தொழிலாள வர்க்கம் உழைத்துச் சேர்த்த பணத்தைச் சூறையாட மக்கள் விரோத அரசாங்கம் முயற்சி!இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன –ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதி பதவிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ச்சியாக பல மக்கள் - விரோத தேச – விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முன்னைய அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. வெளிநாடுகள் சிலவற்றுடன் செய்துகொள்ளப்பட்ட கூட்டு
ஒப்பந்தங்கள் கௌரவிக்கப்படாமல் ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் செல்கின்றது.

ஆனால் அதைச் சீர்திருத்த முன்வராத அரசுää தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக
மக்களை ஏமாற்றும் பொருட்டு சில பொருட்களுக்கு விலைக்குறைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. கடந்த ஓகஸ்ட் 17ஆம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர்
ஒருமுறை இவ்வாறு செய்யப்பட்டது. தற்போது உள்ளு10ராட்சி சபைகளுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதை மனதில் வைத்து தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திலும் விலைக்குறைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.விலைவாசிகள் குறைக்கப்படுவது நல்ல விடயம்தான். ஆனால் அடிப்படையான பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்காமல்ää வேலை வாய்ப்புகளை
உருவாக்காமல் இந்தக் ‘கடன் வாங்கிக் கலியாணம்’ அவசியந்தானா? இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முன்னைய அரசாங்கத்தில் வெறுப்புற்றிருந்த தமிழ்ää
முஸ்லிம் மக்களில் கணிசமான ஒரு பகுதியினரும் பங்கு வகித்திருந்தனர்.

அவர்கள் அவ்வாறு முன்னைய அரசாங்கத்தில் வெறுப்புக் கொண்டதற்குக் காரணம் தமது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை  என்பது காரணமாக இருந்தது. அதன்
காரணமாக இன்றைய அரசு அவர்களுக்குப் போலி நம்பிக்கைகளை ஊட்டித் தம்பக்கம்
இழுத்தது. ஆனால் அவர்களது உதவியுடன் ஆட்சிக்கு வந்த பின்னர்ää அவர்களது
நிரந்தரமான பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி உடனடிப் பிரச்சினைகளுக்கும் கூட எவ்விதமான தீர்வுகளும் காணாது தட்டிக் கழித்து வருகின்றது. ஆனால் மறுபக்கத்தில்ää அரசு தனது நீடித்த இருப்புக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது.


இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன –ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதி பதவிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ச்சியாக பல மக்கள் - விரோத தேச – விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னைய அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன. புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. வெளிநாடுகள் சிலவற்றுடன் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்கள் கௌரவிக்கப்படாமல் ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் செல்கின்றது.

ஆனால் அதைச் சீர்திருத்த முன்வராத அரசு தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக
மக்களை ஏமாற்றும் பொருட்டு சில பொருட்களுக்கு விலைக்குறைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. கடந்த ஓகஸ்ட் 17ஆம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர்
ஒருமுறை இவ்வாறு செய்யப்பட்டது. தற்போது உள்ளு10ராட்சி சபைகளுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதை மனதில் வைத்து தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திலும் விலைக்குறைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. விலைவாசிகள் குறைக்கப்படுவது நல்ல விடயம்தான். ஆனால் அடிப்படையான பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்காமல்ää வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், இந்தக் ‘கடன் வாங்கிக் கலியாணம்’ அவசியந்தானா?


இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முன்னைய அரசாங்கத்தில் வெறுப்புற்றிருந்த தமிழ் முஸ்லிம் மக்களில் கணிசமான ஒரு முன்னைய அரசின் அரசியல்வாதிகள் மீதும் அதிகாரிகள் மீதும் வகைதொகையில்லாமல் வழக்குகளைப்
பதிவு செய்து அவர்களைத் தினசரி விசாரணைக் குழுக்கள் முன்னாலும் நீதிமன்றங்களின் முன்னாலும் இழுத்து நிற்க வைக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் 600இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டதிலிருந்து அரசு என்ன பாதையில் பயணிக்கப் போகின்றது என்பது தெளிவாகியுள்ளது. தனது கையாலாகத்தனத்தை மறைப்பதற்காக
அரசு இவ்வாறான தவறான வழிகளில் பயணிக்க முற்படுகின்றது. ஆனால் இது
நீண்ட நாளைக்கு மக்களிடம் எடுபடப் போவதில்லை.


