“மகிந்த ! மகிந்த! எங்களுக்கு வேண்டும் மகிந்த!” நுகேகொடவிலிருந்து ------- கலாநிதி தயான் ஜயதிலகா

“மகிந்த ! மகிந்த! எங்களுக்கு வேண்டும் மகிந்த!” நுகேகொடவிலிருந்து மெதமுலானவிற்கு கோஷமிடும் கூட்டத்தின் அறைகூவல் முழக்கம் எதிரொலிக்கிறது
                                              - கலாநிதி தயான் ஜயதிலகா
பெப்ரவரி 18ல் நுகேகொட எழுச்சி
“எழுச்சி பெற வாருங்கள்
எழுச்சி பெற வந்து உங்கள் கரங்களை என்னுடைய கரங்களுடன் சேருங்கள்
எழுச்சி பெற வாருங்கள்
இன்றிரவே எழுச்சி பெற வாருங்கள்”
(புறூஸ் ஸ்பிறிங்ஸ்டன் : ‘ த றைசிங்’) ( Bruce Springsteen: The Rising)
நுகேகொடவில் மகிந்த ராஜபக்ஸ தேவைப்படுகிறார் என்கிறnugegoda-2 வாசகங்களுடன் ஒரு சுவரொட்டி காணப்பட்டது, அது ஊழல்;, மனித உரிமைகள் மீறல், சர்வாதிகாரம் போன்ற குற்றங்களுக்காக ஜேவிபியினால் ஒட்டப்பட்ட சுவரொட்டி அல்ல. நூறாயிரக்கணக்கான மக்களினால் தேவை என்று கோரப்பட்ட அந்த சுவரொட்டியில்  ஸ்ரீலங்காவின் பிரதம மந்திரியாக அவர் மாறவேண்டும் என்கிற கோரிக்கை மக்களால் மற்றும் தேசத்தினால் எழுப்பப்பட்டிருந்தது.


பெப்ரவரி 18ல் நுகேகொடவில் கூட்டப்பட்ட கூட்டத்தை விட, ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய எதிரணிக் கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டிருந்திருந்ததாக நினைவு, ஆனால் அது எங்கே, எப்போது, என்ன கூட்டம் என்பது எனக்குச் சரியாக நினைவில்லை. அது அநேகமாக 1960க்குப் பிந்தைய காலமாக இருக்கவேண்டும், எனது தந்தை என்னை ஸ்ரீ.ல.சு.க – லங்கா சமசமாஜ கட்சி – லங்கா கம்யுனிஸ்ட் கட்சி ஆகியன ஒன்றிணைந்த இது போன்ற ஐக்கிய முன்னணி பேரணி;களுக்கு கூட்டிச் சென்றிருந்தார். (யுபிஎப்ஏ) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தொடர்பற்ற நம்பிக்கையான ஒருவர் நேற்றிரவு தொலைபேசி மூலம், லலித் மற்றும் காமினி தலைமையில்  நடைபெற்ற மிகப் பெரிய டி.யு.என்.எப் ஊர்வலத்துக்கு இணையானதாக நேற்றைய பேரணி; இருந்ததாகச் சொன்னார்.
எது பொருத்தமான இணையாக உள்ளதோ, எனது அனுபவத்தில் நுகேகொட கூட்டம் மிகவும் வித்தியாசமானது அதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. உணர்ச்சி பூர்வமான, சக்திமிக்க, மற்றும் ஆர்வம் உள்ள மக்கள் கூட்டத்தை ஸ்ரீலங்காவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நான் கண்டேன், மேலும் அந்த உணர்வு யாருக்கும் எதிரான ஒன்றாக இருக்கவில்லை. அது யாரோ ஒருவருக்கான ஏதோ ஒன்றுக்கானதாக இருந்தது. இதனுடன் அங்கு ஒன்று கூடியிருந்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் அந்த நிகழ்வை ஒரு வரலாற்று சாத்தியமான திருப்பு முனையாக மாற்றியிருந்தது.
