இனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இருட்டடிக்கும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம்! (2)



எஸ்.எம்.எம்.பஷீர்

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இலங்கை ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேனாவை தனிப்பட்ட முறையில் சந்தித்து தங்களின் தீர்மானம் தனிப்பட்ட வகையில் உங்களுக்கு எதிரானதல்ல என்று கூறி கைலாகு கொடுக்கவும் ஒரு அசட்டுத் துணிச்சல் விக்னேஸ்வரனுக்கு இருந்திருக்கிறது. அதேவேளை  அந்த நையாண்டியை சிறிசேனா எப்படி பொறுத்துக் கொண்டார். இப்போதைக்கு அவருக்கும் வேறு வழி இல்லை போலும்!.  

வட மாகாண சபையின் இன வழிப்புத் தீர்மானத்தில் தமிழர்களுக்கு எதிரான உச்ச தாக்குதல்களின் போது ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன மே 2009 இல் பிரதி பாதுகாப்பு உதவி அமைச்சராக செயற்பட்டுள்ளார் என்றும் நீதிக்கும்,  பொறுப்புக் கூறலுக்கும் அவரின் வகிபாகத்தை கோடிட்டு காட்டி உள்ளனர்.  அது மாத்திரமல்ல மைத்ரீயாலோ அல்லது அவருக்கு பின்னால் அவரைப் பதவி வழி தொடர்பவர்களாலோ  உள்நாட்டு பொறிமுறை மூலம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை என்பதாக தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது. அந்த வகையில் இந்த தீர்மானம் பிரச்சினைக்கு தீர்வுகாணும் தீர்மானமல்ல (Resolution) என்பதையும் , பிரச்சனைகளை மேலும் தீவிரப்படுத்தும் தீர்மானம் என்பதையும் (Resolution)  அனுமானிக்க முடியும்.
("This Council notes that President Maithripala  Sirisena  was acting defense minister in May 2009, during the peak of the government’s attacks against Tamils. This conclusively demonstrates the need for justice and accountability for the Tamil genocide to be driven and
carried out by the international community. Tamils have no hope for justice in any domestic Sri Lankan mechanism, whether conducted by the Rajapaksa regime, Sirisena regime, or its successor.)
மேலும் இந்த தீர்மானம் சரத் பொன்சேகா பற்றியும் கோடிட்டுக் காட்டி உள்ளதுடன் , அவர் "கனடா போஸ்ட் " எனப்படும் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இலங்கை சிங்கள மக்களுக்குரிய நாடு என்று குறிப்பிட்டதையும், அவர் இறுதி யுத்த காலத்தில் இராணுவ தலைமைக் கட்டளை  அதிகாரியாக இருந்ததையும் இபொழுது சிறிசேனாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருப்பதையும்  சுட்டிக் காட்டி உள்ளது. இங்கு முரண் நகையாக இப்படியான "இனவழிப்பு " குற்றவாளியை - தங்களின் தமிழனத்தை "அழித்தவருக்கு" - தமிழ் தேசியக் கூட்டமைப்பு , அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொழுது ஆதரவு அளித்தது என்பதை என்னவென்று சொல்வது. அது அரசியல் பரத்தமை  தவிர வேறில்லை. !! .
(This Council further notes that L-Gen. Sarath Fonseka was President Rajapakse’s Army Commander during the later stages of the war, and is currently President Sirisena’s advisor on defense matters. Fonseka told international media:
I strongly believe that this country belongs
to the Sinhalese but there are minority communities and we treat them like our people. We being
the majority of the country, 75%, we will never give in and we have the right to protect this country....We are also a strong nation ... They can live in this country with us. But they must not try to, under the pretext of being a minority, demand undue things.”(National Post, 23 September 2008.) )
இத்தீர்மானத்தின் நம்பகத்தன்மையை நலிவுறச் செய்யும் இந்த நபுஞ்சக அரசியல் சர்வதேச அரங்கில் அரங்கேறுமா ?

இனவழிப்பு  பிரேரணை நிறைவேற்றப்பட்ட சூழ்நிலைகளை அவதானிக்கின்ற பொழுது சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்கள் சில கவனத்துக்குரியவை.

இந்தப் பிரேரணையின் மீது உரையாற்றிய வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.டி.பி கட்சியின் தவராசா  வரலாற்று முக்கியத்துவமிக்க அந்த தீர்மானத்தில் ''ஈ.பி.டி.பி.'' என்ற தமது கட்சிப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதனை நீக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததாக அறியப்படுகிறது. அந்த வேண்டுகோளை ஏற்று விக்னேஸ்வரன் ஈ.பி.டி.பியின் பெயரை நீக்குவதாக குறிப்பிட்டதை ஏற்று தீர்மானத்தை ஈ.பி.டி.பி.மற்றும் பல எதிர்க்கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரித்ததாக செய்திகள் கூறின.

