளதாகக்கூறி தன்னை
மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு முரண்பாடாக குற்றச்சாட்டுகள் யாவும்
நம்பகமானதும் உண்மையானதுமாக உள்ளது என்று சாதகமாக கோரிக்கை எழுப்பியுள்ளது.
உண்மையில் இந்த அறிக்கையை பிரசுரம் செய்ததின் காரணமாக அதைத் தொடர்ந்து
வந்த வாக்குமூலங்கள், அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் என்பன அந்த
அறிக்கையின் கண்டுபிடிப்புகள் தொடர்பாக உறுதியான முடிவுக்கு வந்துள்ளதாக
தெரிகிறது. இதில்தான் ஆபத்து தங்கியுள்ளது – விரும்பியோ அல்லது விரும்பாமலோ
– அரசாங்கத்தினதும் மற்றும் அதன் படைகளினதும் குற்றவியல் பொறுப்புகள்
தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்.
சாட்சியங்களின் சட்டப் பகுப்பாய்வுகளுடன் கூடிய வலுவான ஒழுக்க விசாரணை,
உரிய ஆதாரத்துடன் மற்றும் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு உயரிய சட்டத்
தரங்களுடன் பரிசோதித்து மற்றும் எடைபோட்டு பார்க்கப்படாமல் அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ள தீர்க்கப்படாத கணடுபிடிப்புகளை வெளியிடுவது
மிகவும் ஆபத்தானது, அந்த அறிக்கையில்கூட செய்யப்பட்டதாக கூறப்படும்
குற்றச்சாட்டுகள் எதுவும் முறைப்படி நிரூபிக்கப்படவில்லை என
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐநாவால்
நிறுவப்பட்ட நிபுணர் குழு, ஒரு தொடரான அறிக்கைகளில் காணப்படும் ஆதாரமற்ற
வலியுறுத்தல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் ஒரு அறிக்கை மற்றொரு அறிக்கைக்கு
தவறான உத்தரவாதமாக வளர்ச்சி அடைவதை அனுமதிக்கிறதுடன் அதேபோன்ற ஆதாரமற்ற
குற்றச்சாட்டுகளையும் உருவாக்குவதற்கு உதவும் ஆபத்துக்கு எதிராக கவனம்
செலுத்த வேண்டும். கருத்து உருவாக்குபவர்கள் மற்றும் முடிவு எடுப்பவர்களின்
வர்ணனைகளின் வளர்ச்சியை படிப்பதற்கு, அது மட்டுமன்றி அதைக் கடினமாக ஆய்வு
செய்ய, அதை வெளியிட அவர்கள் யாருக்குமே நேரம் இருக்காது, அதேபோல உடனடி
அறிக்கைகளும் அநேகமாக நூற்றுக் கணக்கான பக்கங்கள் நீண்டதாக இருக்கும்.
அத்தகைய
அறிவிப்புகள் முடிவினை வரைவது சர்வதேச சமூகங்களில் தங்கியிருந்தன
உண்மையில் அவை நிரூபிக்கப்படாதவை, ஆனால் காலப் போக்கில் அவை திருப்பித்
திருப்பிச் சொல்லப்பட்டு மீள் உற்பத்தி செய்யப்பட்டன. அத்தகைய அறிக்கைகள்
ஒரு மோதலின் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்ணனையாக மாறியதுடன் அதில் குற்றவியல்
நடத்தைக்கு பொறுப்பானவர்களாக கூறப்பட்டவர்கள் சுதந்திமான விசாரணை மற்றும்
உண்மைகளை ஆராயாமல் குற்றம் சாட்டப்பட்டது ஒருபுறமிருக்க, முறையான சட்ட
விசாரணையினை தொடர்ந்து நீதிமன்ற கண்டுபிடிப்புகளையும் தேட வேண்டி
ஏற்பட்டது. பொருளற்ற மூலகங்களால் செய்யப்பட்ட ஒரு அட்சய பாத்திரம் தானே ஒரு
பொருளற்ற நிலைக்கு மாறியது. சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள்
யுத்தக் குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி
மேற்கொள்ளும் வழக்கு விசாரணைகளில் குற்றங்களை நிரூபிக்கும் சாட்சியங்கள்
என்ற வகையில் இந்த வகையான அறிக்கைகளில் நம்பிக்கை வைப்பதில்லை. இந்த
நீதிமன்றங்களில் இயற்றப்பட்டுள்ள நீதி பரிபாலன வரம்பின்படி, தற்போதைய
அறிக்கை உண்மையை தேடும் ஒரு நீதிமன்றத்துக்கு கிட்டத்தட்ட மதிப்புவாய்ந்த
உதவி எதனையும் செய்யப் போவதில்லை, மற்றும் நீதிமன்றத்துக்கு வெளியிலும்
அதற்கு எதுவித மதிப்பும் கிட்டப்போவதில்லை.
