-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal) By Raj Selvapathi




மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கொமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 பயங்கரவாதிகளின் உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன்.




ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என பலரும் கூறினார்கள். மிக அருகில் சென்று ஆராய்ந்ததில் முகத்தோற்றம், உடல்வாகு என்பன பிரபாகரன் போன்றிருந்தாலும் அது அவரது உடல் இல்லை என உணர்ந்து கொண்டேன். எங்களுடன் இருந்த சில புலிகள் இயக்க உறுப்பினர்களை அழைத்துவந்து அந்த உடல் யாருடையது என கண்டறியுமாறு அறிவுறுத்தினேன். அவர்கள் உடனடியாகவே அது ”மாதவன் மாஸ்டருடையது என கூறினார்கள்” அதன்பின் வரிசையில் அடுக்கப்பட்டுள்ள ஏனைய உடல்களையும் அடையாளம் காணுமாறு அவர்களை கூறினேன். அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன். வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள். புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர். அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு மொண்டேன்.

”சேர், எமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது எமது கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது” என உடனடியாகவே அவருக்கு கூறினேன். சில நொடிகள் அமைதியாக இருந்த அவர் “ பிரபாகரன் எங்கே?” எனக்கேட்டார்.” சேர், பிரபாகர்ன், பொட்டு அம்மான்,சூசை ஆகியோரை தவிர ஏனைய மூத்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களின் உடல்கள் இங்கே என்னிடம் இருக்கின்றது” என பதிலளித்தேன். ”பிரபாகரன் இறக்கவில்லை என்றால் போரும் முடிந்து விடவில்லை” என இராணுவத்தளபதி எனக்கு திருப்பிக்கூறினார்.

அவர் சரியாகத்தான் கூறுகின்றார் என நானும் ஏற்றுக்கொண்டேன். புலனாய்வு அமைப்புக்கள் உட்பட யாருக்குமே பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என தெரிந்திருக்கவில்லை. அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கலாம். அல்லது எங்கோ இன்னும் பதுங்கி இருக்கின்றார். எப்படியென்றாலும் பிரபாகரன் மரணமடையாமல் இந்த நாட்டில் அமைதி ஏற்படபோவதில்லை. “ சேர் இந்த பகுதி முழுவதுமே எனது படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது இன்று இரவும் தொடர்ந்து தாக்குதலை நடாத்திவிட்டு நாளை காலையில் மற்றுமொரு தேடுதலை தொடர்கின்றோம். இப்போது அந்த சதுப்பு நில பற்றைக்காடுகளுக்கு இருள தொடங்கிவிட்டது” என அவருக்கு பதிலளித்தேன்.

போர் இறுதியாக முடிவுக்கு வந்து விட்டதது என்கின்ற நினைப்பில் ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டிருந்தது. கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கிவிட்டனர். தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக்கொண்டிருந்தனர். மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள். ஒவ்வொரு அழைப்பும் ” பிரபாகரன் எங்கே?” என்கின்ற கேளவியுடனேயே முடிந்தது. ” எங்களுக்கு தெரியவில்லை” என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது.


 பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரை செய்யக்கூடியதாக இருந்தது. எனினும் எனது உறக்கம் “பிரபாகரன் எங்கே?” என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது. வார்த்தைகளால் விபரிக்க முடியாத துயரங்களை ஏற்படுத்திய, பல்லாயிரக்கணக்கான இந்நாட்டு மக்களின் சாவுக்கு காரணமான கொலைகாரன் பிரபாகரனின் பெரும் பலமாகவும் தூணகளாகவும் இருந்த அனைவருமே இன்று கொல்லப்பட்டுவிட்டனர். ஆனால் அவர்களுக்கு கட்டளையிட்டு கொலை செய்வதற்கும் குற்றங்கள் புரியவும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த அவர்களின் தலைவன் பிரபாகரன் இன்னும் இருக்கின்றார். அவருடைய கொலைதிட்டத்துக்கு வடிவம் கொடுத்தது ஈழக்கனவுக்கு ஊகம் கொடுத்த பொட்டு அம்மானும், சூசையும் கூட இன்னும் சுதந்திரமாக இருக்கின்றனர். அப்படியென்றால் இன்று சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் கொண்டாட்டங்களின் ஈடுபடும் அந்த மக்களின் மக்களின் மகிழ்ச்சி எவ்வளவு காலத்துக்கு நீடிக்க போகின்றது? அவர்களால் எப்படி அமைதியாக வாழமுடியும்? ஒருவேளை சந்தர்ப்பம் கிடைத்து பிரபாகரன் மீளவும் போரை தொடக்கிவிட்டால் “ நீங்கள் போரை முழுமையாக முடிக்கவில்லை” என இந்த மக்கள் எங்களை நோக்கி விரலை நீட்டுவார்களே? அப்படி நடந்தால் அவர்களை என்னால் குறை கூற முடியாதே?. பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும். அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும். ஆனால் “பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக்கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப்போட்டுக்கொணடும் இருந்தன. இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப்போனேன்.




19 மே 2009, காலை 7.00 எனது தொலைபேசி மணி சத்ததை கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டேன். மறு முனையில் அழைத்தவர் எனது நண்பரும், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவருமான ஜாலியா விக்ரமசூரிய. “ கமால், பிரபாகரனுக்கு என்ன நடந்து?” இதுவே அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. நான் வழமை போலவே “ எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என பதிலளித்தேன். அவருடைனான உரையாடலை தொடர்ந்து கேணல் ரவிபிரிய, லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே ஆகியோரை அழைத்து 4வது விஜயபாகு படையணியினரை அனுப்பி சதுப்பு நிலக்காடுகளை முழுமையாக ஒரு இடம் விடாமல் தேடுமாறு அறிவுறுத்தினேன். இன்னும் 7 அல்லது 8 பயங்கரவாதிகள் அங்கே பதுங்கி இருக்கலாம், நாங்கள் இறந்து போன எல்ல பயங்கரவாதிகளினதும் உடல்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றவில்லை என எனக்கு உள்ளுணர்வு ஓடிக்கொண்டிருந்தது. காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்த போகின்றார் என கேள்விபட்டேன். அதனை தொலைக்காட்சியில் பார்ப்பது எனவும் முடிவு செய்திருந்தேன். படையினர் காலை உணவுக்கு பால்சோறு சமைத்திருந்தனர். அவற்றில் இரண்டு மூன்று துண்டுகளை எடுத்துக்கொண்டு பாராளுமன்றில் நடப்பதை பார்ப்பதற்காக தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தேன். 

ஜனாதிபதி பாராளுமன்றத்தினுள் கம்பீரமாக உரையாற்ற தொடங்கினார். சில நிமிடங்களுக்குள்ளாகவே என்னுடைய CDMA தொலைபேசி அழைத்து. மறுமுனையில் கேணல் ரவிபிரிய.” சேர் சதுப்பு காட்டுக்கு அருகில் ஒரு பிரச்சினை, விரைவாக வாருங்கள்” என அழைத்தார். போர் உத்தியோகபூர்வமாக முடிவடைந்திருந்தாலும் இப்படியான் சிலவற்றை நான் எதிர்பார்த்திருக்க வேண்டியிருந்தது. பாதி சாப்பிட்ட நிலையில் உணவையும் தொலைகாட்சியையும் விட்டு என்னுடைய லாண்ட் ரோவர் வாகனத்தில ஏறி அந்த சதுப்பு பற்றை காட்டு பகுதிக்கு விரைந்து சென்றேன்.