இனவழிப்பு எனும் மனித குலத்துக் கெதிரான குற்றம் பற்றி 1948 ஆம் ஆண்டின் சர்வதேச இனவழிப்பு ஒப்பந்தம் சொல்லும் இக்கட்டுரை சார்ந்த அம்சங்களைப் பற்றி ஆராய்ந்தால் மூன்று அம்சங்களை மட்டும் இங்கு கோடிட்டு காட்ட வேண்டி உள்ளது.  ஒன்று.

(1) இனவழிப்பு என்றால் தேசிய இனக்குழும  இனஞ்சார்ந்த அல்லது மதக் குழுக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் (அ) அக்குழுக்களின் உறுப்பினர்களைக் கொல்லுதல் (ஆ) அவர்களுக்கு உடல் ,  உள ஊறுகளை ஏற்படுத்தல் (இ) அவர்களுக்குள் பிறப்பினைத் தடுக்க நடவடிக்கைகளை எடுத்தல்

ஈ.பீ தீ பீ கட்சி வட மாகாண சபை எதிரணியில் எதிர்கொண்ட இந்த பிரேரணையில் மொத்த தமிழ் இனப் பிரச்சினையின்  தொடக்கப் புள்ளியாக அடையாளம் காட்டப்பட்ட மட்டுமல்ல வட மாகாண சபையால் இனவழிப்பாகவே பிரேரிக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு    சிங்கள மொழிச் சட்டத்துடன் தொடங்கி புலிகளைத் தோற்கடித்த காலம் வரையான இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறை நடவடிக்கைகளை   இனவழிப்பு நடவடிக்கைகளாக முன் வைத்திருந்தனர்.   ஈ.பீ.தீ.பீ மற்றும் எதிரணிகள் இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தால் தங்கள் மீண்டும் தமிழ் மக்களுக்குள் "துரோகிகளாக " காட்டப்படுவார் . அதனால் அவர்களின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் ஒருவேளை அவர்கள் மீண்டும் விக்னேஸ்வரன் தலைமையில் தலையெடுக்கும் தமிழ் தீவிரவாத அரசியலில் காணாமல் போக நேரிடும். ஆகவே அரசியல் தற்காப்பு  நடவடிக்கையாக அந்த பிரேரணையை ஆதரிக்க வேண்டிய ஒரு கள நிலவரம் அங்கு உணரப்பட்டிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஈ.பீ தீ பீ கட்சி  வட மாகாணத்தை மட்டும் தனது ஆடுகளமாக கொண்ட யதார்த்தத்தில் இ அக்கட்சிக்கு அப்பிரேரணையை ஆதரிப்பது தவிர மாற்று வழி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த இனவழிப்பின் ஒரு அங்கமாக தங்களையே சுய குற்றம் சாட்டும் இ குற்ற ஒப்புதல் செய்யும் ஒரு பிரேரணையை ஆதரித்து ஒரு வரலாற்று முட்டாள்தனத்தை ஈ.பீ தீ பீ கட்சி செய்துள்ளது. ஏனெனில் இனப்படுகொலையின் ஒரு அம்சமாக ஒரு இனக் குழுவின் (தமிழர்களின் - பெண்கள் புலிகளுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் ஆயினும் ) பிறப்பினைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தவர்களில் ஈ.பீ தீ பீ யினர் பற்றி தீர்மானம் பின்வருமாறு சொல்கிறது.

“Doctors aligned with the Sri Lankan government performed abortions on Tamil women without their consent. In May 2007, a confidential cable from the United States Embassy in Colombo stated, “Father Bernard also told us of an EPDP [Eelam People’s Democratic Party, a pro-government paramilitary organization] medical doctor named Dr. Sinnathambi, who performs forced abortions, often under the guise of a regular check-up, on Tamil women suspected of being aligned with the LTTE.”
இந்த தீர்மானத்தில் அமெரிக்க தூதுவராலய இரகசிய கேபிள் செய்தி ஒன்றினை பாதர் பெர்னார்ட் என்பவர் சொன்னதாக பின்வரும் செய்தியினை மேற்கோள் காட்டி உள்ளது  " அரச துணைப்படை அமைப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  (ஈபீடீபீ)  டாக்டர் சின்னத்தம்பி எனப்படும்  வைத்தியர்  வழக்கமான வைத்தியப் பரிசோதனை என்ற பாசாங்கில் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்களுக்கு பலவந்த கருக்கலைப்பு  செய்வதாக குறிப்பிட்டிருந்தது.
தங்களின் கட்சியின் பெயரை எடுத்து விடுங்கள் என்று கோரியும்இ எடுப்பதாக முதமைச்சர் கூறியும் ஊடகங்களை ஆக்கிரமித்த தீர்மானத்தில் ஈ.பீ தீ பீ  இன் பெயர் இருக்கிறது. அப்படியாயின் அவர்களும் "இனப்படுகொலை " பங்காளிகள் ஆவார்களா ? !!.


