ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலண்டன் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.

ஜனாதிபதி  மகிந்த  ராஜபக்க்ஷவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலண்டன் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.

கியூபாவில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் வழியில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபகஷவும்  அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவும் இலண்டனில் இலங்கைத் தமிழ் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.கடந்த செப்டெம்பர் மாதம் 24ம்திகதி சனிக்கிழமை இலண்டனில் உள்ள இலங்கை உயர்  ஸ்தானிகராலயத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.தமிழ் முஸ்லிம் அரசியல்  கட்சிகளினதும் மனித உரிமை , ஜனநாயக அமைப்புக்களினதும் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்தனர்.




இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி  மங்கயற்கரசி  அமிர்தலிங்கம்   , அவரது மகன் வைத்திய கலாநிதி பகீரதன், மற்றும் வைத்திய கலாநிதி பாலா , மற்றும் வைத்திய கலாநிதி நிக்கலஸ்பிள்ளை, தமிழர் ஜனநாயக காங்கிரஸ் தலைவர் திரு ஜெயதேவன் , விவேகானந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி பிரமுகர் சதீஸ்குமார்,இலண்டனிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் நடுவத்தின் இயக்குனர் சட்டத்தரணி பஷீர் ஆகியோரும் மற்றும் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதானமாக இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் குரல்கள கேட்க வேண்டிய தேவையின் முக்கியத்துவத்தை ஜனாதிபதிக்கு வற்புறுத்தினார்.ஈ.பீ.டீ .பீ  கட்சியின் அமைப்பாளர் அசோக், (சந்திரகுமார்) ரமேஷ் வினோத், மனோ,  திலிப், ஆகியோரும் புளொட் , ஈ.பீ ஆர் .எல்.எப் (பத்மநாபா அணி ) டெலோ, எனப்ப பல கட்சிப் பிரதிநிதிகள்  , பத்திரிக்கையாளர்கள், சமாதான செயற்பாட்டாளர்கள் , சமூக சேவையாளர்கள்,பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இச்சந்திப்பில்  கலந்து கொண்ட அனைவருமே தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதினை வலியுறுத்தினர்.குறிப்பாக திரு ஜெயதேவன் அவர்கள் 13வது திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டு மாகாண சபை நிர்வாகம் தற்காலிமாக இயங்க வாய்ப்புண்டா அல்லது நிரந்தர சமதானத்திற்கான தீர்வினை வழங்கும் அரசியல் தீர்வை தாமதியாது அரசு கொண்டு வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழர் சமாதான மன்றம் சார்பில் ஒரு அறிக்கையை கலாநிதி பாலா வாசித்து அதனை  ஜனாதிபதியிடம்  சேர்பித்தார். அவ்வறிக்கையில் அடிமட்டத்திலிருந்து ஜனாதிபதியாயிருக்கும் மகிந்த ராஜபக்ஸ தமிழ் பேசும் மக்களினது மட்டுமல்ல , சகல சாமான்ய மக்களின் துயரங்களைப் புரிந்திருக்க வேண்டும் என்றும் ,  ஏனைய  ஜனாதிபதிகள் போலல்லாது உளசுத்தியுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வினை கொண்டு வர வேண்டும் என்றும் , இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடனும்   கவுரவுத்துடனுமே வாழ விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது .

ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் நடுவத்தின்   சார்பில் பேசிய சட்டத்தரணி திரு,பஷீர் , முஸ்லிம்களைப் பாதித்த பொத்துவில் சம்பவம் குறித்து அரச படைகள் மீதான குற்றச்சாட்டினை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் மக்களைப் பாதுகாக்கவேண்டிய கடமையில் இருந்து அரசு தவறவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு  உரியதென்று குறிப்பிட்டார் .

பலரின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி , சர்வ கட்சி   மாநாட்டின் தீர்வினை தன நம்பியிருப்பதாகவும் , தனது தலையீடின்றி சர்வ கட்சி மாநாடு எட்டுகின்ற தீர்வினை மக்கள் முன் சமர்ப்பித்து ஆணை பெறவிருப்பதாகவும், தெற்கிலே ஒருமைப்பாடு காணாவிடின் எந்தத் தீர்வினையும் அமுல் படுத்துவது கடினம் என்று குறிப்பிட்டார்.

இச்  சந்திப்பு வெறுமனே பிரமுகர்களின் சந்திப்பாக அமையாமல் இனப் பிரச்சினைக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வு தொடர்பாக புலம் பெயர் தமிழ் பேசும்  மக்கள் கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...