ஜனாதிபதித்தேர்தலும் புலிகளின் வன்முறைகளும் - தமிழரசன் (24.11.05) -ஒரு மீள்வாசிப்பிற்காக !

ஜனாதிபதித்தேர்தலும் புலிகளின் வன்முறைகளும்

தமிழரசன் 24.11.05 


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். தமிழர்களும் முஸ்லீம்களும் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தரவர்க்கமும் இவருக்கு வாக்களிக்கவில்லை. தொழிலாளர்களும் விவசாயிகளும் ஏழைக்கிராமமக்களும் மகிந்தராஜபக்ஷாவை  ஜனாதிபதி யாகியுள்ளனர்.  ராஜபக்ஷ தன்னைச் சோசலிசவாதி என்றும் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோருக்குரியவர் என்றும் காட்டமுயன்றார். இடதுசாரிகளின் அணியில் நின்றார். ஜே.வி.பியின் ஆதரவு இருந்தது. அவர் ஒருசமயம் தொழிற்சங்கவாதியாக இருந்தவர் அவரை நாம் இனவாதி என்று சொல்ல ஆதாரமும் இல்லை. ஆனால் அவர் இடதுசாரியில் அவர் தத்துவரீதியிலான வேர்களில் இருந்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. உலகமயமாகும் பொருளாதார நிகழ்வுப்போக்குகள் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கங்களின் எதிர்வினைவாக அவர் தன்னைக்காட்டினார். மேற்குலக நாடுகளது அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்புக்கெ திரான ஆசிய நாடுகளின் பங்குகோரலை அவரும் இணைந்து வெளியிட்டார். தனது தேர்தல் வெற்றியின் பின்பு நடாத்திய உரையில் தனது ஆசியா சார்ந்த பெருமையுணர்வால் வெளியிட்டனர். மகிந்த ராஜபக்ஷாவின் வெற்றி இலங்கை மென்மேலும் ஆசிய நிலமைகளை ஊக்குவிக்கும் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளும் நோர்வேயினதும் இலங்கை மேலான இராஜதந்திரப் பிடிகள் பலவீனமடையும். நோர்வேயின் தலையீடல் கிட்டத்தட்ட நிறுத்தப்படுமென்றும் நாம் நம்பலாம்.



தேர்தலில் ஐ.தே.கட்சி கூட்டு வெளிப்படையான உண்மையாக இருந்தபோது ஐ.தே.கட்சியின் இணர்டு முக்கியத்தலைவர்கள் தமது கட்சியே புலிகளை உடைத்தாக செய்தியை வெளியிட்டமையால் புலிகட்கு நேரடியாக ஐ.தே.கட்சியை ஆதரிப்பது சரணடைவாக இருந்தது. எனினும் கிறிஸ்தவப் பாதிரிகள் புலிகளின் அங்கீகாரத்துடனும் மேற்குலக கிறிஸ்தவ உலகு சார்ந்தவர்களின் விருப்பத்துடனும் ஐ.தே.கட்சியை ஆதரிக்கத்தக்க அறிக்கைகளை தமிழ்மக்களுக்கு வெளியிட்டனர். மலையகத்தில் சந்திரசேகன், த.தே.கூட்டமைப்பு எம்.பி.மாரில் ஒரு பிரிவும் ஐ.தே.கட்சியுடனான வர்க்க காதலுணர்வுகளை மறைக்க முயற்சிக்கவில்லை. தமிழ்மக்களில் பெரும் பகுதி புலிப்பாசிசத்தை வெறுத்தபோதும் பழைய தமிழரசுக்கால அரசியற் தொடர்ச்சிகளில இருந்து வெளியேறவில்லை. அரசியலைத் தொடர்புபடுத்தவில்லை. முக்கியமாக தமிழ்ஊடகங்கள் ஐ.தே.கட்சி மேலான அபிமானத்தை தொடர்ந்து வளர்த்து இருந்தன. பழைய அரசியல் போக்கை உடைக்கவில்லை. மாற்று அரசியலை முன்வைக்க வழியிருக்கவில்லை.  வளர்ந்துவந்த ஆசியா சார்ந்து பொருளியல்போக்குகள் சமூகத்தில் தீவிரமாய் செயற்படத்தொடங்கியபோதும் பழைய மேற்குலகின் சார்பு போக்கை தகர்த்தெறியும் வலிமை பெறவில்லை. இந்த நிலமைகள் ஐ.தே.கட்சிக்கும் மலையகத்தின் பிற்போக்கான அமைப்புகட்கும் உதவியாய் இருந்தன.