மறுபக்கத்தில்ää ஏகாதிபத்திய சக்திகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை , நிதிக்கொள்கை,  நிர்வாக நடைமுறை உட்பட நாட்டின் கட்டமைப்புகளில் அரசு பாரிய மாற்றங்களைச் செய்து வருகிறது. எப்படி 1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன (இன்றைய பிரதமர்  ரணிலின் மாமனார்) திறந்த பொருளாதாரக்
கொள்கையை உருவாக்கி இன்றுவரை அதை மாற்ற முடியாமல் வைத்திருக்கிறாரோää அதேபோன்ற நடவடிக்கைகளில் இன்றையஅரசும் இறங்கியுள்ளது.

அரசின் இந்தவிதமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் வைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. அதாவது,  அவர்கள் ஓய்வு காலத்தில் நிதி பெறுவதற்காக உருவாக்கிய ஊழியர் சேபலாப நிதி (நுஅpடழலநந’ள Pசழஎனைநவெ குரனெ –நுPகு)இ ஊழியர் நம்பிக்கை நிதியம் (நுஅpடழலநந’ள வுசரளவ குரனெ – நுவுகு)
என்பனவற்றில் கை வைக்க அரசு முயற்சிக்கின்றது. இலங்கையில் அரச சேவையில்
உள்ளவர்களுக்கு மட்டுமே அரசாங்க ஓய்வூதியம் உண்டு. அதனால்தான் “கோழி மேய்த்தாலும் கோண்மேந்திலை (அரசாங்கத்திலை) மேய்க்க வேண்டும்”என்ற சொல்லடை  கூட உருவானது.

தனியார்துறை,  கூட்டுத்தாபனங்கள், சபைகள், பெருந்தோட்டத்துறை, வங்கிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் பணி புரிபவர்களுக்கு அரச ஓய்வூதியம் கிடையாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் ஓய்வுபெறும் போது அவர்களது சம்பளத்தில் இருந்தும், தொழில் வழங்குநரின் நிதி செலுத்துகையிலிருந்தும் நுPகுஃநுவுகு
என்பனவற்றுக்கு மாதாமாதம் செலுத்தப்படும் பணத்தின் மொத்தத் திரட்சி ஒருதொகைப் பணமாக இறுதிக் காலத்தில் வழங்கப்படுவது வழமை.

இந்தப் பணம் ஒவ்வொரு ஊழியரதும் தனிப்பட்ட பெயரில் மத்திய வங்கியில் வைக்கப்பட்டிருக்கும். தற்போது இரு நிதியங்களினதும் மொத்தத் தொகையான 1700 கோடி (1.7 வுசடைடழைn) ரூபா மத்திய வங்கியில் உள்ளது. அந்தப் பணத்தை எடுத்து இரு நிதியங்களையும் ஒன்றாக்கி, தேசிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நிதியை மத்திய வங்கியிடமிருந்து எடுத்து
தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான
அபாய அறிவிப்பை 2015 நொவம்பர் 5ஆம் திகதி தற்போதைய அரசாங்கத்தின் இடைக்காலப் பொருளாதாரக் கொள்கை சம்பந்தமான அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டு வைத்துப் பேசும்போது பிரதமர் ரணில் விக்கிமசிங்க வெளியிட்டார்.

