மகிந்தவின் தோல்விக்கு அவரது தரப்பு வழங்கிய பங்களிப்பு! -களனியூரான்

இயற்கையின் செயற்பாடுகள்
என்றாலும் சரிää மனிதனின்
செயற்பாடுகள் என்றாலும் சரிää
இடையறாது மாற்றத்துக்கு
உள்ளாகின்றன. இது ஒரு
விஞ்ஞானரீதியிலான பொது விதி.
இந்த மாற்றத்துக்கு புறக்
காரணிகளும்ää அகக் காரணிகளும்
தவிர்க்கவியலாதவாறு பங்களிப்புச்
செய்கின்றன. நடந்து முடிந்த
இலங்கை ஜனாதிபதித் தேர்தலிலும்
அவ்வாறான ஒரு நிலையைக் காண
முடிகிறது.
முன்னைய ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவின் தோல்விக்கு
வலிமையான உள்நாட்டு


வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின்
திட்டமிட்ட செயற்பாடுகள் முக்கிய
பங்கு வகித்துள்ளன என்பது
உண்மை. அதேநேரத்தில் மகிந்த
ராஜபக்ச தரப்பினரின் உள்ளக
ரீதியான பங்களிப்பும் அவரது
தோல்விக்கு கணிசமான அளவு
பங்களிப்பைச் செலுத்தியுள்ளது

சிங்கள மக்களில் பெரும்பாலோர்
மகிந்தவுக்கு வாக்களித்ததை
தேர்தல் முடிவுகள் எடுத்துக்
காட்டின. அதற்குக் காரணம்
அவரது அரசாங்கத்தின் தேசபக்த
செயற்பாடுகளும்ää பிரிவினைவாதää
பயங்கரவாத புலிகளை அவர்
ஒழித்துக் கட்டியதும் என்பதில்
மாற்றுக் கருத்தேதும் இருக்க
முடியாது.
அதேநேரத்தில் மைத்திரிபால
சிறிசேனவின் வெற்றிக்கு தமிழ்
பேசும் தமிழ் - முஸ்லீம் இனங்கள்
பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன
என்பதையும் தேர்தல் முடிவுகள்
எடுத்துக் காட்டியது. மகிந்தவும்
இந்த சிறுபான்மை இனங்கள்
தனக்கு வாக்களிக்கவில்லை என
பகிரங்கமாக் குறிப்பிட்டார். ஏன்
இந்த நிலை?
பொதுவாக தமிழ் மக்கள்
எப்போதும் சிறீலங்கா சுதந்திரக்
கட்சிக்கு எதிரான ஒரு
மனநிலையிலேயே இருந்து
வந்திருக்கின்றனர். அதற்குக்

காரணம் அவர்களுடைய தலைமைகள்
நாடு சுதந்திரமடைந்த நாளிலிருந்து
திட்டமிட்டு ஐ.தே.கவையே தமிழ்
மக்களின் நண்பனாக தமிழ்
மக்களுக்குக் காட்டி வந்ததும்ää தமிழ்
மக்களின் பழமைவாத
நிலைப்பாடுகளும் ஆகும்.
இருந்தாலும் சில விதிவிலக்குகளும்
வரலாற்றில் இருந்துள்ளன. எவே
தமிழ் மக்கள் ஒருபோதுமே மாற்றப்பட
முடியாதவர்கள் அல்ல.
உண்மையில் புலிகளின் கடைசிக்
காலத்தில் அவர்களுக்கும் தமிழ்
மக்களுக்கும் இடையிலான முரண்பாடு
அதிகரித்திருந்தது. புலிகளை
அரசாங்கம் அழித்துää யுத்தத்தை
முடிவுக்குக் கொண்டு வந்துää தமக்கு
ஒரு நிம்மதியான வாழ்வு கிடைக்க
வேண்டும் என தமிழ் மக்கள்
எதிர்பார்த்தனர். அவர்கள்
எதிர்பார்த்தது போலவே புலிகள்
அரசினால் அழிக்கப்பட்டனர்.
புலிகளை அழித்த பின்னர் அரசாங்கம்
இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான

தீர்வைக் காணும் என தமிழ் மக்கள்
நம்பினர். ஆனால் யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம்ää
பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றை
நல்ல முறையில் செய்துää வட
மாகாணசபைத் தேர்தலையும் நடாத்திய

