Thursday, 5 November 2015

பிரபாகரன் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம்”


வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது. அத்துடன்  முன்னாள் அமGotabaya-Rைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்று முன்னாள் பாதுகாப் புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனு டன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எனக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.புலித்தேவன் மட்டுமன்றி பிரபாகரன் கூட சரணடைந்திருந்தால் மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் விசாரணை அறிக்கை ஒரு பக்கச் சார்பானது. படையினர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை .
புலம்பெயர் தமிழ் சமூகமே யுத்த வெற்றியினால் அதிருப்தி கொண்டுள்ளது . ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை ஓர் பிழையான செயலாகும்இ இதன் ஊடாக நாடு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.

அண்மையில் இலங்கைக்கு ஜப்பான் வழக்குரைஞர் ஒருவர் விஜயம் செய்திருந்தார். உள்நாட்டு நீதவான்கள் விசாரணைகளில் பங்கேற்க மறுத்தால் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான பொது மக்கள் உயிர்ச் சேத விபரங்கள் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் வழங்கிய புள்ளி விபரத் தகவல்கள் மற்றும் பரணகம அறிக்கை ஆகியனவற்றை சர்வதேச சமூகம் நிராகரித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 5000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன்இ 25000 த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது அல்லது புதிய சட்டங்களை அமுல்படுத்துவதும் குறித்து தற்போதைய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.

யுத்த நிறைவின் போது 5000 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நானங பதவியை விட்டு ஓய்வு பெற்றுக்கொண்ட போது அந்த எண்ணிக்கை 270 ஆக குறைவடைந்திருந்தது.

கடுமையான பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களை உருவாக்கவில்லை.கருணா கூட 2005 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே புலிகளிடமிருந்து பிளவடைந்து செயற்பட்டனர்.இ துணை இராணுவக் குழுக்களுக்கு முன்னைய அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது.

வெள்ளைவான் கடத்தல்களில் எனக்கு தொடர்பு கிடையாது. 1986 – 1989 ஆம் ஆண்டுகளில் பல வர்ண வேன்களில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் தெற்கில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றை அமைச்சர் மேர்வின் சில்வா மறந்து விட்டு கருத்து வெளியிட்டு வருகின்றார்.தமிழீழ விடுதலைப் புலிகளே லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்தனர். நாமே அந்த விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிக்கொணர்ந்தோம்.
Source: http://www.thenee.com/041115/041115-1/041115-2/041115-2.html

No comments:

Post a Comment

Wheeler Dealer Muslim Politicians and Helpless and Voiceless Muslim Community By Latheef Farook

The island’s Muslim community continues to suffer from political and religious leadership crisis .Unless the civil society come forward ...