இந்தத் திட்டம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும்,  அவர்களது பணத்தைச் சூறையாடும்,  பகற்கொள்ளைத் திட்டமாகும். இதன் மூலம் தனிப்பட்ட முதலாளிகளின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பணத்தைக் கைமாற்றிக் கொடுப்பதற்கு இன்றைய தொழிலாளர் விரோதää தரகு முதலாளித்துவ அரசாங்கம் முயற்சிக்கின்றது.
தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதானால் , அதை அரசாங்கம் தனது பணத்தில் வழங்கட்டும். சோசலிச நாடுகளிலும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலு, ஒரு
குறிப்பிட்ட வயதை அடைந்த முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும்
திட்டம் அமுலில் இருக்கின்றது. அப்படி இலங்கை அரசும் செய்யட்டும். அதைவிடுத்து, “வழியில் தேங்காயை எடுத்து தெருவில் பிள்ளையாருக்கு அடித்த” கதையாக" தொழிலாளர்களின் பணத்தைப் பறித்து அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் உருவாக்குவது
என்பது ஒரு பெரும் மோசடியாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் எப்பொழுதும் தொழிலாளி வர்க்கத்தினதும், பொதுமக்களினதும் வயிற்றில் அடிப்பது ஒரு வழமையாக இருந்து வருகிறது. ஆனால் இம்முறை ‘தேசிய அரசாங்கம்’ என்ற போர்வையில் ஐ.தே.கவும், சிறீலங்கா சுதந்திரக்
கட்சியின் ஒரு பிரிவும் சேர்ந்து அமைத்த அரசில் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கை அரங்கேற்றப்படுகிறது. ஐ.தே.கவின் இந்த தொழிலாள விரோத நடவடிக்கைக்கு சிறீ.ல.சு.கட்சி  ஒத்துழைப்பது, அக்கட்சி தொழிலாளி வர்க்கத்துக்குச் செய்யும் துரோகமாகும்.
ஏனெனில் 1948இல் சுதந்திரம் பெற்ற பின்னர்,1956 வரை பதவியில் இருந்த ஐ.தே.க. அரசுகள் எதுவும் தொழிலாளி வர்க்கத்துக்கு எவ்விதமான நன்மையையும் செய்யாதது மட்டுமின்றி, அவர்களை அடக்கியொடுக்கி, சுரண்டிச் சூறையாடியும் வந்ததுதான் வரலாறு.

1956இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் மக்கள் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவரது அரசாங்கமே இடதுசாரி கட்சிகள்
நீண்டகாலமாக முன்வைத்து வந்த கோரிக்கைளை ஏற்றுää தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை,  8 மணி நேர வேலை, வேலை உத்தரவாதம். சம்பள நிர்ணய சபை மூலம் அடிப்படைச் சம்பள நிர்ணயம்ää பெண்களுக்கு பிரசவ விடுமுறை, காப்புறுதித் திட்டம், மேதினத்துக்கும் விசேட நாட்களுக்கும்
விடுமுறை, தொழில் பிணக்குகளைத் தீர்க்க தனியான தொழில் நீதிமன்றம் என்பனவற்றுடன் ஊழியர் சேபலாப நிதி,ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அந்த உரிமைகளிலேயே இன்றைய தொழிலாளர் விரோத அரசு கைவைக்கத் தீர்மானித்துள்ளது. அதற்கு பண்டாரநாயக்கவால் உருவாக்கப்பட்ட சிறீ.ல.சு.கட்சியின் ஒரு பிரிவினரும் -அவரது மகள் சந்திரிக குமாரதுங்க உட்பட – ஆதரவளிக்க முன்வந்திருப்பதுää
தொழிலாள வர்க்கத்துக்கு மட்டுமின்றி பண்டாரநாயக்கவுக்கும் செய்யும்
துரோகமாகும்.


எனவே  இந்தத் தொழிலாளர் விரோத நடவடிக்கையை எதிர்த்து முறியடித்து, அவர்களது உரிமையைப் பாதுகாப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தின அனைத்துப் பிரிவுகளும், இன மத மொழி பேதமின்றி. அரசியல் தொழிற்சங்க பேதமின்றி ஓரணியில் திரண்டு நின்றுää தமது புரட்சிகர வர்க்க உணர்வை வெளிப்படுத்த வேண்டும். தொழிலாளி வர்க்கத்துக்கு இழப்பதற்கு
எதுவுமில்லை. ஆனால் வெல்வதற்கு எவ்வளவோ தேவைகளும் விடயங்களும்
இருக்கின்றன.

நன்றி : வானவில்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...