நிபுணர்
குழு பல தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றது, ஆனால் இந்த தரப்பினரது
உண்மையான சாட்சியங்களின் மூலம் அறிக்கையில் தரப்பட்டிருக்கவில்லை.
குறிப்பாக வாக்குமூலங்கள் மற்றம் இதர சாட்சியங்கள் (உதாரணமாக ஆவணங்கள்,
காணொளிகள் போன்றவை சாட்சியங்களாக சமர்ப்பிக்கப் பட்டிருந்தால்) நேர்காணல்
செய்யப்பட்டு ஆலோசனைக்கு உட்படுத்தியிருந்தால் அவைகள் அறிக்கையுடன்
சமர்ப்பிக்கப் படவில்லை. உண்மையில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் – அப்படி
ஏதாவது இருக்கும் என்று கருதினாலும் கூட – அவைக்ளைக்கூட அநாமதேயமாகக்
குறிப்பிடவில்லை. நிபுணர் குழு வலியுறுத்தியிருப்பது அறிக்கையில்
உட்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் மட்டும் நம்பகமானவை மற்றும்
சம்பந்தப்பட்ட மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவை என நிபுணர் குழு கருதும்
முதன்மை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று. எனினும் அதன்
கண்டுபிடிப்புக்கு துணை செய்த முதன்மை ஆதாரங்கள் தீர்க்கமானவை என்று இந்த
அறிக்கையின் மூலம் பகுத்துணர்வது அசாத்தியம்.
இந்த
அறிக்கையின் பிரதான பலவீனம் அது பின்பற்றுவதாக வெளிப்படையாக கூறிக்கொண்ட
சான்றுகளின் தரம் மேலும் மோசமாகியுள்ளதே. ஒரு சட்டத் தன்மையற்ற ஆய்வு – ஒரு
ஊடகவியலாளரோ அல்லது ஒரு கல்விமானோ தான் விரும்பும் எந்த தரத்தையும்
பயன்படுத்த முடியும்,’ஒரு நிச்சயமான உணர்வு’, ‘ஒரு நியாயமான நம்பிக்கை
உணர்வு’, முற்றிலும் உறுதியான ஒரு நம்பிக்கை’,’ஒரு என்னுடைய சந்தேகமாக
இருந்தது’ போன்ற ஏதாவது ஒன்றை அவர் பயன்படுத்தலாம். ஆனால் பெரிய அளவில்
சாட்டப்பட்டுள்ள குற்றம் சம்பந்தமாக கையாளப்படும் ஒரு ஆவணம் – அது
பொறுப்பானவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுவர்களின் பெயரைக் கொண்டது –
சர்வதேச நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட சான்றுத் தரங்களை சிறப்பாகப்
பிரயோகிப்பதற்கான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அறிக்கை
முறையாகவும் மற்றும் தொடர்ந்தும் செய்வதற்கு தோல்வி கண்ட சில விடயங்களில்
இதுவும் ஒன்று.