நுகேகொடயின் பிரதான வீரர்களாக இருந்தது, அந்தக் கூட்டத்தை எற்பாடு செய்தவர்களோ அல்லது அந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றியவர்களோ அல்ல. அது அங்கிருந்த மக்கள் மட்டுமே. அவர்கள் ஒருவரையொருவர் நெருக்கித் தள்ளிக்கொண்டு அந்தப் பிரதேசம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு ஒரு ஆர்வமான அமெரிக்க உதைபந்தாட்ட ரசிகர் கூட்டத்தையும் மிஞ்சிய உத்வேகத்தடன் ஸ்ரீலங்கா கொடிகளையும் மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் பதாகைகளையும் அசைத்தவாறே நின்றிருந்தார்கள்.
நுகேகொட கூட்டத்தின் மற்றொரு பிரதான வீரர் அங்கு சமூகமளித்திருக்கவில்லை. அவர்தான் மகிந்த ராஜபக்ஸ. அன்றைய நிகழ்வு பேராசிரியர் ஏ. டபிள்யு சிங்கம் தனது நூல் ஒன்றுக்கு இட்ட தலைப்பான “கதாநாயகனும் மற்றும் மக்கள் கூட்டமும்” என்கிற உன்னதமான விடயத்துக்கு பொருத்தமானதாக இருந்தது, மாறாக இந்த நிகழ்வில் கதாநாயகன் அங்கு இல்லை அதே சமயம் அவரது பிரசன்னம் அங்கு இருந்தது. பிரசன்னமாகியும் மற்றும் பிரசன்னமாகாமலும் இருந்தது வேறு யாருமல்ல, நிச்சயமாக அது மகிந்ததான், அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தால் அவரது பெயர் அடி வயிற்றில் இருந்து  பீறிட்ட முழக்கமாக வெளிப்பட்டது.
அந்த மேடையில் இருந்த பிரமுகர்கள்தான் அந்த சக்தியின் அனுசரணையாளர்களும் மற்றும் நடத்துனர்களுமாக இருந்தால், அந்த சக்தி உருவானது அங்கிருந்த மக்களிடமிருந்துதான். அந்த சக்தியோட்டம் ஒரு கண்ணுக்குத் தெரியாத சுற்றுமூலம் நுகேகொடவிலிருந்து மெதமுலானவரை சென்று திரும்பியது.
அந்த பேரணியின் செய்தி இரண்டு முக்கிய பார்வையாளர்ககளின் நோக்கங்களnugegoda-3ுக்கானது: மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரே அந்த இருவர். மைத்திரிபால சிறிசேனவுக்கான செய்தி பாதுகாப்பான, சவாலற்ற, ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக இருந்தது ஆனால் அதேபோன்ற செய்தி, தெரிவு செய்யப்படாத பிரதமர் மற்றும் அவரது ஐதேக அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. மகிந்த திரும்பவும் வரவேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்று அந்த செய்தி சொல்கிறது, 58 லட்சம் பேர் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் பெரும்பான்மை சிங்களவர்களில் 58 விகிதமானவர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் இந்த வாக்குகள் பிரதிநிதித்துவம் செய்யப்படாமல் கிட்டத்தட்ட உரிமையற்றதாகப் போய்விடக் கூடாது. அந்த செய்தி மேலும் தெரிவிப்பது ஒரு சமாதானமான ஓய்வை அனுபவிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ அனுமதிக்கப்பட மாட்டார், அவரது மக்கள் அவரிடமிருந்து  மற்றுமொரு தேசிய சேவையினை எதிர்பார்க்கிறார்கள், அது தேசிய விரோதி ரணில் விக்கிரமசிங்காவை தோற்கடித்து பிரதமராகி ஒரு ஸ்ரீ.ல.சு.க நிருவாகத்தை ஸ்தாபிப்பது.
