"யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் அல்ல கிழக்கு மாகாணம்"- எம்.ஆர் ஸ்டாலின்


"இறுதியில் முஸ்லிம்களது கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில்  போப்ரல் அமைப்பு தனது ஜிகாத் பற்றிய கருத்து புலிகளது ஊடகங்களால் திரிக்கப்பட்டு விட்டதாகவும் , எப்படியிருந்தபோதும் தனது கருத்தை வாபஸ் (.....) பெறுவதாகவும் கூறிக் கொண்டது.அதன் பின்னர் ஜிஹாத் பற்றிய கூக்குரல் இட்ட அதிகமான புலிகளின் ஊடகங்கள் தமது வால்களைச் சுருட்டிக் கொண்டன.  


இதே போன்றுதான் லண்டனில் வாழ்ந்துவரும் மனித உரிமைப் பணியாளனான  பஸீர் என்பவர் பற்றி நிதர்சனம் மிகவும் மோசமான முறையில் அவரை ஒரு அல்கைதா பயங்கரவாதி என்று அவரது புகைப்படம் ஒன்றினையும் பிரசுரித்து 09 டிசம்பர் 2005 அன்று செய்தி வெளியிட்டிருந்தது . இவர் லண்டனில் இருந்து இயங்க்குகின்ற முஸ்லிம் தகவல்  நடுவகம் எனும் அமைப்பினை செயற்படுத்தி வருபவர். தனது சொந்த வாழ்வில் ஒரு கண்ணியமான வக்கீலாக கடமை புரிந்து வரும் இவர் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஆவணங்களைச் சேகரித்து வருகின்றார் . வானொலிகளிலும் கூட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்காக ஓங்கி குரல் கொடுத்து வருகின்ற இவரது பணிகளை முடக்கவேண்டும்  என்பதுதான் புலிகளது முக்கிய நோக்கமாக உள்ளது.எனவேதான் புலிகளது இணையத்தளமான நிதர்சனம் இவரை ஒரு  அல்கைதா பயங்கரவாதியாக உருவகித்து குற்றம் சுமத்தியுள்ளது. .இந்த கொச்சைத்தனமான  குற்றச்சாட்டுக்களுக்கு தமது வன்மையான கண்டனங்களை  தெரிவிக்க வேண்டிய கடப்பாடுடையவர்களாக உள்ளோம் .

"யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் அல்ல கிழக்கு மாகாணம்"- எம்.ஆர் ஸ்டாலின்

மூலம் : மற்றது  2 (2006)

No comments:

Post a Comment

தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா-– இணைப்பேராசிரியர் சோம்தீப் சென் (Somdeep Sen)

Home கண்ணோட்டம் தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா அக்டோபர் 1, 2022 இ ந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் ...