ஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசல் ஏற்பட காரணமாக இருந்த விஷமிகள் யார் ?- Suthan Nada

ஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசல் ஏற்பட காரணமாக இருந்த விஷமிகள் யார் ?
February 4, 2015
தமிழரசுக்கட்சியினர் ,அதை தொடர்ந்து தமிழர் விடுதலை கூட்டணியினர் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்னும் நோக்கத்துடன் செயட்பட்டார்களோ என்னவோ தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை என்பது ,குறிப்பாக தமிழரசுக் கட்சி காலத்தில் இருந்ததென்பது உண்மையே.
காலம் காலமாக தமிழ் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை,அவர்களது உடைமைகள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்டு புலிகள் அடித்து துரத்தினார்கள் .


தொழுகையிலே இருந்தவர்களை சுட்டு தள்ளினார்கள்.புலிகளை பற்றி நன்கு தெரிந்திருந்தவர்களுக்கு இச்செயலானது ஒன்றும் வியப்பானதல்ல.
ஆனால் கறையான் புற்றெடுக்க கரு நாகம் குடிகொண்டது போல தோழர் நாபாவின் பாசறையில் வந்து புகுந்தவர்கள், பதவியை தங்களது கையில் எடுத்துக்கொண்டதும், அதிகார மமதையில் ஆட வெளிக்கிட்டார்கள்.என்றைக்கும் தானே முதலமைச்சர் என்ற எண்ணத்தில் செயற்பட வெளிக்கிட்டார் பெருமாள் . தகப்பனை சுடுவதற்கு தேடி சென்று,மாணவர்களான அகிலன்களை கொன்றார்கள். யாருக்கெதிராக துப்பாக்கிகள் திருப்பப்பட வேண்டும் என்பதை அதிகார மமதை மறைத்ததால், தமிழர்களை மட்டுமல்லாது சிங்கள ,முஸ்லிம்களையும் கொன்று குவித்தார்கள்.
19.03.1988 அன்று நிந்தாவூரில் முஸ்லிம்கள், பெருமாளின் உத்தரவுக்கிணங்க கடத்தப்பட்டார்கள் .
தொடர்ந்து, ஈ .பீ .ஆர் .எல் .எப். இன் “பொட்டம்மானாக” செயற்பட்ட ஜேம்சின் உத்தரவுக்கிணங்க 1988 மார்ச்சில், 25 முஸ்லிம்கள் கல்முனையில் வைத்து கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
1988 நவம்பர் மாதம் சம்மாந்துறை, நிந்தாவூர், சாய்ந்தமருது போலீஸ் நிலையத்தை சேர்ந்த 42 முஸ்லிம்கள் தனியாக இனம் பிரிக்கப்பட்டு சுட்டு கொல்லப்பட்டார்கள் .சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அசிட்டும் வீசப்பட்டதுடன் தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர் .
2.2.1989 அன்று கல்முனையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கிரநைற் வீசியதில் இருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயமடைந்தனர் .
11.4.1989 அன்று கிண்ணியாவில் ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
4.12.1989 காத்தான்குடியில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
அதிகார மமதையில் மேற்கோள்ளப்பட்ட மேற்கூறிய சம்பவங்கள் தமிழ், முஸ்லிம் மக்களிடையே அவநம்பிக்கையை, நிரந்தர பகைமையை உருவாக்கியது.இலங்கை தீவினிலே நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமாயின்,நீடிக்க வேண்டுமாயின் பகைமை என்பது இல்லாதொழிக்கப்பட்டு இனங்களுக்கிடையே ஐக்கியம் உருவாக்கப்பட உழைக்க வேண்டும் . இது முற்போக்கு சக்திகளின் தலையாய கடமையாகும். ஆனால் பெருமாளின் செயற்பாடோ இனங்களுக்கிடையே நிரந்தர முரண்பாட்டையே வளர்த்தது.
ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரை பொறுத்த மட்டில் ,புலிகளினால் துரத்தப்பட்டு புத்தளத்தில் குடியேறிய முஸ்லிம் மக்களை அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து பராமரித்தார்கள்.இதனால் தான் புத்தளத்திலுள்ள கிராமமொன்றிற்கு “தேவா பாத்” என்னும் பெயரை அவர்கள் சூட்டியுள்ளார்கள்.
மக்கள் மத்தியிலே வாழ வேண்டும் அவர்களது துயரங்களை போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கேற்ற வகையில் வியூகம் அமைத்து செயற்படுவர். அந்த சிந்தனையே இல்லாதவர்கள் பதவி கிடைத்தால் இருப்பார்கள் இல்லையென்றால் பறந்து விடுவார்கள்.

From the facebook page of Mr.Suthan Nada  

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...