அது ஜனாதிபதி சிறிசேனாவை கவிழ்ப்பதாகவோ அல்லது கடிகாரத்தை பழைய பாதைக்கு திருப்புவதோ அல்ல. அது ஒரு மீளமைப்பு முயற்சி அல்ல. அது ஸ்ரீலங்கா அரசியலின் விசையை மறுசீரமைத்து மீள் சமநிலைப் படுத்தும் ஒரு முயற்சி, எனவே அந்த 58 லட்சம் வாக்குகள் (74 விகிதமான பெரும்பான்மை இன வாக்குகள்) பிரதிநிதித்துவம் அற்றதாக போய்விடாது.
என்னைப் பொறுத்தவரை, நுகேகொட பொதுக்கூட்டத்தில் முக்கியமாக அடையாளப் படுத்திய ஒரு காட்சி, மகிந்த ராஜபக்ஸவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்காக அரசியலுக்கு திரும்ப வரும்படி அழைப்பு விடுப்பதற்காக பிரமாண்டமான விளம்பரப் பலகையின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு இளம் மனிதன் தனது கையில் இருந்த சிங்கக் கொடியையும் மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் உருவப்படத்தையும் புகைப்படக்கருவியின் கண்களில் படும்படி அசைத்தபடி இருந்த காட்சிதான். தடைகளை தகர்த்தெறியும் அந்த சைகை, தடைகள் மற்றும் பெருமை அனைத்தினதும் சேர்க்கையாக இருந்தது.
அந்த பொதுக்கூட்டத்தின் அரசியல் முக்கியத்துவமாகத் தென்பட்டது, கணிசமானளவு ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ரணதுங்க, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோரின் பிரசன்னம்தான்.
ஒட்டுமொத்த பேச்சுக்களும் உயர் அரசியல் தரம் வாய்ந்ததாக இருந்தது, முற்போக்கு வீரர்கள், பொடி அப்புஹாமி, வாசு மற்றும் தினேஷ் ஆகியோர் உன்னத பேச்சுக்களை நிகழ்த்தினார்கள். இளம் தாரகைகளான,  விமல் வீரவன்ச  அனல் பறக்கும் பிரசங்கத்தை நிகழ்த்தியபோது, உதய கமன்பில வெளித்தோற்றத்தில் மென்மையாகவும் நகைச்சுவையாகவும் பேசினாலும், அவரது கண்களில் மிளிரும் பிரகாசத்தை நீங்கள் புறக்கணித்து விட்டு பார்த்தால் அது ஒரு சிறப்பான செயற்பாடாகத் தெரிந்திருக்கும். மிகவும் மூத்த பேச்சாளரான தினேஷ் குணவர்தன கடைசியாகப் பேசினாலும் பொருத்தமான முறையில் ஐதேக விரோத நினைவுகளை எழுப்பினார், 1956ல் நடந்தவை மட்டுமன்றி மிகவும் அழுத்தமாக 1960ல் நடந்தவற்றையும் நினைவு படுத்தினார், அப்போது இரண்டு பொது தேர்தல்கள் நடைபெற்றன முதலாவது தேர்தலில் ஐதேக வென்றது இரண்டாவதில் ஸ்ரீ.ல.சு.க வென்றது, புதிய தலைமையின் கீழ் அதனால் அதிக வாக்குகளை சுவீகரிக்க கூடியதாக இருந்தது.
நுகேகொட பொதுக்கூட்டம் ஒரு தேசிய ஜனநாயக இயக்கத்தின் தோற்றமாகவும் மற்றும் ஒரு தேசிய ஜனநாயக  அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேசிய ஜனநாயக போராட்டம் ஒன்றின் ஆரம்பமாகவும் எனக்குத் தென்பட்டது. அது ஆழமான ஜனநாயகத் தன்மையானது, அதன் காரணமாக அது தேர்தல் ஒன்றில் வெற்றி பெறாமல் அல்லது பாராளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையோ இல்லாமல் ஆட்சி நடத்தும் ஒரு அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தெரிவு செய்யப்படாத பிரதமரையும் மற்றும் அரசாங்கத்தையும் நிறுவிய ஜனாதிபதியால் எதிர்க்கட்சித் தலைவரையும் நியமித்த ஜனநாயத் தன்மையையும் அது கேள்விக்குள்ளாக்குகிறது. இறுதியாக  இந்த அதிகார சமநிலையில் 5.8 மில்லியன் வாக்காளர்களின் வாக்குகள் (74 விகித பெரும்பான்மையினரில் 58 விகிதமானவர்கள்) பிரதிநிதித்துவம் பெறாமல் போகும் ஒழுங்கின்மையை சரி செய்யும்படி அது கோருவதும் ஜனநாயகம்தான். 
