இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளங்களும் கிம்பளங்களும்!

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சிகள் சார்பாகவும்
தனிநபர்களாகவும் பலர் போட்டியிடுவதைப் பார்த்திருக்கிறோம். இப்படியானவர்களை அதற்கான காரணத்தைக் கேட்டால்
நாட்டுக்காக, இனத்துக்காக, மொழிக்காக, மதத்துக்காக எனப் பல்வேறு காரணங்களை அள்ளி வீசுவார்கள். உண்மை அதுவல்ல.நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளமும் வரப்பிரசாதங்களுமே அதற்குக் காரணம்.

இதோ அவர்கள் மாதாந்தம் பெறும் சம்பளமும் இதர சலுகைகளும் பற்றிய
விபரங்கள்: இலங்கை ரூபாவில் -

சம்பளம்: 54,475
வாகனங்களுக்கான எரிபொருள்: 30,000
போக்குவரத்து செலவுக்கு: 10,000
பொழுதுபோக்கு செலவுக்கு: 10,000
கைத்தொலைபேசி: 2,000
ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்திலும்
பங்கேற்பதற்கு: 500
மின்சாரம்: இலவசம்
வீட்டுத் தொலைபேசி: இலவசம்
முதலாம் வகுப்பு புகையிரதப் பயணம்:
இலவசம்
விமானப்பயணம் உறுப்பினர் உட்பட
இருவருக்கு: 40 இலவசம்
இவைதவிர, ஒரு செயலாளர், வாகனம்,
விடுதி, கணினிகள், பாதுகாப்பு
உத்தியேகத்தர்கள் என்பன இலவசம்.

தவிர, தீர்வையற்ற வாகன இறக்குமதி, தொகுதி அபிவிருத்திக்கென
கோடிக்கணக்கான பண ஒதுக்கீடு, மதுபான கடைகளுக்கும் மற்றும் சிலவற்றுக்கும் அனுமதி பெற்றுக்கொடுப்பதால் கிடைக்கும்
கமிசன், இராஜதந்திர கடவுச்சீட்டில் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்
வசதிகள், உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு,
இப்படியாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஏராளமான சலுகைகள் உண்டு.

எதுவித கல்வித் தகைமையும் இல்லாவிடினும், பண பலத்தாலும் ஆள் பலத்தாலும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துவிட முடியும்.
இப்படி இவர்கள் வந்து மாதாந்தம் இலட்சக்கணக்கில் ‘உழைக்கையில்’
பல்கலைக்கழகம் வரை சென்று படித்த ஒரு பட்டதாரி ஆசிரியர் பெறும் மாதாந்த சம்பளம் வெறும் 30,000 ரூபா மட்டுமே! இப்பொழுது தெரிகிறதல்லவா ஏன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு
வருவதற்காக மக்களின் கைகால்களைப் பிடித்தும் வீராவேசமான பேச்சுகளை நிகழ்த்தியும் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்று. ஆனால் இவர்களுக்கு வாக்களித்து அரியாசனம் ஏற்றும் அப்பாவி (சோணகிரி)
மக்களுக்கு கிடைப்பது?
நன்றி: வானவில் இதழ் 101 மார்ச் 2020

No comments:

Post a Comment

UK Health Secretary “wilfully negligent” for ignoring warnings that pandemic is overwhelming National Health Service- by Tony Robson

In his Downing Street press briefing Wednesday, Conservative Health Secretary Sajid Javid dismissed warnings made by health professionals th...