நிபுணர்
குழுவின் கண்டுபிடிப்புகள் ஸ்ரீலங்காவுக்கும் மற்றும் அதன்
தலைவர்களுக்கும் மிகவும் தீவிரமான பின் விளைவுகளை எற்படுத்தலாம். ஆனால் அவை
சான்று மிகவும் குறைவான இலக்கு மட்டத்தின் அடிப்படையில் உள்ளது, அதேவேளை
சர்வதேச நீதிமன்றங்களுக்கு இந்த கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்யும்
வகையிலான மொழி மற்றும் பிரசங்கங்களை பயன்படுத்தப் பட்டிருந்தாலும், நிபுணர்
குழு தனது முடிவகளை எந்த சான்றுகளின் அடிப்படையில் மேற்கொண்டது என்பதை
விளக்கமாக வெளிப்படுத்தும் வகையில் இந்த நீதிமன்றங்களின் நடவடிக்கைகளுக்கு
பொருத்தமானவற்றை செலுத்தவோ அல்லது பின்பற்றவோ இல்லை. நடுநிலையான
அவதானிப்பாளர் ஒருவர், இவை அனைத்தும் செய்யப்பட்ட நேரத்தில் - அது சரியோ
தவறோ – அங்கு கணிசமானளவு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான விளம்பரம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிற உண்மையை கடுமையாக கவனித்து கண்டுபிடிக்க
வேண்டியுள்ளது. அப்படியான நேரங்களில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு
அவர் அப்பாவியாக இருக்கவேண்டும், முறையான சான்றுகளின் துணையின்றி விளம்பர
வரிசையில் முடிவுகளை முன்னெடுத்துச் செல்வது எளிதாக உள்ளது, ஆனால்
பரபரப்பாக இயங்கும் ஒரு உலகம் நம்பிக்கையுடனும் மற்றும் நியாயமான
எதிர்பார்ப்புடனும்தான் என்ன வலியுறுத்தப் பட்டுள்ளது என்பதை
ஏற்றுக்கொள்ளும்.
நிபுணர்
குழு குறிப்பிட்டிருப்பது, நம்பிக்கையான வட்டாரங்கள் மதிப்பிட்டிருப்பது
ஏறக்குறைய 40,000 பொதுமக்கள் மரணம் சம்பவித்துள்ளது என்று. இந்த நம்பகமான
வட்டாரங்கள் எதனது பெயரும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை, இருந்தும்
அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கை அறிக்கை பிரசுரிக்கப்பட்டதின்
பின்னர் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவதற்கான சரியான எண்ணிக்கை என்று
திரும்பத் திரும்ப நம்பப்பட்டது. வேறு பல வட்டாரங்கள் இறந்தவர்களின்
எண்ணிக்கையை மிகவும் குறைவாக மதிப்பிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே, ஆனால்
இவைகளைப் பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகக் குறைந்தது
ஐநாவின் இந்த மாதிரியான அறிக்கையில் பல்வேறு போட்டியான கணக்குகள்
குறிப்பிடப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படும். நாட்டிலிருந்த ஐநா
குழுவின் கணக்கு 7,721 (13 மே 2009 வரை) என்று அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது, 40,000 என்கிற எண்ணிக்கைதான் சரியானது என்றால்
போரின் இறுதி நாட்களான 18 மே 2009 வரை விளக்கம் எதுவுமின்றி 30,000 பேர்வரை
மேலதிகமாகக கொல்லப்பட்டிருப்பதாக நிபுணர் குழு கூறியிருப்பது சர்ச்சையை
ஏற்படுத்துகிறது. ஐநா உள்நாட்டு குழுவினரது 10,000 என்கிற எண்ணிக்கை,
அறிக்கையில் 40,000 ஆக கணிசமானளவு உயர்த்தப் பட்டிருப்பதற்கான கவனிக்கத்
தக்க பாய்ச்சலுக்கு ஆதரவாக உறுதியான சான்றுகள் எதையும் அறிக்கை
வழங்கவில்லை.
இதன்படி
இந்த மீளாய்வு, அறிக்கையின் பகுப்பாய்வினைப் பற்றி; அல்லது மாறாக மோதலில்
சம்பந்தப்பட்ட கட்சிகளின்மீது சாட்டப்பட்டுள்ள மீறல்களின் அடித்தளத்திலுள்ள
தீவிரமான ஆய்வுகளின் குறைபாடு பற்றி கவனம் செலுத்துகிறது. அறிக்கையானது
ஸ்ரீலங்கா அரசாங்கம் திறமையான பொறுப்புக்கூறல் நடவடிக்கையை பின்தொடரத்
தவறிவிட்டது எனக் கூறியுள்ளது, ஆனால் இது வண்டியை குதிரையின் முன்னால்
கட்டுவதைப் போலுள்ளது, ஏனென்றால் அரசாங்கத்தின் மோதலுக்கு பின்னான
விசாரணைகள் மற்றும் ஆரம்ப முயற்சிகள் பற்றிய மதிப்பீடுகள் யாவும் சகல
மோதல்களினதும் தன்மை மற்றும் அளவு என்பதைக் காட்டுவதற்கு கிடைக்கும்
சாட்சிகளிலேயே முற்றாகத் தங்கியுள்ளது.
தேனீ மொழிபெயர்ப்பு:எஸ்.குமார்
மூலம் :http://www.thenee.com/html/280315.html
No comments:
Post a Comment