நான் அங்கே சென்றடைந்த போது “ சேர், சதுப்புபற்றைகளினுள் இன்னும் சில பயங்கரவாதிகள் ஒழிந்துள்ளதாக எம்முடைய 4வ்து விஜயபாகு படையினர் கூறுகின்ற்னர்” என கேணல் ரவிப்பிரிய என்னிடம் கூறினார். படையினருடன் நின்றிருந்த லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே அழைத்து எவரும் தப்பி செல்ல முடியாதவாறு அந்த பகுதியை சுற்றி வளைக்குமாறு அறிவுறுத்தினேன். மேலும் கடைசி கசப்பான முடிவு வரை அவர்கள் உங்களை தாக்ககூடும் என்னுடைய பெடியல் ( பையன்கள்) கடைசி நேரத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்வதை நான் பார்க்க விரும்பவில்லை. எனவே அவதானமாக செய்ற்படுங்கள் என அவர்களை எச்சரித்தும் இருந்தேன். ஏற்கனவே படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்திருந்ததால் நான் அவர்களுக்கு அறிவுறுத்திய சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கிவிட்டனர். எதிர்பாராத விதமாக தாக்குதல் மிக மோசமான நிலையை அடைந்தது. பயங்கரவாதிகள் மிக குறுகிய இடத்தினுள் சுற்றி வளைக்கப்பட்டு இருந்த்ததால் எம்மால் ஆட்டிலரி அல்லது மோட்டார் தாக்குதலை நடாத்த முடியாமல் இருந்தது. எனவே 4வ்து விஜயபாகு படையினருக்கு தங்களது இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தங்களது தனிப்பட்ட ஆயுதங்களுடனுமே அந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டி இருந்தது. சில நிமிடங்களுக்குள்ளாகவே நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பயங்கரவாதிகள் அங்கே மறைந்திருந்தது தெளிவாகியது. தாக்குதலை தொடங்குவதற்கு முதல் அவர்களை சரணடையுமாறு அறிவிப்பு செய்தோம். எங்கள மீதான தாக்குதலையே அவர்கள் அதற்கு பதிலாக கொடுத்ததனால் அவர்களை தாக்கி அழிப்பதை தவிர எங்களிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லாமலேயே போய்விட்டது.

வெற்றிக்களிப்புடனும் பதட்டத்துடனும் இருந்த படையியினர் தாக்குதலை 45 நிமிடங்களுக்குள்ளாகவே முறியடித்திருந்தனர். இருந்தாலும் வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு தாக்குதல் எம்மீது நடாத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கள்ளாகவே அந்த தாக்குதல் உக்கிரமான நிலையை எட்டிவிட்டது. பயங்கரவாதிகளின் ஒரு சிறிய அணியினர் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அவர்கள் மறைந்திருந்த அந்த இடத்தின் மீது தரைப்படையினரை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும் என நான் புரிந்துகொண்டேன். அதற்கேற்ப 4வது விஜயபாகு படைபிரிவின் கட்டளை அதிகாரியை அழைத்து தலா 8 பேர் கொண்ட இரண்டு படை அணிகளை தாக்குதலில் இறக்குமாறு அறிவுறுத்தினேன். அதி சிறப்பு தகமையும் துணிச்சலும் கொண்ட இந்த படையணிகளை கோப்ரல்களான விஜயசிங்க, முத்துபண்டா ஆகியோர் வழிநடத்தினர். அடுத்து வந்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே சண்டையை அவர்கள் முடித்துவிட்டனர். என்னுடைய வாழ்நாளில் நான் முன்பு எப்போதுமே கேள்வி பட்டிருக்காத அந்த அற்புதமான, முக்கியமான, மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்பட்டேன்.

