தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை* - ( *நன்றி தலைப்பிற்காக நிலாந்தன்) BY Sugan Paris

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை* - ( *நன்றி தலைப்பிற்காக நிலாந்தன்)
**********
கற்றுக்கொண்ட பாடங்கள் : பகுதி ஒன்று : சிறைச்சாலைகள் : (துணுக்காய் ,கோண்டாவில் ,மானிப்பாய் ,புதுக்குடியிருப்பு ,கிளிநொச்சி )
1) சிறையிலிருந்து புணர்வாழ்வு பெற்று விடுதலையாகி வெளிவரும்போது 'நாங்களும் சிறைகளை வைத்திருந்து சிறைக்கைதிகளை மிச்சமில்லாமல் கொன்றனான்கள்'
என ஒருமுறையேனும் நினைத்துப்பார்க்கவும் அதை நேர்மையாய் குறிப்பிடவும் தவறக்கூடாது .


2) நாம் வைத்திருந்த சிறையில் எம்மால் கொல்லப்பட்டவர்களது குடும்பங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளார்கள் என நாம் ஆராய்வது நாம் புனர்வாழ்வு பெற்று
இயல்பு வாழ்விற்குத் திரும்புவதற்கு எம்மைத் தகுதியுள்ளவர்களாக்கும்
3)நாம் மிடுக்கோடு அணிந்த இராணுவச் சீருடைகளை நாம் கழற்றிப்போட்டுவிட்டு சரணடைந்து குடிமக்களாக மாறிவிடும்போது நமது சிறைச்சாலைகளில் நிர்வாணமாக
இருந்தவர்கள் பற்றிய நிர்வாணப்படுத்தப்பட்டவர்கள் பற்றிய நிலையை எண்ணிப்பார்த்தல்
4 ) நமது சித்திரவதைகள் தாங்காது "<< எம்மைக் கொல்லுங்கடா>>" என எமது மொழியில் அலறும்போது அதே மொழியில் தூசணத்தால்கொடுத்த வசவுகளையும் அடித்தே
கொன்ற வீரத்தையும் எண்ணிப்பார்த்தல்
5)"சுதந்திரப் பறவைகள்" என்று நாம் நம்மை அழைத்த காலத்தில் எம்மால் சிறைவைக்கப்பட்ட எமது இயக்கப் பெண்கள் பற்றியும் மற்றைய இயக்கப் பெண்கள் பற்றியும் எண்ணிப்பார்த்தல்
6) பணிஸ்மென்ட் எண்டு எம்மால் எமது போராளிகளுக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக சிறைச்சாலை , அதில் எமது தண்டனைகள் தப்பியோடுதலுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் இவற்றை நினைத்துப்பார்த்தல்
6 .1 ) சண்டையில் அடிபட்டுச் சாகாமல் பணிஸ்மென்ரில் சிறையில் இருப்பது நல்லது என நெருங்கியவர்களுக்கு கூறவேண்டி வந்த தருணங்கள்
7) சிறை வாழ்வு பற்றி எழுதிய கவிதைகளைப் படித்து உணர்ச்சி வசப்படுவதும் சிறைச்சாலைக்குப் போய் அனுபவித்துப் பார்ப்பதும் ஒன்றல்ல எனும் ஞானம் கைகூடுவது .
"அகாதகத்தில் இருந்து வரும் செய்திக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் "என்று எழுதிவிட்டு அவனவன் கனடா போய் பென் விருதும் கலாநிதிப்பட்டமும் வாங்கிவிடுவான் .
நீங்கள் நக்கத்தன்னியும் இல்லாமல் அவமானம் தாங்காமல் கையறு நிலையில் கண்ணீர் வற்றி வாழ்க்கையை தொலைத்து இளமையை வெறுத்து சுய அழிவுகளில் ஈடுபடவேண்டிவரும் .
8) நமக்குத்தெரிந்த நல்லவர்கள் சிறை அதிகாரிகளும் சிறைச்சாலை உதவியாளர்களும் மட்டுமே என்ற நிலைக்கு கடைசியில் வரவேண்டியிருக்கும் .
9)சிறையில் கொடுக்கப்படும் தொழிற் பயிற்சியே வாழ்வில் முதல்முதலாக வேலை குறித்த அறிமுகமாக இருக்கும் ,
10 )சிறைச்சாலையில் இருக்கும்போது அங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள்மேல் தனிப் பாசமும் அன்பும் கொள்ளவேண்டிவரும் ,வெளியில் உள்ளவர்களை அவர்களுடன் ஒப்பிட்டு வெறுக்கவும்கூடும்
11)சிறையில் அதிகமாக மனம்விட்டுப் பேசும் நீங்கள் வெளியில் வந்து பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறானாளீகள் போல் இருக்கவேண்டியிருக்கும்
.
11 .i )சிங்களவன் கொச்சையாகப் பேசும் தமிழ் பின்னர் உன்னதமானதாகவும் மாறக்கூடும்
12) சிறையில் இருந்தபடியே முயற்சித்து ஒவ்வொரு வெளிநாட்டுத் தூதரகங்களாக கதவைத்தட்டவேண்டியிருக்கும் .
( கட்டிக்குடுத்த சோறும் சொல்லிக்க்டுத்த பாடமும் எத்தினை நாளைக்கு ? )

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...