மோசமான காலம் - வானவில் மாசி 2015




இந்த வருடம் ஜனவரி 8ந் திகதி நிகழ்ந்த ஜனாதிபதி
தேர்தலையடுத்து இலங்கையில் முன்னெப்போதும்
இல்லாத பதிய அரசியல் சூழல் ஒன்று
உருவாகியுள்ளது. இலங்கை ஜனாதிபதி முறைமையின்
நிறைவேற்று அதிகாரத்தில்

பெண்ணை ஆணாக்க முடியாதுää ஆணை
ப் பெண்ணாக்க முடியாது ’ என்பது
தவிர்ந்த சகல அதிகாரங்களும் இருக்கின்றதெனää
அதனை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்தனா
கூறியதை மெய்ப்பிக்கும் வண்ணம் நாளுக்கு நாள்
காரியங்கள் நடந்தேறிய வண்ணமுள்ளன. ஆனால்
தற்போதைய ஜனாதிபதிää தான் ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
முறையை ஒழிப்பேன்


என்பதை பிரதான கோசமாக
முன்வைத்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது
தேர்தலில் வெற்றியீட்டியவுடன்ää அவர்
இரண்டாந்தடவை ஜனாதிபதி தேர்தலில்
போடடியிடமாட்டேன் என்பதை மாத்திரமே
கூறியிருக்கிறார். இன்னுமொரு 6 வருடத்திற்கு இவரே
நிறைவேற்று அதிகாரத்தின் இதுவரையும்
தொடப்படாத சகல சரத்துகளையும் அமுல்படுத்தப்
போகிறார் என்பதே இதன் உள்ளடக்கம்.
திருப்பித்திருப்பி சொல்லவேண்டிய இன்னுமொரு
விடயமென்னவெனில்ää சிறீலங்கா சுதந்திரக்கட்சியின்;
பொதுச்செயலளாராக இருந்துää அக்கட்சியிலிருந்து
நீக்கப்பட்டää தற்போதைய ஜனாதிபதிää சிறீலங்கா
சுதந்திரக்கட்சியின்; தலைவராகியுள்ளார். இவர் கட்சி
சார்பின்றி (ஆனால் சில கட்சிகளின் ஆதரவுடன்)
ஜனாதிபதி தேர்தலில்ää முன்னைய ஜனாதிபதியும்
முன்னைய சிறீலங்கா சுதந்திரக்கட்சியின்;
தலைவருக்கும் எதிராக பொது வேட்பாளராக
போட்டியிட்டு வென்றுள்ளார். 2010இல் நடந்த
பாராளுமன்ற தேர்தலில் இலங்கையின்
பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட
அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்யக்கோராது
அல்லது பாராளுமன்றத்தை கலைக்காது புதிய
அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ளது. அதாவது
பாராளுமன்ற தேர்தலொன்றினை நடத்தாதுää
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இல்லாமல்
பிரதமரும் மந்திரிசபையும் புதிய ஜனாதிபதியின்
முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின்
பொதுவேட்பாளராக நிறுத்தப்படலாமெனக்
கருதப்பட்ட பலரில் ஒருவரான முன்னாள் பிரதம
நீதியரசர் சரத் என் சில்வாää புதிய பிரதமர் உரிய
முறையில் நியமிக்கப்படவில்லையெனப் பகிரங்கமாக
கருத்து வெளியிட்டுள்ளார். அரசியல் அமைப்பின்படி
பதவியிலுள்ள பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம்
செய்தாலன்றி அவர் பிரதமர் பொறுப்பை
கொண்டவராவரெனவும்ää அரசியல் அமைப்பின் 81வது
சரத்தின் பிரகாரம் கட்டாயமாக எழுத்து மூலமாக
பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்த பின்னரே
புதிய பிரதமர் நியமிக்கப்படலாம்ää ஆனால் அவ்வாறு
செய்யப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
இவரது கூற்றின்படிää தற்போது இலங்கையில் இரு
பிரதமர்கள் உள்ளார்கள் என்பதே அர்த்தம்.
ஜனாதிபதித்தேர்தலில் ஏறத்தாள வடக்கில் 76
வீதமான வாக்குகளையும் கிழக்கில் 70 வீதமான
வாக்குகளையும் பெற்றே புதிய ஜனாதிபதி தெரிவு
செய்யப்பட்டுள்ளார். இதனால் வடக்கு கிழக்கு
தமிழர்களுக்கு சாதகமாக செயற்படுவது போலவும்ää
அதே நேரத்தில் அவ்வாறு செயற்பட்டு இலங்கை
பெரும்பான்மை இனத்தவரின் தப்பெண்ணங்களுக்கு
உள்ளாகமலிருக்க வேண்டிய ஒரு நிலையில் புதிய
ஜனாதிபதியும் அவரது அரசும் உள்ளனர்.
இதனால்தான் என்னவோ ஓமந்தையிலிருந்த
இராணுவச்சோதனை சாவடியை அகற்றப்படுகின்றது
என்ற அறிவிப்பையும் இராணுவத்திற்கு பொலிஸ்
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பையும்
அடுத்தடுத்து வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைவராக
இருந்தாலும்ää தற்போதைய அரசு சிறீலங்கா
சுதந்திரக்கட்சி தலைமையிலானதல்லää ஐக்கிய
தேசியக்கட்சி தலைமையிலானது என்பதே உண்மை.
சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது
என்பது தெளிவாக தெரிகின்றது. இக்கட்சியினர்
அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் காரணமாக
இல்லாமல் தங்களுக்குள்ள குழு மோதல்களால்தான்
பிரிந்துள்ளார்கள். இக்கட்சியினரை பிரதானமாகக்
கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக்
கொண்டிருந்தும்ää சட்டத்திற்கு புறம்பான வகையில்
நியமிக்கப்பட்ட ஐ.தே.க. தலைமையிலான அரசை
கலைக்கும் வகையிலான எந்தவித முயற்சிகளும்
எடுக்காது இருப்பதே இவர்களிடையேயான பிளவை
கோடிட்டுக் காட்டுகின்றது.

புதிய அரசின் நூறு நாட்கள் திட்டம் ஐ.தே.கவினர்
தயாரித்ததே. அடுத்து வரப்போகும் பாராளுமன்ற
தேர்தலுக்கு முன்னர் இத்திட்டத்தில்
கூறப்பட்டவற்றை செயற்படுத்தி ஐ.தே.க. மக்களின்
ஆதரவை தம்வசப்படுத்த முனைகின்றது. அதனால்
இந்த மோசமான காலம் நூறு நாட்களின் பின்னரும்
தொடரும் ஆபத்தினை குறைத்து மதிப்பிட முடியாது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...