‘அரகலயா’வின் நிகழ்ச்சி நிரல் இன்னும் முற்றுப்பெறவில்லை


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்று கடந்த மார்ச் மாதம் காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ‘அரகலயா’ (யுசயபயடயலய - போராட்டம் என்று பொருள்), ஜுலை 14ந ; திகதி கோட்டபாய பதவியைத் துறந்த பின்னரும் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. ‘அரகலயா’வின் நோக்கம் வெறுமனே தற்போதைய
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதோடு நின்றுவிடாது, தாங்கள்
அதிகாரத்திற்கும் வரவேண்டுமென்பதாகவே இருக்க முடியும்.


 

ஆனால் அவர்களின் ஆர்ப்பாட்டம், தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசொன்றினை நிறுவுவதிலேயே கொண்டு வந்து விட்டிருக்கின்றது. அதனால் தாங்கள் அதிகாரத்திற்கு வரும் வரை ‘அரகலயா’வைக் கைவிடமாட்டார்கள் போல் தெரிகிறது. ‘அரகலயா’வில் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக்கட்சி உட்பட பலவிதமான
குழுக்கள் இணைந்துள்ளதாகத் தெரிகின்றது. ஜே.வி.பிக்கு
பாராளுமன்றத்தில் மூன்று ஆசனங்கள் மாத்திரமே உள்ளன.
எனவே தற்போதைய நிலையில் ‘அரகலயா’ சார்பில் ஜே.வி.பி
அதிகாரத்திற்கு வர முடியாது. ஆகவே புதிய தேர்தலொன்றினை
நடத்தக்கோரி அவர்கள் போரட வேண்டித் தள்ளப்படலாம். புதிய
தேர்தலொன்றின் முடிவுகள் அவர்களை அரியாசனத்தில்
ஏற்றப்போவதில்லை என்பதை இப்போதே திட்டவட்டமாகக் கூற
முடியும். அப்படியானால் ‘அரகலயா’வின் முடிவு எப்படியாக
அமையப்போகின்றது?


ஜுலை 21ந ; திகதி புதிய ஜனாதிபதியாப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அன்றிரவே காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜுலை 22ந திகதி அதிகாலையில் பாதுகாப்பு படையினர் வன்முறையைப் பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்துள்ளனர்.
கோட்டபாயவினால் கூட செய்ய முடியாமல் போன காரியத்தை, ரணிலால் எப்படி துணிந்து செய்ய முடிந்ததென்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. எனினும் இந்த நடவடிக்கையைக் கண்டித்தவர்கள், அமெரிக்கத் தூதரகம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மாத்திரமே என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதேவேளையில்
இலங்கை கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் தலைவர் டியு குணசேகரா, இலங்கை அமெரிக்கத் தூதரகத்திற்கு தெரியாமல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்திருக்க வாய்ப்பில்லையென்று தெரிவித்திருக்கிறார்.


சீனாவின் ‘கடன்பொறி’யே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமென்று மேற்கத்தைய ஊடகங்கள் நீண்டகாலமாக கூறிவருகின்றன. கடந்த நான்கு மாதகாலமாக ஊNNஇ டீடீஊஇ யுட துயுணுநுநுசுயு போன்ற உலகின் பிரமாண்டமான கோர்ப்பரேட் ஊடகங்களிலிருந்து சிறிய ஊடகங்கள் வரை, இலங்கையின் பொருளாதார, அரசியல் நெருக்கடி பற்றிய செய்திகளை நாளாந்தம் தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகின்றன. 


இந்த ஊடகங்கள் சீனாவின் கடன்பொறியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்ததெனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளன. எனினும், இலங்கைக்கு வெளியே உள்ள சில ஊடகவியலாளர்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் ‘அரகலயா’வின் பின்னணி பற்றி அலசி ஆராயத் தொடங்கியுள்ளார்கள். இவர்களில் சேணாலி வடுகே, பிரைன் பேர்ல்ரிக், பென் நோர்ட்டன் (ளுரநயெடi
றுயனரபநஇ டீசயைn டீநசடவiஉஇ டீநn ழேசவழn) போன்றவர்கள் மிகவும்
முக்கியமானவர்கள். அமெரிக்காவின் நிதியுதவி வழங்கும் நிறுவனங்களான ருளுயுஐனுஇ Nநுனு (யேவழையெட நுனெழறஅநவெ கழச னுநஅழஉசயஉல) போன்றன உலகின் பல நாடுகளில் ஆர்பாட்டங்கள் மூலமாக அரசைக் கவிழ்ப்பதற்கு பணங்களை வாரியிறைத்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இலங்கையிலும் நீண்டகாலமாகவே தமது கைங்கரியங்களை  நிறைவேற்றுவதில் குறியாக இருந்து வருவதாக ஆதாரங்களுடன் சேணாலி வடுகே கட்டுரையொன்றில் விரிவாக எழுதியுள்ளார்.


இலங்கைக்கான கடனில் சீனாவின் பங்கு 10 வீதம் மாத்திரமே, அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களிடமிருந்தே 50 வீதமளவிலான பிணைமுறிக் கடன்களை இலங்கை வாங்கியுள்ளது, எனவே சீனாவின் ‘கடன்பொறி’யில் இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதென கூறுவது முற்றிலும் தவறென பிரைன் பேர்ல்ரிக்கும் பென் நோர்ட்டனும் தெரிவித்துள்ளார்கள். மேலும் பிரைன் பேர்ல்ரிக், ‘அரகலயா’வின் பின்னணியில்
அமெரிக்காவின் கரங்கள் பதிந்திருப்பதாக, ஜுலை 12ந ; திகதி ரோய்ட்டர் செய்தியொன்றை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.


‘அரகலயா’வின் முன்னணி செயற்பாட்டாளர்களாகக் கருதப்படும் ‘ரட்டா’ என அழைக்கப்படும் ரத்திது சேனாரத்ன, திலான் சேனாநாயக்க மற்றும் அவிஷ்க விராஜ் கோனார ஆகியோரின் வங்கிக்கணக்குகளில் வெளிநாடுகளிலிருந்து 45 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதென்ற செய்தியொன்று ஜுலை 18ந ; திகதி இலங்கையின் பல ஊடகங்களில் வெளிவந்தது. அச்செய்தியில், ‘பணம் வைப்பிலிடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே மூவரும் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளனர். பணம் வைப்பிலிடப்பட்டு சில மணிநேரங்களுக்குப் பின்னர், வங்கிக்கு வந்த மூவரும் முழுத் தொகையையும் மீளப் பெற்றதாகவும், பணத்தைப் பெற்றதற்கான காரணத்தை விசாரித்த வங்கி அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்’ என மேலும் கூறப்பட்டுள்ளது. ‘அரகலயா’விற்கு பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டு வருகின்றது. 

இந்தப்பணம் எங்கிருந்து வருகின்றதென்ற கேள்வி சாதாரணமாக எழுவது தவிர்க்க முடியாதது. அதேபோன்று இலங்கையின் புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சங் (துரடநை ஊரரபெ) கடந்த பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டதும், குறுகிய காலத்தில் அவரின் நாடு தழுவிய சந்திப்புகளும், அறிக்கைகளும்
கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள். இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை, இலங்கையர்களை விட அந்நியர்களே அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. 


Editorial: vaanavil 139 July 2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...