அமெரிக்க தூதரகத்துடன் ஆலோசனைகள் நடத்தியது ஐ.தே.க. அரசு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!!



முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் கொழும்பிலுள்ள
அமெரிக்க தூதராலயத்துடன் இலங்கை சம்பந்தமான பல விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக முன்னாள் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க கூறியிருக்கிறார். அவர் மேலும்
கூறுகையில்: பல்வேறு சந்தர்ப்பங்களில் துருக்கி அரசாங்கம் தமது நாட்டில் செயல்பட்டு வரும் FETO  என அழைக்கப்படும் GULEN பயங்கரவாத இயக்கம் பற்றி இலங்கையை எச்சரித்திருந்த போதிலும்,
அந்த இயக்கம் பற்றி விசாரணை நடத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை
எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறுிகையில், தான் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த
காலத்தில், துருக்கி அரசாங்கம் அளித்த தகவல் பற்றி என்ன நடவடிக்கை
எடுப்பது என தாம் அப்போதைய வெளிவிவகார அமைச்சு செயலாளர்
பிரசாத் காரியவாசத்திடம் வினவியதாகவும், அதற்கு அவர், இலங்கை பல்வேறு நாடுகளுடனும் சமமான உறவுகளைப் பேணி வருவதாகவும், அமெரிக்கா. FETO இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதவில்லை என்று பதிலளித்தாகவும் கூறியுள்ளார்.




2019 ஏப்ரல் 21இல் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இஸ்லாமிய பயங்கரவாத நபர்கள் சிலரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் பற்றி ஆராயும் ஜனாதிபதி
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கையிலேயே முன்னாள்
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இத்தகவல்களை
வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அங்கு மேலும் கூறியதாவது:
குநுவுழு இயக்கத்துடன் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள
அமைச்சர்கள் தொடர்பு வைத்திருந்ததை தான் அறிந்திருந்ததாகவும், அதில்
ஒருவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், துருக்கி தூதுவரும், அரசாங்கமும் தந்த
தகவல்கள் குறித்து தான் ஜனாதிபதியின் செயலாளருக்கும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவுக்கும் இரண்டு கடிதங்களை அனுப்பி வைத்ததாகச் சொன்னார். ஆணைக்குழு முன் சாட்சியமளித்த
வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பிராந்தியத்துக்கான
பொதுப்பணிப்பாளர் சிறியானி தம்மிக்க குமாரி சேமசிங்க கூறுகையில், குநுவுழு இயக்கம் சம்பந்தமாக துருக்கி அரசாங்கம் அளித்த தகவலின்
அடிப்படையில் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ள இலங்கையர்கள்
பற்றி இலங்கை அரச புலனாய்வுத் பிரினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை
பாதுகாப்பு அமைச்சின் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்தது.
அந்த அறிக்கையின்படி அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், காபிர் காசிம் ஆகியோர் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதன் காரணமாகவே அதுபற்றி விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை
எனத்தான் ஊகிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இதில்
அமைச்சர்கள் சமபந்தப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க
வேண்டாமென வெளிவிவகார அமைச்சு செயலாளர் காரியவாகத்துக்கு
தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.



Source: vaanavil 101

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...