இந்த இயக்கம் ஒரு விதத்தில் தேசியத்தன்மை கொண்டது, புலிப் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்பனவற்றுக்கு எதிராக தைரியமான வெற்றி பெற்றதுக்கு பெருமை அடைவதுடன், தேசிய இறையாண்மை,சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பனவற்றுக்கு எதிராக மையவிலகு சக்திகள், மற்றும் வட மாகாணசபையின் இன படுகொலை பிரேரணை, மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஐநா மனித உரிமைப் பேரவைக்கு எழுத்து மூலமாக “பொறுப்புக்கூறலை உள்ளுர் பொறிமுறை மூலமாக முன்னேற்றுவதற்கு ஒருமித்து வேலை செய்வோம்” என வழங்கப்பட்ட வாக்குறுதி போன்ற வெளிசக்திகளால் ஏற்படும் அழுத்தங்களை எதிர்த்து பாதுகாக்கிறது.
வலுவான தேசப்பற்றிற்கான சேவையில் சிங்கள தேசியவாதத்தின் ஆழமான உணர்ச்சிகள்  ஊற்றெடுக்கும் உந்துவிசையாக செயற்படுகின்ற அர்த்தத்தின் அடிப்படையிலும் அது தேசியம் ஆகிறது. அதன் சிங்கள தேசியவாதிகள் எந்த வித்திலும் தமிழர் விரோதமாக அல்லது முஸ்லிம் விரோதமாக செயற்பட மாட்டார்கள், இருந்தபோதிலும் மறைமுகமான பிரிவினை மற்றும் தேசிய பாதகாப்புக்கு கேடு விளைவித்தல் போன்ற விடயங்களை அது எதிர்க்கும். இந்த சிங்கள தேசியவாதம் ஸ்ரீலங்கா தேசத்தின் தேசியம் மற்றும் ஸ்ரீலங்காவின் தேசப்பற்று என்பனவற்றின் முன்னணிப்படையாக நின்று செயலாற்றும் ஆனால் எந்தவிதத்திலும் சிறுபான்மையினரை ஆதிக்கம் செலுத்த வழி தேடாது.nugegoda-1
வெளியார்; மற்றும் அவர்களின் உள்ளுர் தளங்கள் மற்றும் நிறுவனங்கள் (குறிப்பாக ரணில் விக்கிரமசிங்காவின் ஐதேக அரசாங்கம்) என்பனவற்றின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக இயங்குவதே இந்த தேசியவாதம் மற்றும் தேசப்பற்று, ஆனால் அது உள்ளுர் சிறுபான்மையினரை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்காது. அது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பு என்பனவற்றுக்கு புதிய சக்தி நல்கும் ஒரு தேசப்பற்று மற்றும் தேசியவாதம் ஆகும்.
