அமெரிக்கவாழ் இந்தியரான ஒரு பெண்மணியின் அழுகுரல்
மெரிக்காவில் கோவிட் டெஸ்ட்டுக்கு ரூ 3.5 லட்சம், சிகிச்சைக்கு ரூ 16 லட்சம் வரை தேவை. இதிலிருந்து ஒரு விசயத்தை மட்டும் நான் கூறுவேன், ‘நமது பொதுக்கல்வி, நமது பொது சுகாதார பராமரிப்பு முறை இதையெல்லாம் நமது கண்ணின் மணிபோல் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த நாடு எனக்கு கற்றுத்தந்த மிகப்பெரிய பாடம் என அமெரிக்கவாழ் மலையாளியான மீனா டி பிள்ளை தெரிவித்துள்ளார். குரல் தழுதழுக்க அவர் பேசுவது சமூக வலை தளத்தில் அனைவரையும் கண்கலங்கச் செய்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: இங்கு அமெரிக்காவில் நாம் காய்ச்சலிலும் இருமலிலும் எவ்வளவு சுகவீனம் அடைந்தபோதிலும் மருத்துவமனையை தொடர்பு கொண்டால் அவர்கள் கூறுவது நீங்கள் இங்கு வரவேண்டாம் கோவிட்டுக்கு மருந்து இல்லை. நீங்கள் வீட்டில் இருந்து கைகளை கழுவுங்கள்., மற்றுமுள்ள கிருமி நாசினி வழிமுறைகளை பினபற்றுங்கள்.


இங்கே வந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டால் மட்டும் இங்கே வந்தால் போதும்  என்கிறார்கள். பெரும்பான்மையான சாதாரண அமெரிக்க குடிமகன்கள் முடிந்த வரை மருத்துவமனைக்குச் செல்ல மாட்டார்கள். காரணம் மருத்துக் காப்பீடு இருந்தாலும் ஒரு பகுதி தொகையை நம்மிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்..சரியாக சொல்வதென்றால் இங்குள்ள சுகாதாரம்- நல்வாழ்வு என்பதே காப்பீட்டு நிறுவனங்களின் குத்தகையில்- அவர்களது கையில்தான் உள்ளது. பிரபல நட்சத்திரங்கள், கால்பந்தாட்ட வீரர்கள் போன்றவர்கள் தங்களுக்கு கோவிட் பாதிப்பு உண்டா இல்லையா என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் சாதாரண அமெரிக்கர்களால் அப்படி அறிந்துகொள்ள முடியாது.
காரணம், கோவிட் சோதனைக்கு இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று முதல் மூன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். இந்த தொகையை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் சுகவீனம் ஏற்பட்டாலும் வெளியே கூறாமல் இருந்து விடுகிறார்கள். வெளியே தெரிந்து மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தால் கட்டணத்தை எப்படி செலுத்துவது என்பதற்கான வழி தெரியாமல் வீட்டிலேயே இருந்து விடுகிறார்கள். இதனால்தான் நோய் பரவுகிறது. அச்சமூட்டும் அளவுக்கு நிலைமை கைமீறிச் செல்வது நோயுடன் மக்கள் நடமாவடுதால்தான். சோதனை செய்வதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இங்கு இல்லை. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம் என்றால், சர்வ சாதாரணமாக பத்து முதல் பதினாறு லட்சம் ரூபாய் வரை தயார் செய்தாக வேண்டும். இங்கு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு அதிகபட்ச கட்டணம் செலுத்த வேண்டும்.
இது சாதாரண மனிதனால் தாங்கும் அளவிலான கட்டணம் அல்ல. இப்படி ஒரு மோசமான சுகாதார கட்டமைப்பு கொண்ட நாட்டையே நாம் வளர்ந்த நாடு என்கிறோம். வளர்ச்சிக்கான அளவுகோல் என்ன என்பதை எவ்வளவுதான் சிந்தித்தாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு விசயத்தை மட்டும் நான் கூறுவேன், ‘நமது பொதுக்கல்வி, நமது பொது சுகாதார பராமரிப்பு முறை இதையெல்லாம் நமது கண்ணின் மணிபோல் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த நாடு எனக்கு கற்றுத்தந்த மிகப்பெரிய பாடம் என கூறியுள்ளார்
Image may contain: 1 person, text

Source: Chakkaram.com

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...