“ சேர், இப்போது நடந்த இந்த கடைசி சண்டையில் நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம்.” கேணல் ரவிபிரிய இதனை கூறினார். அப்போது சதுப்புநில பற்றைக்காட்டின் ஓரத்தில் கேணல் ரவிபிரிய, கேணல் சுத்தா பெரேரா, லெப்.கேணல் லாலந்த கமகே, லெப்.கேணல் திலக் ஹங்கிலிபொல ஆகியோர் நின்றுகொண்டிருந்தோம். மகிழ்ச்சி ததும்பிய அந்த இனிப்பான ஆனால் நம்பவே முடியாத அந்த செய்தியை ரவிப்பிரியவுக்கு தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து கூறியவர் மேஜர் ரோஹித அலுவிஹார. “ அது பிரபாகரன்தானா? நன்றாக பாருங்கள்” என நான் அவர்களுக்கு கூறினேன். ”சூரியன் சந்திரன் இருப்பது எவ்வளவு உறுதியான தகவலோ அதே போன்றதுதான் பிரபாகரனை நாம் கொன்றதும் சேர்.” என மறு முனையில் இருந்து எனக்கு பதில் வந்தது. இருந்தாலும் அந்த செய்தியை மேலும் உறுத்திபடுத்திக்கொள்ள விரும்பினேன். CDMA தொலைபேசியை எடுத்துக்கொண்டு கேணல் லாலந்த கமகேயை அந்த இடத்துக்கு சென்று செய்தியை உறுதிபடுத்துமாறு கூறினேன். அடுத்த 10வது நிமிடத்தில் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ சேர், அவர்கள் கூறியது சரி. அது பிரபாகரனேதான்.” செய்தியை உறுதிபடுத்தினார். “ உறுதியாக கூறுகின்றீர்களா?” நான் மீண்டும் கேட்டேன். இவ்வாறு நான் இரண்டாவது தடவையாக கேட்டபோது அவர் உண்மையிலேயே உறுதியாக.” எந்த மாற்றமும் இல்லை. இது பிரபாகரனேதான்” என்றார். “ சேர் விரைவாகவே இராணுவதளபதிக்கு அழைப்பு எடுத்து நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று கூறுங்கள்” என அவர் உடசாகமாக எனக்கு கூறினார். நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சதுப்பு பற்றைகளுக்குள் 200-300மீட்டர் தொலைவில் அவரது உடல் கிடந்தது. இருந்தாலும் இந்த பெறுமதிமிக்க, எனது வாழ்நாளிலேயே மிக நம்பக்கூடிய இந்த செய்தியை நானே நேரில் உறுதிபடுத்திக்கொள்ளாமல் இராணுவதளபதிக்கு கூற விரும்பவில்லை. அவசரப்பட்டு இராணுவ தளபதிக்கு நான் இந்த செய்தியை கூறினால் அவர் பாதுகாப்பு செயலாளரருக்கு அறிவிப்பார். பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு செய்தியை கூறுவார். இவர்களில் யாரவது” எங்களுடைய வீரதீரமிக்க படையினர் பிரபாகரனை கொன்றுவிட்டனர்” என ஊடகங்களுக்கு கூறக்கூடும். ஒருவேளை அங்கே கொல்லப்பட்டு கிடப்பது பிரபாகரன் இல்லை எனறால் என்னாவது? நான் பொய்யான தகவலை இந்த நாட்டுக்கு கூறிய கேலிக்குரியவனாக இராணுவ கட்டமைப்பில் மாறிவிடுவேனே? அதன் பின் என்னை நானே வெடி வைத்துக்கொண்டு நந்திக்கடலுக்குள் குதித்து சாவதை தவிர எனக்கு வேறு வழியே இருக்காதே? 