இந்த பிரேரணையை தமிழ் கூட்டமைப்பின் சகல மாகாண சபை உறுப்பினர்களும் போனஸ் அஸ்மின் உட்பட (தொப்பி அணிந்து சபையில் வாக்களித்துள்ளார்) ஆதரித்துள்ளார்கள். அதேவேளை எதிர்கட்சியில் வட மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் வாக்களிப்பினைத் தவிர்த்திருக்கிறார். இரண்டு சிங்கள உறுப்பினர்களான செனிவிரட்ன.  ஜயதிலக  மற்றும் ரிசாத் பதியுதீனின் சகோதரர் அப்துல் ரிப்கான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தார்களா என்பது பற்றி செய்திகள் இன்னமும் வெளிவரவில்லை.

இத்தீர்மானம் ஒருதலைப்பட்சமாக தமிழர்கள் மீது "சிங்கள" இலங்கை அரசுகள் மேற்கொண்ட இனவழிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் இ எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் யுத்த மீறல்களை பற்றிய முறைப்பாடுகளை ( 2002-2011 ) மட்டும் ஆராய்வதால்; அதற்குள் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களும்  உட்பட்டிருப்பதால்;  தமிழர்கள் வரலாற்று ரீதியாக இனவழிப்பு செய்யப்பட்டார்கள் என்று தீர்மானம் மேற்கொண்டு அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் வழக்கு தொடுக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு விதந்துரை செய்யவேண்டும் என்பதே இத்தீர்மானத்தின் நோக்கமாகும். இது ஒரு விதத்தில் புலிகளைக் காப்பாற்றும் தமிழ் புத்திசீவிகளின் ஒரு நடவடிக்கையும் ஆகும்  மறுபுறத்தில் தங்களின் கோரிக்கையை சரியான தருணத்தில் சரியான சர்வதேச மன்றில் முன் வைத்து தமது பிரிந்து செல்லும் உரிமையைக் கோர ஆதரவு தேடும் ஒரு முயற்சியுமாகும்.

சர்வேத குற்றவியல் நீதிமன்றுக்கு மனித குலத்துக்கு விரோதமான குற்றங்களை விசாரிக்கும்  நியாயாதிக்கத்தினை  வழங்கும் ரோம் குற்றவியல் சட்ட ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்து இடவில்லை என்பதால் இலங்கையை வேறு விதத்தில் அங்கு இழுத்துவர "சட்ட மூளைகள்" தங்களின் இறுதி உபாயமாக இனவழிப்பு  சர்வதேச ஒப்பந்தத்துக்கு 1950 ஆம் ஆண்டு இலங்கை வழங்கிய ஒப்புதலைக் கொண்டு , ஐக்கிய நாடுகள் ஆணையம் கொண்டு வரப்போகும் அறிக்கையின் ஊடாக , சர்வதேச நீதிமன்றுக்கு " இலங்கை அரசின் இனப் படுகொலையாளிகளை" கொண்டுவர ஒரு தந்திரோபாய நகர்வாகவே இத்தீர்மானத்தை வட மாகாண சபை கொண்டு வந்துள்ளது. 

அத்துடன் இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இனவழிப்பாகும் என்பதை உறுதி செய்ய முன்னர் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு வடக்கு கிழக்கு மாகான சபை உறுப்பினர்கள் 33 பேர் கையொப்பமிட்டு 2014ஆம் ஆண்டு 17ஆம் திகதி அனுப்பிய கடிதத்தையும் இத்தீர்மானதுடன் இணைத்துப் பார்க்க கோரி உள்ளதும் இன்னுமொரு சட்ட உபாயமுமாகும். அது மட்டுமல்ல  " இலங்கை அரசின் இனப் படுகொலையாளிகளை"  எந்த நாடும் அவர்களின் பயணங்களின் போதும் தடுத்து நிறுத்தி விசாரிக்கும் வகையில் செயற்பட அதிகாரம் அளிக்கும் ஐக்கிய நாடுகள் ஆணையயத்தின்  ஆணையையும் இத்தீர்மானத்தில் கோரி உள்ளார்கள்.


தொடரும்..

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...