ஃபிடல் கஸ்ட்ரோ 42 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!- பொன்மதி


“அமெரிக்கா எப்பொழுது ஒரு கறுப்பு ஜனாதிபதியைக் கொண்டு கறுப்பு ஜனாதிபதியைக் கொண்டு இருக்கிறதோ,  உலகம் எப்பொழுது ஒரு லத்தீன் அமெரிக்க பாப்பரசரைக் கொண்டிருக்கிறதோ, அப்பொழுது அமெரிக்கா எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்த
முன்வரும்”
.

இப்படிக் கூறியிருப்பவர் வேறுயாருமல்லää கியூபப் புரட்சியின் மாபெரும் தலைவரான ஃபிடல் கஸ்ட்ரோ தான் 1973இல் - அதாவது 42 ஆண்டுகளுக்கு முன்னர் - ஒரு
ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதில் அளிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார். எவ்வளவு
தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!அவர் கூறியதுபோல இன்று விடயங்கள் நடந்தேறி வருவதைக்காண்பதற்கு அவர் உயிருடன்
வாழ்ந்து கொண்டிருப்பது நிச்சயமாக அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.
இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சியின் கீழ் 53 வருடங்களாக அமெரிக்காவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கியூபாவுடனான இராஜதந்திர உறவுகள் திரும்பவும் புதுப்பிக்கப்பட்டு இருநாட்டுத் தலைநகரங்களிலும் தூதராலயங்களும்
திறக்கப்பட்டுவிட்டன. விரைவில் கியூபா மீதான பொருளாதாரத் தடையையும் அமெரிக்கா நீக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அமெரிக்க வலதுசாரிகளின் கூடாரமான
குடியரசுக் கட்சியின் கடுமையான எதிர்ப்பையும் மீறியே ஒபாமா இந்தச் சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்திய ஜனாதிபதி ஒபாமா ஒரு கறுப்பு இன வம்சாவழியினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் கஸ்ட்ரோ 1973இல் மனம் கொண்டு கூறினாரோ என்னவோ? இன்னொரு புறத்தில் கஸ்ட்ரோ அன்று எதிர்வு கூறியதுபோல வத்திக்கானில்
இன்று லத்தின் அமெரிக்க நாடொன்றைச் சேர்ந்த (ஆர்ஜன்ரினா) பிரான்ஸிஸ் அவர்கள் பாப்பரசராக இருக்கிறார். அவர் சமீபத்தில் கியூபா சென்று கஸ்ட்ரோவுடன் சுமார் ஒரு
மணித்தியாலம் வரை பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடிவிட்டும் வந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல வழமையாக பாப்பரசர்கள் பாரம்பரியமாகப் பின்பற்றி வரும் பழமைவாத
நடைமுறைகளை விடுத்து தனது சொந்த வாழ்விலும் வத்திக்கான் நிர்வாகத்திலும் பல புரட்சிகரமான மாறுதல்களை பாப்பரசர் பிரான்ஸிஸ் மேற்கொண்டிருக்கிறார்.

அவரது நடவடிக்கைகள் சம்பந்தமாக வத்திக்கானுக்குள்ளும் வெளியிலும் பல விமர்சனங்கள் வந்தபோதிலும் அவர் அவற்றைப் பொருட்படுத்தாது தான் தேர்ந்தெடுத்த பாதையில்
பயணிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தனமீதான விமர்சனங்கள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்  ‘நான் மார்க்சியவாதி என்றால், ஜேசுநாதரும் மார்க்சியவாதிதான்’ எனக் கூறியதாக சில ஊடகங்கள் குறிப்பிட்டன.

எதுஎப்படியோ ஃபிடல் கஸ்ட்ரோ குறிப்பிட்டது போல  அமெரிக்காவில் ஒரு கறுப்பு இனத்தவர் ஜனாதிபதியாகவும் வத்திக்கானில் ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டவர்
பாப்பரசராகவும் இருக்கும் சுழலில் அமெரிக்கா இறங்கி வந்து  அமெரிக்க
- கியூப உறவுகளைப் புதுப்பித்திருக்கிறது. ஆன்மீகவாதிகள் என்றால் கஸ்ட்ரோவின் இந்தத்
தீர்க்கதரிசனமான வார்த்தைகளை வைத்து அவரைக் கடவுளின் அவதாரம் என ஆக்கியிருப்பார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அவர் மக்களின் அவதாரமாக
இருப்பதனாலேயே இந்தவிதமான தீர்க்கதரிசனமான வாhத்தைகளைக்
கூற முடிந்தது.
மூலம் : வானவில்

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...