பிரித்தானியாவின் பொருளாதாரம் சரிவடைகிறது


2023 ஆம் ஆண்டில் பிரிட்டனின் 2023 பொருளாதாரம் சரிவடையும் என்று
ஆய்வொன்றில் கிடைத்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த
புள்ளிவிபரத்தை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (ழுசபயnளையவழைn கழச நுஉழழெஅiஉ ஊழழிநசயவழைn யனெ னுநஎநடழிஅநவெ - ழுநுஊனு) வெளியிட்டிருக்கிறது. கொரோனா
பெருந்தொற்றிலிருந்து பிரிட்டன் மீண்டு வந்து கொண்டிருந்தது. அந்த மீட்சியைக் காலி செய்யும் வகையில் தற்போதைய நிகழ்வுகள் உள்ளன என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. பிரிட்டன் மட்டுமல்ல, பல்வேறு நாடுகள் மோசமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்று எச்சரிக்கிறார்கள்.
 

2021 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களை வெளியிட்டே வருங்காலம் எப்படி இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில் பிரிட்டனை விட, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படப் போகின்றன. ஜப்பான்தான் பெரும் அடி வாங்கப் போகிறது. இருந்தாலும், 2023 ஆம் ஆண்டில் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியே இருக்காது என்று கணித்துள்ளனர். அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் வளர்ச்சி 1.6 விழுக்காடாக இருக்கும்.


சிறப்பு நடவடிக்கை என்று ரஷ்யாவால் அழைக்கப்படும் உக்ரைன் மீதான
தாக்குதல்களுக்கு எதிராகத் தடைகளைப் போடுவதற்கான வேலைகளை
பிரிட்டன்தான் முன்நின்று பார்த்துக் கொண்டது. ரஷ்யாவின் எரிவாயு மற்றும்
எண்ணெய் வளத்தை குறைந்த அளவே பிரிட்டன் நம்பியிருப்பதால், ரஷ்யாவை
தனிமைப்படுத்த வேண்டும் என்று பலத்த குரலில் கோரி வருகிறது. ஆனால், உலகம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்பு பிரிட்டனை விட்டுவைக்கவில்லை. மேலும், வரலாறு காணாத பணவீக்கத்தை நோக்கி பிரிட்டன் பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது.


இது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின்
பொதுச் செயலாளரான மத்தியாஸ் கோர்மன் (ஆயவாயைள ஊழசஅயnn) கூறுகையில், ‘உலகம் முழுவதும் பண்டங்களின் விலைகள் கடுமையாக எகிறியுள்ளன. இதனால் பணீவீக்கம் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகிறது. வருமானம் மற்றும் செலவினம் ஆகிய இரண்டிற்கும் ஏராளமான தடைக்கற்கள்
போடப்படுகின்றன. இது மீட்சியைத் தாமதப்படுத்துகிறது’ என்றார். உணவு
தானிய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் உக்ரைன், தனது இருப்பை
ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அதுவும்
விலையேற்றத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.


பெரும் போராட்டங்களுக்குத் தயாராகிறது பிரித்தானியா கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி கொரோனா, உக்ரைன் நெருக்கடி மற்றும் அமெரிக்காவின் தூண்டுதல்கள் ஆகியவற்றால் கடுமையான பணவீக்கத்தைச் சந்தித்து வரும்
பிரிட்டனில் பெரும் போராட்டங்களுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள்
தயாராகி வருகிறார்கள். மக்கள் சந்திப்பு, தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் என்று பல்வேறு வழிகளில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கருத்துக்களை சேகரித்து வந்தது. நெருக்கடி பற்றி மக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றியும், அடுத்த கட்டமாக எத்தகைய வழிகளைக் கையாள வேண்டும் என்றும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, அக்கட்சியின் அரசியல் குழுவின் கூட்டமும் கூடி
விவாதித்திருக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அண்டி பெய்ன்
(யுனெல டீயin) அறிக்கையொன்றை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கினார்.
தனது உரையின் தொடக்கத்திலேயே வலதுசாரி அரசு மற்றும் பெரு
நிறுவனங்களின் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அண்மைக்காலத்தில் தொழிற்சங்கங்கள் வெளியிட்ட
அறிக்கைகளை வரவேற்றுப் பேசினார். அனைத்துப் பகுதி தொழிற்சங்கங்களும்
ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளதாக அவர்
சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய அவர், “விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.


ஆட்சியில் உள்ளவர்களோ புதிய சட்டங்கள் மூலமாக மக்களைப் பிரித்து
போராட்டங்களை மட்டுப்படுத்த முயல்கின்றார்கள். அவர்களுக்குள்ளும்
முரண்பாடுகள் உள்ளன. போரிஸ் ஜான்சன் இனிமேலும் நமக்கு உதவுவாரா என்று அவர்களுக்குள் விவாதிக்கிறார்கள், மோதிக் கொள்கிறார்கள். ஆனால்
தங்களுக்கு எதிராக சவால் விடும் தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து
கொள்கிறார்கள்” என்றார். “தொழிற்சங்கங்கள், மக்கள் பேரவைகள்,
தொழிலாளர் கட்சியின் அமைப்புகள், பெண்கள் மற்றும் ஓய்வு+தியர் பிரச்சாரங்கள், சுகாதார மற்றும் வீட்டுவசதிப் போராளிகள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை நாங்கள் திரட்ட வேண்டும்.
இந்தப் போராட்டங்கள் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் நீடிக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்” என்று மேலும் அண்டி பெய்ன் கூறினார.

Source: vaanavil 138 July 2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...