புலிகளும் த.தே.கூட்டமைப்பும் மக்கள் விரும்பினால் வாக்களிக்கட்டும். நாம் அதைத் தடைசெய்யமாட்டோம் என்று முதலில் தெரிவித்தபோதும் பின்பு ஐ.தே.கட்சியின் சில பிரிவுகள் புலிஎதிர்ப்பை வெளியிட்டவுடன் தேர்தல் சிங்களத்தேசத்துக்கானது அதையிட்டு நாம் அக்கறைப்படத்தேவையில்லை. நாம் அதைப்பகிஸ்பரிக்கவேண்டும் என்றார். அத்தோடு தமிழ்மக்களின் உணர்வை சர்வதேசத்துக்கு காட்டவேண்டும் என்ற குரல்களும் இதனுடன் இணைந்து கேட்டன. தமிழ்ஈழம், தனிநாடு, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று அடுக்குத் தொடர் அரசியல் பேசிவந்த பலிகள் தமிழ்மக்கள் இந்த தனித்திருக்கும் முயற்சிகளை விட்டு .இலங்கை தழுவிய அரசியலுக்கு தம் பேச்சையும் மீறிச்சென்று விடுவர் என்ற பயத்தையும் கொண்டிருந்தனர். எனவேதான் புலிகள் கடந்த தேர்தலில் பகிஸ்கரிப்பு கோரிக்கைகளையும் உதறிவிட்டு செல்லாதிருக்க குழப்பங்கள் விளைவித்தனர். குண்டு எறிதல், வாக்களிப்பு நிலையங்களைத்தாக்குதல், வாக்களிக்னகச் சென்ற மக்களை தாக்கித்துரத்துதல், டயர் எரிப்பு, போக்குவரத்துகளைத் தடைசெய்தல் இறுதியாக இது முஸ்லீம் மக்கள் மேலான கொலையுடன் முடிவடைந்துள்ளது. வடக்கில் வாக்களிப்கு 0.5வீதமாக இருக்க தமிழ்மக்கள:; கொழும்பு, கிழக்குமாகாணம், மன்னார், வவுனியா, மலையகம் போன்ற பகுதிகளில் வாக்களித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் மக்களை வீடுகளில் முடக்கி விட்டபோதும் மற்றைய இவர்கள் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளனர். தமிழ்த்தேசம் - சிங்களத்தேசம் என்ற புலிகளின் கருத்தியல்களைத் தாண்டிப்பயணித்துள்ளனர். ஏக இலங்கை அரசியல் தீர்வுகளைத் தேடமுயல்கின்றனர். இவை புலியரசிலிருந்து வெளியேறும் தமிழ்மக்களின் முயற்சியாகும். தமிழ்ஊடகப் பயங்கரவாதிகள் புலிகட்கு மாற்றான சுதந்திர ஜனநாயக செயற்பாடுகளையும் தொழிலாளர் அமைப்புக்களையும் இல்லாதொழிப்பதற்கு தம் பங்கைச் செய்தனர். தமிழ்த்தேசிய வெறிய+ட்டுதலும் இடைவிடாத சிங்களப்பேரினவாதம் பற்றிய புலம்பலும் தமிழ்மக்களை இலங்கையரசியலில் கலப்பதைத் தடைசெய்யவில்லை.