எனவேதான் அந்த உடலை நான் நின்ற இடத்துக்கு கொண்டுவரும்படி லாலந்தவுக்கு கட்டளையிட்டேன். “ சேர் நாங்கள் அந்த உடலை கொண்டுவருகின்றோம். தயவு செய்து நீங்கள் உடனேயே இராணுவதளபதிக்கு கூறுங்கள்” என அவர் என்னை வற்புறுத்தினார். “ நான் இராணுவதளபதிக்கு கூறுகின்றேன். ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் அந்த உடலை இங்கே கொண்டு வாருங்கள்” என கூறினேன். ஆனாலும் “ சேர் இது நிச்சயமாக பிரபாகரன்தான். நாங்கள் உடலை கொண்டுவருகின்றோம். நீங்கள் இராணுவதளபதிக்கு செய்தியை கூறுங்கள்” என விடாமல் என்னை வற்புறுத்தினார். சற்று எரிச்சலடைந்த நான்” நீங்கள் ஈமச்சடங்கை அங்கேயே செய்து கொண்டிருக்காமல் அந்த உடலை கடவுளுக்கு காட்டுவதற்காவது இங்கே கொண்டு வாருங்கள்.” என கடுமையாக கூறினேன். கடைசியில் தாமதமின்றி உடலை கொண்டுவர அவர் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்பு அவ்விடத்தில் அதிகாரிகளும் படையினரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏறக்குறைய 5000 பேர் வரை அங்கே குழுமி இருக்கலாம் என ஊகிக்கின்றேன். நூற்றுக்கணக்கான படையினர் நாலாதிசைகளிலும் இருந்து எம்மை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தனர். பல்வேறு ஊடகங்களில் இருந்தும் செய்தியாலர்கள்கூட அங்கே வந்து விட்டனர். 10 நிமிடம் கழித்து 4வது விஜயபாகு படையினர் லாலந்த கமகே ரோஹித் அலுவிகார ஆகியோர் தலைமையில ITNசெய்தியாளர் சுஜித் விதானபத்திரன மற்றும் ஒளிப்பதிவாளர் சாமல் ஆணந்த ஆகியோர் புடை சூழ சதுப்பு பற்றைகளுக்குள் இருந்து அந்த இராட்சசனின் உடலை சுமந்தபடி வெளிப்பட்டு எனது திசை நோக்கி வந்தனர். பற்றை காட்டுக்குள் இருந்து 4வது விஜயபாகு படையினர் வெளிப்பட்ட உடனேயே என்னை சூழ நின்று கொண்டிருந்த கிட்டதட்ட 5000 படையினரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எங்கள் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் எல்லைகளே இல்லை என நான் அந்த நொடியில் உணர்ந்தேன். 

துரோகியின் உடலை 4வது விஜயபாகு படையினர் கொண்டுவருவதை கண்ட படையினர் தன்னிலை மறந்து பரவசமாகி வானைநோக்கி வேட்டுகளை தீர்க்க தொடங்கிவிட்டனர். அவர்களின் T55 ரக துப்பாக்கியில் மாத்திரமல்லாமல் கனரக இயந்திர துப்பாக்கிகளில் இருந்தும் தோட்டாக்கள் மழையாக பொழிந்தன. அதிகாரிகள் சிலர் அதனை நிறுத்த முயன்றனர். ஆனாலும் தங்கள் மகிழச்சியை கொண்டாட அவர்களை அனுமதிக்குமாறு நான் அந்த அதிகாரிகளுக்கு சைகை காட்டினேன். இவர்கள் இந்தநாட்டின் புதல்வர்கள். திகதியிடப்படாத மரண சான்றிதலை கைகளில் வைத்துக்கொண்டு அவர்களுடைய நாட்டுக்காக போராடியவர்கள். இந்த அசுரனின் மரணத்துடன் அவர்களுக்கிருந்த மரண அழுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்ப்பதன் மூலம் அவர்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் நாம் அதனை தடுக்க கூடாது என உணர்ந்தேன். துப்பாக்கி வேட்டுக்களின் பெரும் சத்தம் நந்தி கடல்நீரேரியெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. இப்போது நான் இதை எழுதும் போது பெருமை பொங்கிய அந்த முகங்களில் இருந்து பெரும் கௌரவத்தையும் பெருமையையும் உணர்ந்து கொள்கின்றேன்.
-


மூலம் : மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின்  ( Road to Nandikkadal) நூலிலிருந்து தமிழ் மொழியாக்கம் : ராஜ் செல்வபதி. 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...