உண்மையினை வெளிக்கொணர்வதை எனது கடமையாக எண்ணுகிறேன்!


1333344905re2-1WIMALSECTIONஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை சம்மந்தமாக அரசாங்கத்திலுள்ள தலைவர்கள் பொய்யான பரப்புரைகளை செய்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இவர்களது பொய்யான பரப்புரைகளை நம்புகின்றார்கள். அந்த வகையிலே உண்மையினை வெளிக்கொணர்வதை எனது கடமையாக எண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க.


அவர் மேலும் தெரிவிக்கையில், முதலாவது பொய் என்னவென்றால், முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிற்கும் பான் கீ மூனுக்குமிடையே 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23ந் திகதி கைச்சாத்திடபட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் தான் ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்பது.
உண்மையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை, நான் பல விதமான தேடுதல்கள் மேற் கொண்டிருந்தும் அவ்வாறு ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கண்டு கொள்ள முடியவில்லை. இப்பேற்பட்ட கட்டுக்கதைகளை பரப்புபவர்கள் சம்மந்தப்பட்ட ஆவணத்தை பகிரங்கப்படுத்துவது அவர்களது கடமையாகும்.

உண்மை என்னவென்றால், புலிகள் அழிக்கப்பட்டு சில நாட்களின் பின்னர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவரது வருகையின் இறுதியின்போது கூட்டாக ஒரு அறிக்கை விடப்பட்டது. உயர் அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளும்போது இப்பேற்பட்ட கூட்டறிக்கை விடுதல் என்பது வழக்கமான ஒரு விடயமாகும். கூட்டறிக்கைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இரண்டாவது பொய் என்னவென்றால், முன்னைய ஜனாதிபதி ராஜபக்சாவின் நடத்தையினாலேயே சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக மாறியதென்பது. தற்போதைய ஜனாதிபதி கூறியிருந்தார் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அவர்களை எம்பிலிப்பிட்டியாவிற்கு அழைத்து சென்று அவமானப்படுத்தியதால் அவர்கள் மிகவும் ஆத்திரமடைந்தார்கள் என்று.

அதில் எதுவித உண்மையுமில்லை, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்டும் பிரான்ஸ் நாட்டின் வெளி விகார அமைச்சர் பெர்னார்ட் குச்னரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் சமாதான பேச்சு நடத்த இங்கு வரவில்லை. அவர்கள் வந்தது, அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுத்து புலிகளுக்கெதிரான யுத்தத்தை நிற்பாட்டுவதற்கே. அவர்களின் விருப்பத்திற்கு நாம் செவி மடுத்திருந்தால், புலிகளுக்கெதிரான யுத்தத்தை இப்போதும் நடத்திக்கொண்டிருந்திருப்போம் மக்கள் அழிந்து கொண்டிருப்பார்கள்.

மூன்றாவது பொய் என்னவென்றால், முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தில் பிளவு பட்டு நின்றதாகவும், தற்போதைய அரசு அவர்களை எல்லாம் வென்றேடுத்துவிட்டார்கள் என்பது. இலங்கைக்கெதிரான பிரேணை மனித உரிமை கவுன்சிலின் முன்னர் முன்வைக்கப்பட்டபோது எங்களது நட்பு நாடுகள் எதுவும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஏனென்றால், தற்போதைய அரசாங்கம் பிரேரணைக்கெதிராக பிரச்சாரம் செய்யவில்லை. இலங்கை அரசாங்கமே பிரேரணையை ஆதரிக்கும்போது, வெளிநாட்டவர்கள் எமக்காக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அடுத்த பொய் என்னவென்றால், தற்போதைய அரசாங்கத்தின் இணங்கிச்செல்லும் அணுகுமுறை தான் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவையும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவையும் மின்சார கதிரைக்கு செல்லவிடாமல் தடுத்ததென்பது. யுத்த குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கே கொண்டு செல்லப்படுவார்கள். அந்த நீதிமன்றமானது ஒருபொழுதும் மரணதண்டனை விதிப்பதில்லை, அதிகூடிய தண்டனையானது ஆயுள் தண்டனையாகும்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனீவா தீர்மானம் என்பது நாட்டின் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாற்றுவதற்கான அமெரிக்காவின் திட்டமேயன்றி வேறொன்றுமில்லை. துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலானவர்கள் இந்த அபாயத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. நாங்கள் மக்களை விழிப்படைய செய்து இவற்றை விளங்கப்படுத்த வேண்டும். இந்த சூழல் சம்மந்தமாக சிங்கள ஊடகங்கள் எவ்வளவு தூரம் விளங்கியிருக்கின்றனவோ தெரியாது. ஒன்றைத்தவிர ஏனைய அனைத்து ஆங்கில ஊடகங்களும் அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றன.
மொஹான் சமரநாயக்க

 Source: http://salasalappu.com/?p=98504#more-98504

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...