புலிகளின் இந்நாள் பேச்சாளரும் முன்னாள் ஈழவருமான பாலகுமார் புதிய ஜனாதிபதியின் தெரிவுபற்றிக் கூறுகையில் ராஜபக்ஷ 1956ஆண்டுச்சமமான அரசியலையே கொண்டுள்ளதாயும் இந்தக்காலம்தான் பிரபாகரனைத் தோற்றுவித்தாயும் இப்போதைய ஜனாதிபதியின் வெற்றி பிரபாகரனின் வெற்றியாகப்போகிறது எனக்கூறியுள்ளார். பிரபாகரன் இன்றைய ஆசியப்பொருளாதார வளர்ச்சிச் சுனாமி முன்பு காணாமல் போய்விடுவார். கடந்த சுனாமியுடன் தேசியத்தலைவரைத் தேடுபவர்கள் தொகை அதிகரித்து விட்டது. பிரபாகரன் வெற்றி கொண்ட காலங்கள் இனிவரப்போவதில்லை. மீண்டும் திரும்பபோவதில்லை. நோர்வே அரசினால் நிதி, ஆயுதம், அரசியல் வழங்கப்பட்டு வழிகாட்டப்படும் அமைப்பாகும். தமிழ்த்துரோகம் பற்றிச் சத்தமிடும் தீவிர தமிழினவாதிகள் புலிகள் ஆசிய விரோத நிலைக்கும் மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள்ளும் சென்று விட்டதை உணரவில்லை. ஆனால் ஆசிய வளர்ச்சி என்பது உலகச் சந்தைக்குள் புகுந்து மேற்கு நாடுகளையே அடிபணியும்படி கேட்கும் போது இந்த சின்ன நுள்ளான் புலிகள் ஆசியப்பொருளாதாரத்துக்கு முன்பு கலந்து கரையும் போக்கிலிருந்து தப்பிப்போக முடியாது. ஆசியா வளர வளர மேற்குலகின் ஆசிய மேலான பிடியும் தளரத் தொடங்கும். .இங்கு பிரபாகரனின் 800கிராம் சின்ன மூளையைத் தாங்கும் உடலானது சூரிய ஒளியும் தூயகாற்றும், வெப்பமும் புகமுடியாத பாதாள அறையுள் அஞ்சியொடுங்குவதைத்தவிர வேறெதையும் நிகழ்த்த முடியாது.

ராஜபக்ஷ இது வரையிலான நோர்வேயின் புலித்தரகர் உத்தியோகத்தில் இருந்து அவர்களை வெளியேற்றும் நிலையே ஏற்படும். ஜே.வி.பி முதல் கருணா வரை நோர்வேக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளமையும் ஒரு ஆசியக்கண்காணிப்புக்குழு ஒன்றை இலங்கைக்கு பெறுவது பற்றியும் ஆலோசனை கூறப்பட்டு வருகின்றன. தமிழ்த்தேசியவாதிகளும் புலிகளும் கடந்த ஆண்டுகளில் ஆசியா உலகின் தீர்மானமான சக்தியாய் லத்தீன், அமெரிக்க நாடுகளான பிரேசில், வெனின்சுலா, கிய+பா உட்பட பல நாடகள் இணைந்து வளர்வதையும் தன்னாதிக்கமுள்ள சக்தியாய் மாறுவதையும் காணுமளவு புத்தியடைந்தவர்களாக இல்லை. வடகொரியா, பர்மா, ஈரான், கிய+பா, வெனின்சுலா போன்ற நாடுகள் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளது இராணுவ பொருளாதார அச்சுறுத்தல்களைத் துணிவோடு எதிர்ப்பதின் பின்புலம் ஆசிய வளர்ச்சி சார்ந்த பலமாகும். அரபுநாடுகளும் முஸ்லீம் மக்களும் மேற்குலகின் அரபு முஸ்லீம் எதிர்ப்பு எண்ணை வளங்களை மேலான சூறையாடல்களை எதிர்த்து மெல்ல மெல்ல ஆசியப்பொருளாதார இயக்கத்துடன் இணையும் போக்கு ஏற்பட்டு விட்டதை இனி நிறுத்த முடியாது. ரஷ்யா ஆசியநாடுகளான சீனா இந்தியாவுடன் பொருளாதார இராணுவ உறவுகளைப் பலப்படுத்தியுள்ளமையும்; தொழிற:சார்ந்த ஒத்துழைப்புகட்கு மாறிச்செல்வதும் சாதாரண நிகழ்வுகளல்ல. ஆசியா பொருளாதாரரீதியாக வளரும்போது அதைத் தொடர்ந்து இராணுவபலமும் உலக ஆதிக்கமும் வளரும். இந்து சமுத்திரக்கடற்பகுதிகள் உட்பட ஆசியக்கடற்பரப்புக்களில் இவர்கள் தீவிரமான அதிகாரம் பெறுவர்.