அரசாங்கம்ää குறைந்த பட்சத் தீர்வான
மாகாணசபைகளுக்கான
அதிகாரங்களைக் கூட கொடுக்க
மறுத்தது. இது தமிழ் மக்கள்
அரசாங்கத்தின் மீது வைத்திருந்த
நம்பிக்கையை பெருமளவு தகர்;த்தது.
அத்துடன் தேவைக்கு அதிகமான
இராணுவத்தினரை வடக்கில்
தொடர்ந்தும் வைத்திருந்ததுää
பொதுமக்களின் காணிகளை
இராணுவம் கையளிக்க மறுத்ததுää வட
மாகாண ஆளுநராக இராணுவ
அதிகாரியைத் தொடர்ந்தும்
வைத்திருந்தது என்பனää தாம் ஒரு
இராணுவ அழுத்தத்தின் கீழு;
இருப்பது போன்ற உணர்வையும்
தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது.
இத்தகைய நிலைமை வெறும்
உரலையே இடிக்கக்கூடிய தமிழ்
கூட்டமைப்புக்கு அவர்களது உரலில்
அவலையும் அரசாங்கமே
போட்டுவிட்டது போலானது

முஸ்லீம் மக்களைப்
பொறுத்தவரையில்ää பொதுபல சேனா
போன்ற பௌத்த சிங்கள
மேலாதிக்க அமைப்புகள் அவர்கள்
மீது தொடர்ச்சியாக செய்து வந்த
இன விரோதää மத விரோத
நடவடிக்கைகளை அரசாங்கம்
கண்டும் காணாமல் இருந்தது
அவர்களுக்கு அரசாங்கத்தின் மீது
வெறுப்பை ஏற்படுத்தக்
காரணமாகியது. இந்த விடயத்தில்

அரசாங்கத்தில் உள்ள சில சக்தி
வாய்ந்த நபர்களே முஸ்லீம் விரோத
நடவடிக்கைகளுக்குத்
தூண்டுகோலாக இருந்தனர் என்ற
சந்தேகமும் முஸ்லீம் மக்களுக்கு
ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமை
காரணமாகவே முஸ்லீம்கள்
மகிந்தவுக்கு விரோதமான ஒரு
நிலையை எடுக்க வைத்தது.
இவைகள் தவிரää இறுதிப் போரில்
மட்டுமின்றிää போர் நடைபெற்ற
காலம் முழுவதும் அரச படைத்
தரப்பும்ää புலிகளும் செய்த மனி

அரசாங்கத்தில் உள்ள சில சக்தி
வாய்ந்த நபர்களே முஸ்லீம் விரோத
நடவடிக்கைகளுக்குத்
தூண்டுகோலாக இருந்தனர் என்ற
சந்தேகமும் முஸ்லீம் மக்களுக்கு
ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமை
காரணமாகவே முஸ்லீம்கள்
மகிந்தவுக்கு விரோதமான ஒரு
நிலையை எடுக்க வைத்தது.
இவைகள் தவிரää இறுதிப் போரில்
மட்டுமின்றிää போர் நடைபெற்ற
காலம் முழுவதும் அரச படைத்
தரப்பும்ää புலிகளும் செய்த மனி

இந்தக் காரணிகளுடன் மகிந்த
மூன்றாவது தடவையாகவும்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட
முடிவு செய்ததுää சோதிடர்களின்
மூடத்தனமான எதிர்வுகூறல்களை
நம்பி இரண்டு வருடங்களுக்கு
முன்பதாகவே தேர்தலை நடாத்தியமை
என்பனவற்றையும் குறிப்பிடலாம்.
ஏகாதிபத்திய சார்புää பிற்போக்கு
வலதுசாரிக் கட்சியான ஐ.தே.கவுக்கு
எதிரான இப்போதைக்கான மாற்று
என்ற வகையில் குறிப்பாக சிறீலங்கா
சுதந்திரக் கட்சியும்ää பொதுவாக
ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பும் தமது தவறுகளை
ஆராய்ந்து தகுந்த பரிகாரம்
செய்துகொண்டுää நாட்டு மக்களின்
நல்வாழ்வுக்கான போராட்டத்தை
தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும்
கடமை அவர்களுக்கு இருக்கிறது
என்பதை மறந்துவிடக்கூடாது.
வானவில் மாசி 2015

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...