இது, கொழும்பின் மேட்டுக்குடியான உயரடுக்கினர் மகிழ்ச்சியான நாட்கள் திரும்பவும் வந்துவிட்டது எனக் பெருமையோடு பாராட்டத் தக்கதான தேசப்பற்று அல்ல. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்பனவற்றை நிராகரித்து, அவை மறைந்துள்ள போலி வேடங்களை கண்டுபிடித்து அவற்றை எதிர்ப்பதில் உறுதியாக உள்ள மக்களின் தேசப்பற்று. நுகேகொட பார்வையாளர்கள், வெகுஜனங்களில் ஒரு பகுதியினர், யுத்தத்துக்காகப் போராடி அதை ஆதரித்த மக்கள்,; அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் நாட்டின் பாதுகாப்புக்காக போராடச் சென்று உயிர் நீத்தார்கள் அதன் காரணமாக நாங்கள் அனைவரும் இன்று சமாதானமாக வாழ முடிகிறது. அவர்கள் மகிந்த ராஜபக்ஸவுக்கு நன்றி செலுத்துகிறார்கள் ஏனென்றால் அந்த அர்ப்பணிப்புள்ள தலைமையை அவர்தான் வழங்கினார், அவருக்கு முன்பிருந்த எவரும் மிகவும் முக்கியமாக ரணில் மற்றும் சந்திரிகா போன்றவர்களாலும்கூட இப்பேர்பட்ட காரியத்தை செய்ய முடியவில்லை அல்லது செய்யவில்லை. நாங்கள் இப்போது அனுபவிக்கும் சமாதானத்துக்கு அவர்களும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
தாழ் மட்ட வகுப்பு என கிராம்சி குறிப்பிடும் நடுத்தரத்தை சேர்ந்த மக்கள், தாங்கள் தேர்வு செய்யப்படாத தேசிய விரோத  உயரடுக்கு ஐதேகவின் ரணில் விக்கிரமசிங்காவால் ஆளப்படுவதை விரும்பவில்லை. இது மக்கள் மற்றும் தேசம் என்பனவற்றின் கலவை, இதை “தேசிய பிரபலம்” என கிராம்சி வகைப்படுத்தியுள்ளார். இதன்படி நுகேகொட அணிதிரட்டல் தேசிய – மற்றும் தேசியவாதி – எதிர்ப்பு எனும் பிரபல இயக்கத்தின் பிறப்பு ஆகும். அது மக்களின் தேசியவாத மறுமலர்ச்சியின் அடையாளம் ஆகும்.
கூட்டம் நடைபெற்ற நேரம் முழுவதும் மக்கள் கூட்டத்தினரிடமிருந்து “மகிந்த ! மகிந்த! அப்பட்ட ஓனே மகிந்த” (எங்களுக்கு மகிந்த வேண்டும்) என்கிற கோஷம் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எனவே  பலத்த கரகோஷத்தினிடையே “மகிந்த என்பது ஒரு பெயர் அல்ல, மகிந்த ஒரு நாடு” என்று விமல் சொன்னது அநேகமாக சரியாக இருக்க வேண்டும். பழம்பெரும் தலைவரான ஹோ சி மின் இடத்தை வெற்றி கண்டவரும் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரை வெற்றிப்பாதையில் நடத்தியவருமான  மிகச் சிறந்த வியட்னாமிய தலைவரான லீ டுவான் “சோசலிசமும் மற்றும் தேசமும் ஒன்று” என எப்போதும் கூறுவார். பெப்ரவரி 8ல் நுகெகொடவில் குழுமிய மக்களுக்கு கூட, மகிந்த ராஜபக்ஸவும் மற்றும் தேசமும் ஒன்றுதான்.
அனுபவம் மிக்க இடதுசாரியான வாசுதேவ நாணயக்கார நுகேகொடவில் பிரமாண்டமான முறையில் அணி திரண்டிருந்த அனைவரிடமும் அடிப்படை ஒழுக்க நெறிமுறை மற்றும் தத்துவார்த்த வார்த்தைகளில் “அது ஒரு தோல்வி அல்ல, அது ஒரு அவமானம், அது சரணாகதி” என பிரகடனம் செய்ததுடன் அதை திரும்பவும் சொன்னார்.


“நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என சபதம் செய்து ஒரு வாக்குறுதி அளித்தோம்
பின்வாங்கல் இல்லை, குழந்தாய், சரணடைதலும் இல்லை
கோடைகால  இரவில் இரத்த சகோதரர்கள்
பாதுகாப்புடனான ஒரு உறுதிமொழி
பின்வாங்கல் இல்லை, குழந்தாய், சரணடைதலும் இல்லை”
(புரூஸ் ஸ்பிரிங்ஸ்டன் : “சரணாகதி இல்லை”)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 http://www.thenee.com/html/210215-2.html

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...