இக்கட்டத்தில் புலிகளின் தாய்லாந்து முதல் இத்தாலி வரையிலான மாபியா செயற்பாடுகளும் கப்பல் போக்குவரத்துகளும் கடந்தகாலம் போய் செயற்படமுடியாது இந்திய, சீனா, ஜப்பானிய கடற்படைகள் தம்பிராந்தியத்தின் கடலாதிக்கம் கடல்சார்ந்த வளங்கட்குக்கான முயற்சிகள் கட்டாயமாக நிகழும். இந்தியா ஆசிய நாடுகளுடன:; இணைந்து கடற்பரப்பைக்கண்காணிக்கப் போவதான செய்திகளும் உலகின் பெருங்கடற்பயணப் பிரதேசமாக அமையப்போகும். சேதுகால்வாய் திட்டப்பகுதிகளும் வலிமை குன்றிவரும் புலிகட்கு பாதகமான விடயங்களாகவே இருக்கும். புலிகள் தமிழ்த்தேசியக்குறுங்குழுவாதிகள் அவர்கட்கு இலங்கையிலோ இந்தியாவிலோ ஆசியப் பிராந்தியத்திலோ எங்கும் போராடும் புரட்சிகர அமைப்புக்களோடு மக்கள் இயக்கங்களோடு தொடர்பு கிடையாது. புலிகள் உலக அளவில் மாபியா அமைப்புக்களோடும் இந்தியாவில: கடத்தல் சக்திகளோடும் இலங்கையின் கொழும்பின் பாதாள உலகக் கோஷ்டிகளோடும் தொடர்புள்ள ஒரு மாபியா இயக்கமாகும். எனவே புலிகள் ஆசியாவில் தனிமைப்படுவது ஒத்திவைக்க முடியாத விடயமாகும்.

அண்மையில் புலிகளின் கப்பலில் ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்தும் முயற்சிகளை தாய்லாந்து அரசு கண்டுபிடித்து ஆட்களையும், கப்பல்களையும், கப்பல் ஊழியர்களையும் பிடித்துள்ளது. நீண்டகாலம் புலிகள் தாய்லாந்தில் சட்விரோமாக செல்லப்பிள்ளைகளாக இயங்கியவர்கள். தாய்லாந்து வியட்நாம் யுத்தம் முதல் தீவிர அமெரிக்க ஆதரவு நாடாகும். இப்போது புலிகள் இங்கு ஒடுக்கப்படுவது இதுவரை இல்லாதமுறையில் கட்டுப்படுத்தப் படுவது ஆசியப்பொதுவளர்ச்சி அதன் பாதுகாப்பு என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். 50வருடமாக பகை நாடுகளாக இருந்த வடகொரியாவும் தென் கொரியாவும் அமெரிக்க எதிர்ப்பையும் மீறி தனி சமாதான உடன்படிக்கைக்குச் செல்லவுள்ளன. அமெரிக்க இது தனக்கு தெரியாமல் நடைபெறுவதாய் பகிரங்கமாக வருத்தப்படுகின்றது. தாய்வான், திபேத், கிழக்குதிமோர், பர்மாவின் எதிரணிகள் ஆசியாவின்  பொதுப்போக்குக்கு கட்டுப்படுவதை எதிர்காலம் எமக்குக் காட்டும். புலிகள் இந்தியதுணைக்கண்டத்தில் மிகமுக்கியமான மேற்குலக கைக்கூலி அமைப்பாகும் நோர்வேயின் விசுவாசத்திற்கு கட்டுப்பட்டவர்களாகும். இலங்கையில் சமாதானம் ஆபத்தில் உள்ளதாய் நோர்வே கூறியுள்ளது. நோர்வேயை ராஜபக்ஷ இலங்கையிலிருந்து வெளியேற்றும் சாத்தியம் உள்ளதாலேயே இந்த அலறல் நோர்வேயிட மிருந்து வெளிப்பட்டுள்ளது. நோர்வே வெளியேற்றப்பட்டால் இராஜதந்திர நடவடிக்கைகள் முழுமையாக சரி இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கும். புலிகள் ஊடாக இதை நோர்வே செய்ய முயலும்.

