“இனவழிப்பு” பிரேரணை Rajh Selvapathi
தீடீரென வடமாகாண சபை மிக அவசரமாக “இனவழிப்பு” பிரேரணையை நிறைவேற்றியதன் பின்னணியில் அமெரிக்க - இந்திய கைகள் இருப்பதாகவே தெரிகிறது.
பாராளுமன்ற பொதுதேர்தல் விரைவிலேயே வர இருக்கின்ற நிலையில் இவ்வாறான ஒரு தீர்மாணத்தின் மூலம் த.தே.கூ, பிரதமர் ரணில், அமெரிக்க - இந்திய வல்லாதிக்க சக்திகள் என அனைத்து தரப்பினரும் நன்மைகளை பெற்றுக்கொள்கின்றனர்.
 
த.தே.கூவுக்கு கிடைக்க கூடிய நன்மைகளாக
1. சம்மந்தனின் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளல் என்ற பின்னணியில் திடீரென முளைத்தை தமிழ் தேசியத்தின் ஒரு பிரிவினரை முளையிலேயே கிள்ளிவிடல்.
2. தேவைப்பட்டால் வருகின்ற பாராளுமனற தேர்தலை எதிர்கொள்ளும் கோஷமாக இத்தீர்மாணத்தை பயன்படுத்திகொள்ளல், தேர்தலை அதிகமாக வெற்றிகொள்ளவும் உபயோகபடுத்திக்கொள்ளல்.
.
3.
வெளியாட்களின் அல்லது புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர்களின் உந்துதலால் த.தே.கூ தற்போதைய தலைமத்துவத்திடம் இருந்து கைமாறிபோவதை தடுத்துக்கொள்ளல்.
4. இலங்கையில் கொதிநிலை நீர்ந்து போய்விடவில்லை என்று காட்டுவதன் மூலம் புலம்பெயர் தேசங்களில் புகலிட கோரிக்கைகளை முன்னெடுக்க முயல்வோருக்கு உதவுதல்
போன்றவை அமையலாம்.
பிரதமர் ரணிலுக்கு கிடைக்க கூடிய நன்மைகளாக
1. வடமாகாண சபை தனக்கு எதிரானது, அச்சபைக்கு எதனையும் விசேடமாக வழங்கிவிட போவதில்லை என்ற எண்ணக்கருவை ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டணிக்கு எதிராக அல்லது மஹிதவுக்கு ஆதரவாக வாக்களித்த சிங்கள மக்களிடம் கொண்டு சேர்த்தல். இதன் மூலம் அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளல்.
2. போர்குற்ற பூச்சாண்டி காட்டி மஹிந்தவினால் ஏற்படக்கூடிய அரசியல் சவாலை தடுத்துக்கொள்ளல்.
என்பனவும்,
அமெரிக்க- இந்திய சக்திகளுக்கு கிடைக்க கூடிய நன்மைகளாக
1. இலங்கையில் இனங்களுகிடையிலான இணக்கபாடுகளுக்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும் என்கின்ற விம்பத்தை உருவாக்கி தீவில் சீனாவினால் திட்டமிடப்படும் பலகோடி பில்லியன் டொலர் முதலீடுகளுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாகுவதன்மூலம் சீன தலையீட்டையும் அதனால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுருத்தலை குறைத்தல் அல்லது இல்லாமல் செய்தல்.
2. இவர்களின் கையாட்களான பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான களத்தினை இலங்கையில் உருவாக்கிகொள்ளல்.
3. தற்போதைய அரசுக்கு தேர்தலின் போது ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் மஹிந்த காரணி சவாலுக்கு முகம்கொடுக்க உதவுதல்.
4. மஹிந்த அரசினால் தடுக்கபட்டு வந்த தொண்டர் அமைப்புகள் என்ற பெயரிலான இவர்களின் தலையீடுகளை மீள் அமைதுக்கொள்ளல்.
போன்றவையும் அமையலாம்.
எனினும் இந்த தீர்மாணம் தீமைகளையும் கொண்டுவராமல் இல்லை.
1. இனங்களுக்கிடையிலான இணக்க செயற்பாடுகளில் ஒரு தடையாக அமைவதோடு இனங்களுக்கிடையே ஒருவருக்கு ஒருவர் அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் உருவாக்கலாம்.
2. மீண்டும் இருதரப்பு இனவாத சக்திகளையும் உயிரூட்டிவிடக்கூடும்,
3. முதலீட்டாளர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்படுவதால் முதலீடுகள் பாதிக்கப்படுவதோடு அழிவடைந்த பகுதிகளில் விரைவான அபிவிருத்தி செயற்பாடுகளில் தடைஏற்படலாம்.
எப்படியிருந்தாலும் தமிழ் அரசியல் தலைமைகள் தமது ஒவ்வொரு நகர்வையும் மிக அவதானத்துடன் எடுத்து வைக்க வேண்டிய காலத்தில் உள்ளனர். இவர்களின் எந்த ஒரு செயற்பாடும் 30 வருட கொடிய போரால் அனைத்தயும் இழந்து விட்டு நிற்கின்ற அப்பாவி தமிழ் மக்களையும் வெளிநாடுகளில் புகலிடம்தேட முடியாமல் இங்கே வாழ்வதற்கே சிரமபட்டுக்கொண்டிருக்கும் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களையும் நேரடியாகவே பாதிக்கும். மாறாக தமிழ் அரசியல் வாதிகளையோ அல்லது அவர்களின் உறவினர்களையோ ஒரு போதும் பாதிக்கப்போவதில்லை. இதனை தமிழ் மக்களும் உணரவேண்டும்.

 https://www.facebook.com/Rajhsevapathi/posts/946859558687814:0

Top of Form

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு என்ன ஆயிற்று?- கு.பாஸ்கர்

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது நா முதலாளித்துவத்தின் உச்சகட்ட ஜனநாயக அமைப்பு முறைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட ...