வைரஸ் நெருக்கடிக்குள் உலகம்-வானவில்

கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று, இருநூறுக்கு கொ
மேற்பட்ட நாடுகளில் பரவி, உலகெங்கிலும் நாளுக்கு நாள்
மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் இந்த
இதழில் (வானவில் 111) கொரோனா பற்றிய கட்டுரைகளும்
செய்திகளுமே அதிகம் வெளியாகியுள்ளன. இது தவிர்க்க
முடியாததும் கூட. உலகமே கொரோனா வைரஸைக் கண்டு
நடுநடுங்கிப் போயுள்ள நிலையில், எமது இந்த இதழின்
பிரதிபலிப்பும் கொரோனா வைரஸ் பற்றியதாகவே இருக்க
முடியும்.

முழுமையாக உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான்
வைரஸ் எனப்படுகின்றது. பொதுவாக உயிரினங்களுக்கு
டி.என்.ஏ (D.N.A) இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது
டி.என்.ஏயின் அரைகுறை வடிவமான RNA  புரதம் (Protein)
மற்றும் கொழுப்பு சேர்ந்த உறையினுள் அந்த சுNயு
இருக்கும். அந்த உறையின் (alcohol  கொண்டசனிரைசரின்
துளிகள் அல்லது சவக்கார நுரை பட்டால் இந்த உறை
எளிதில் கரைந்து போய்விடும்) மேற்பரப்பில் துருத்திக்
கொண்டு ஆங்காங்கே முட்களைக் கொண்டதுதான்
கொரோனா வைரஸ். புரதத்தாலான இந்த முட்களின் வேலை
எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்வதே. கொரோனா வைரசில்
இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரிடத்தில் (உசழறn) இருக்கும்
வேலைப்பாடு போல இருப்பதாலேயே இந்த வைரஸ்
கொரோனா வைரஸ் என அழைக்கப்படுகின்றது.கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த
இதுவரை எந்தவித தடுப்பு மருந்தும் கண்டு
பிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் ஏறத்தாள 70
ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட போதிலும்,
மனிதர்களிடத்தில் பரவியிருப்பது முதன்முதலாக கடந்த
வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணத்தைச்
சேர்ந்த வு+கான் நகரில் கண்டு பிடிக்கப்பட்டது. இதன்
பின்னரே இதற்கான தடுப்பு மருந்து தயாரிப்பு தொடர்பான
ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கைகளை சனிரைசர் (sanitiser ) அல்லது சவக்காரத்தால்
கழுவி எப்போதும் சுத்தமாக வைத்திருத்தல், வாய்ப்பகுதியை
மூகமூடியால் மூடிக்கொள்ளுதல், இருமும்போதும்
தும்மும்போதும் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை
மூடிக்கொள்ளுதல், ஒருவருடன் குறைந்தது ஒன்றரை
மீற்றர் தூரத்தில் விலகி இருத்தல், சமூக முடக்கம்,
தனிமைப்படுத்தல் போன்ற பரிந்துரைகள் கொரோனா வைரஸ்
பரவாமலிருக்க வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய புள்ளிவிபரங்களின்படி தொற்றுக்குள்ளான 100
பேரில் குறைந்தது 5 பேராவது இறந்து விடுகிறார்கள் என்ற
நிலைமையே உள்ளது. உலக அளவில்கொரோனா வைரஸ்
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில்
அமெரிக்கா முதலிடத்தை வகிக்கின்றது. ஆனால்
உயிரிழப்பில் இத்தாலி முதல் இடத்திலும் ஸ்பெயின்
இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனினும் உலகில்
அமெரிக்கா உட்பட பல நாடுகள் இதுவரையில் கொரோனா
தொற்று தங்கள் நாட்டில் உச்சத்தைத் (Corona peak )
தொடவில்லையென்றே கூறுகின்றன. அமெரிக்காவில் பல
மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டு, இரண்டு இலட்சம்
பேராவது இறக்க நேரிடலாமென அமெரிக்க மருத்துவ
நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பல நாடுகளில் மருத்துவர்களும் தாதிகளும் இரவு பகலாக
கொரோனா நோயாளிகளின் உயிர்களைக் காக்க போராடி
வருகிறார்கள். தீவிர சிகிச்சைப்பிரிவில் (iவெநளெiஎந உயசந ரnவை)
அனுமதிக்கப்பட வேண்டியவர்களுக்கேற்ப போதிய தீவிர
சிகிச்சைக்குரிய படுக்கைகளில்லாத நிலைமை பல நாடுகளில்
எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வயதில்
முதிர்ந்தவர்களையும் உடல் நலம் சரியில்லாதவர்களையுமே
அதிகம் தாக்குகின்றது. நோயாளிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் பல மடங்காகப் பெருகி வருவதால்,
வயதானவர்களைக் கைவிட்டு இளவயதினரையே காப்பாற்ற
வேண்டுமென்ற நிலைமையே உலகெங்கிலும் படிப்படியாக
உருவாகி வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இலங்கை,
இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்குச்சட்டம் அமுலில்
உள்ளன. அதேபோல விமானம், கடல் மற்றும் தரைவழியான
போக்குவரத்துகளைக் கட்டுப்படுத்தியோ அல்லது முற்றாக
நிறுத்தியோ தங்கள் நாட்டின் எல்லைகள் ஊடாக தொற்று
பரவாமலிருக்கு முன்னேற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
சிறிய – நடுத்தர – பெரிய உணவகங்கள், விடுதிகள்,
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்
மூடப்பட்டிருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள்
வேலைகளை இழந்தும் வருமானமின்றியும் தவிக்கிறார்கள்.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் போலன்றி, வறிய
நாடுகளால் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமூக
உதவிப்பணம் வழங்க முடியாது. பாடசாலைகளும் கல்வி
நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் கல்வி
வளர்ச்சியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதி முடிக்கையிலுள்ள
(ஏப்ரல் 4ந் திகதி) நிலவரப்படி, உலகம் முழுவதும் 11
இலட்சத்து 88 ஆயிரத்து 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64
ஆயிரத்து 103 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். ஆனால்
இந்த எண்ணிக்கைகள் மருத்துவமனைகளில் மாத்திரம்
பரிசோதிக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்டது.
அதாவது இந்த எண்ணிக்கைகள் நோய்த்தொற்றுக்கு
உள்ளானவர்களின் எண்ணிக்கைகளில் ஒரு பகுதி
மட்டும்தான். ஏனெனில் மருத்துவமனைக்கு கொண்டு
வரப்படாமல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும்
இறந்தவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு கொரோனா
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின், இறந்தவர்களின் கணக்கு
எவரிடமும் இல்லையென்றே கூறப்படுகின்றது.

மருத்துவமனைகளுக்கு அப்பால் எவருக்கும் நோய்த்
தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூடத்
தெரியவில்லை. எனவே தொற்றுக்குள்ளானவர்களாகக் கண்டு
பிடிக்கப்பட்டவர்களும், தொற்றுக்குள்ளானார்களாவென
இதுவரையில் பரிசோதிக்காதவர்களும், தங்களைத் தாங்களே
தனிமைப்படுத்துவதே, இந்த கொடிய நோயிலிருந்து
தப்பிப்பதற்கு ஒரேயொரு வழி.

Source: vaanavil 101

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...