புலிகள் யுத்தத்திற்கு போகமாட்டார்கள். ஆனால் எல்லைப்படுத்தப்பட்ட வகையில் சிறு இராணுவ நடவடிக்கைகளில் தற்போதை விட அதிகமாக ஈடுபடுவார்கள். இலங்கையின் அமைதியின்மையையும் சமூகச்சச்சரவுகளையும் தமிழ் முஸ்லீம், சிங்கள இன முரண்பாடுகளையும் அணைய விடாமல் தடுக்கமுயல்வார்கள். இலங்கையில் புலிகளின் பயங்கரவாதம் நடைபெறும்வரை முழுமையான முதலீடுகள், தொழில்துறையின் நவீன கட்டுமானம்கள் நிச்சயமற்ற தன்மையிலே இருக்கும். எனவே புலிகளை கட்டுப்படுத்த ஆசிய நாடுகளின் கூட்டுமுயற்சிகள் இருக்கும் புலிகளை ஒடுக்கும் இலங்கை அரசு முன்னெப்பொழுது மில்லாத ஆசிய ஆதரவைப் பெறும். புலிகளின் ஆயுதநடவடிக்கைகளை அரசு நீண்டகாலத்திற்கு தற்பாதுகாப்பு நிலையில் மட்டும் இருக்க அனுமதிக்காது. மக்கள் போரை விரும்பாதபோதும் புலியின் நடவடிக்கைகள் போரை நோக்கியே தள்ளும் மேற்குலக மேய்ப்பர்களதும கட்டளைக்காகவும் தன் சொந்த இராணுவப் பலத்தை நிருபிக்கவும் புலிகள் இராணுவ செயற்பாடுகளை கைவிடமாட்டார்கள். எனவே முடிவு எத்தகையதாய் இருக்கும். புலிகளை அழிக்கும் சூழலபை; புலிகளே உருவாக்குவார்கள். புலிகள் கடந்தகாலத்தில் நடாத்திய நீண்டயுத்தங்கட்கு எதிர்காலத்தில் இடமிருக்காது. அதற்கான மக்கள் மற்றும் சர்வதேச நிலமைகள் இன்று இல்லை. இந்தியா, சீனா என்பன புலிகளை ஒடுக்க உதவுவார்கள். சீன செம்படையினர் இலங்கை இராணுவத்துக்கு விசேட பயிற்சிகளை தந்துள்ளனர் என்று செய்திகள் வந்துள்ளன.

அமெரிக்காவுடனும் மேற்கு நாடுகளுடனும் அரபு, மற்றும் முஸ்லீம் மக்கள் தீராத கோபம் கொண்டுள்ளனர். இந்த நிலையும் அந்த மக்களின் எண்ணை, வாயு உட்பட பெருமளவு மூலவளங்களோடு ஆசிய பக்கம் வரத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அக்கரைப்பற்று முஸ்லீம்மக்களை புலிகள் கொலை செய்துள்ளனர். நீண்ட காலப்போர், சுனாமி அழிவுகள், புலிப்பயங்கரவாதத்திற்கு ஆட்பட்ட முஸ்லீம்மக்கள் மீண்டும் புலிப்பயங்கரவாதத்தால் இரை கொள்ளப்படுவது ஏதோ நினையாப் பிரகாரமாக தற்செயலாக நடைபெறுவதல்ல. ஐரோப்பாவில் பாரிஸ் நகரில் சமூகத்துன்பங்களைத் தாங்காது கிளாச்சி செய்த ஆபிரிக்க அரபு இளைஞர்கள், ஐரோப்பிய ஊடகங்களால் ஐpகாத் தலைமுறை என்று வர்ணிக்கப்பட்டது. கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு எதிராக ஒரு முஸ்லீம் ஐரோப்பாவுக்கான என்று வடிவமைப்புக்கள் இடம்பெற்றன. ஐரோப்பாவில் 'இன்டியாதா'  ஐரோப்பியஅராபியம் (நுரசழ யுசயடி) என்றெல்லாம் வகை வகையான முஸ்லீம் அரபுக்கட்டுரைகள் எதிராகத் தீட்டப்பட்டன. இந்த சமயத்தில்தான் இலங்கை மண்ணில் புலிக் கொலையாளிகள் முஸ்லீம்மக்களை அக்கரைப்பற்றில் இணர்டாம் முறையாக பள்ளிவாசலில் வைத்துக் கொன்றுள்ளார்கள்.

புலிகள் ஐரோப்பிய நாடுகளில் தடை என்பது அவர்களது உள்நாட்டுப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதும் ஆயுத அமைப்பு என்ற வகையில் எச்சரிக்கை உணர்வு கொண்டதுமான நடவடிக்கை மட்டுமே.  கடந்த இரணடு பத்து வருடங்களாக ஜெர்;மனிய ஊடகங்கள் புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என்றே குறிப்பிட்டு வந்தன. இப்போ அந்த அடைமொழியை பேருவின் ஒளிரும் பாதைக்கோ தலிபான்களைக் குறிக்கவேதான் பாவிக்கிறார்கள். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் பற்றி ஜெர்மனிய தொலைக்காட்சிகளான யுசுனு முதல் யுசுவுநு வரை ரணில் சமாதானத்திற்கு சார்பானவர் புலிகளுடன் சமாதானத்தை கொண்டு வந்தவர். திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர், மேற்குலக ஜனநாயகத்துடன் உறவு கொண்டவர் என்ற விபரிப்புக்களையே செய்தன. ராஜபக்ஷ, சிங்கள தேசியவாதி, இடதுசாரிப்போக்குடையவர், இடதுசாரி அமைப்பான ஜே.வி.பியுடுன் உடன்பாடு கொண்டார். யுத்தத்திற்குசாதகமானவர் என்ற வர்ணனைகள் ஊடகங்களில் வெளியாயின. ஜெர்மனியின் வலதுசாரிச் சஞ்சிகையான ஸ்பீகல் 26.-2005 இதழ் விக்கிரமசிங்கா சமாதானத்தைக் கொண்டுவரக்கூடியவர், ராஜபக்ஷ சிங்களத்தேசியவாதி என்றதுடன் ஐரோப்பியக் கூட்டமைப்புடன் தேர்தல் கண்காணிப்புக்குழுத்தலைவர் துழாn ஊயளா  வடக்கு கிழக்கில் தேர்தல் காலத்தில் வன்முறைகள் ஏற்படும் என்று கூறியதையும் குறிப்பிட்டு எழுதியிருந்தது. தேர்தல் காலத்தில் வன்முறைகளில் பலிகள் ஈடுபடுவார்கள் என்று இவர்கட்கு எப்படித்தெரியும்.?. 5வருடம் முன்பு தமிழ்ப்பயங்கரவாதம் பற்றி எழுதிய மேற்கு ஊடகங்கள் இப்போ இலங்கையில் உள்ள சிங்களத்தேசியம் பற்றிய தமது கவலையை ஆரம்பித்துள்ளன. அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகை தமிழ்ச்செல்வனின் பேட்டியை வெளியிட்டதுடன் ஐ.தே.கட்சி புலிகள் இவர்கட்கு ஆதரவாய் எழுதியதுடன் புலிகள் ஒரு தனிநாட்டை உருவாக்கி விட்டனர். ஆனால் ராஜபக்சாவோ ஒற்றையாட்சிக்குள் தீர்வுகளைத் தேடமுனைகிறார் என்று குற்றம் சொல்லி எழுதியது.

இந்த ஊடகங்களுக்குள் புகலிட நாடகளில் தம்மை நடுநிலமை ஊடகங்கள் என நம்பக்கேட்டும் வெக்டோன், தீபம் பொன்ற தொலைக்காட்சிகள் தேர்தல் காலத்தில் எப்படி நடந்து கொண்டன என்று காண்பது முக்கியமானது. வெக்டோன் புலிச்செய்திகளை ஒரு மில்லிக்கிராமும் நிறைகுறையாமல் வாசிக்க நடுநிலைத் தீபம் தொலைக்காட்சியும் அதைப் பணிவோடு தொடர்ந்தது. இரண்டு தொலைக்காட்சிகளும் தமிழ்த்தேசிய வெறி, சினிமா போன்றவற்றை மூலதனமாகக் கொண்டவை என்ற போதிலும் புலிகளை அனுசரிப்பதில் புலிப்பாசிசத்தை சேதப்படுத்திவிடாத அரசியல் பேசுவதில் விண்ணர்களாகும். இலங்கையின் தமிழ் ஊடகப்பொய்யர்களின் ‚இனந்தெரியாதவர்களை’ இனங்காட்ட மறுப்பவர்களாவர். இவர்கட்கு உலகமட்டம் மனித மட்டத்தில் ஊடக நெறிகளைப்பேண முடியாதவர்கள். புகலிட நாடுகளில் கூடப் புலிகட்கு அஞ்சியொடுங்கி சுவாசம் விட்டுக்கொண்டிருப்பவர்கள். தீபம் தொலைக்காட்சி தேர்தல் சமயத்தில் வீரகேசரிப்பத்திரிகையைச் சேர்ந்த ப+வரசன் என்ற புலிஜீவியைக் கண்டுபிடித்து இருந்தது. அவர் சிங்களப்பேரினவாதம், சுயநிர்ணய உரிமை, தமிழ்மக்கள் தேர்தல் பகிஷ்கரிப்பு என்று பலிகளை வாசி வாசி என்று தீபத்தில் தோன்றி வாசித்தார். பகிஸ்கரிப்பு மூலம் தமிழ்மக்கள் சர்வதேச சமூகத்திற்கு சிங்கள இனவாதத்தை நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் கடந்தகாலத்தில் புலிகளின் பிரச்சாரக் கழிவுகளை தேடி ஒன்று குவித்தார்.

சிங்களத்தலைவர்களைத் தெரிவு செய்ய வெண்டிய அவசியம் தமிழ்மக்களுக்கு இல்லை என்று சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் இருந்து அரசியல் உறுதி எடுத்த ப+வரசன் இப்போ கொழும்புத்தமிழ் மறவர்கள் ஐ.தே.கட்சிக்கு வாக்களித்திருப:பதை எவ்வாறு தனது கொள்கை பிசகாமல் வாசிப்பச் செய்வார் என்று புலப்படவில்லை. வீரகேசரி, தினக்குரல், சுடரொளி என்று சகல கொழும்புத் தமிழ் ஊடகங்களும் புலிகட்காக வாதிடுபவர்களாகும். இவர்களை ஊடகவியலாளர் என்ற பதத்துடன் அடக்க முடியாது. சமூகத்தின் மனசாட்சியாக ஆதிக்க சக்திகளின் பிரகடனப்படுத்தப்பட்ட எதிரிகளாகவே உண்மையான, ஊடகவியலாளர் கள் இருப்பர். ஆனால் ப+வரசன் போன்றவர்களோ கூலி ஊடகவியலாளர்கள், மக்கள் விரோத எழுத்துக்குரியவர்கள், புலி ஆதாயத்திற்காக எழுதுபவர்கள். புலி மரணிக்கும்போது மரண விசாரணைக்கு கூட நிற்காமல் தப்பிதமாக மறைவாகப்போகிறவர்கள். ஆனால் புலிப்பாசிசத்தின் அழிவின் பின்பான வரலாற்று விசாரணையில் இருந்து இவர்கள் தப்பியோடிவிட முடியாது

மூலம் : தேனி

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...