ஜனாதிபதியும் , இரு அமைச்சர்களும ; பதவி விலக வேண்டும் ! ஜே.வி.பி. உறுப்பினர் வலியுறுத்து!!



ஜனாதிபதியும் இரு அமைச்சர்களும் கட்டாயமாகப் பதவி விலக வேண்டும் என வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் பங்குபற்றி உரையாற்றிய ஜே.வி.பியின்
நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதற்கான பின்வரும் காரணங்களையும் அவர் தெரிவித்திருக்கிறார். அவையாவன:
ஐ.தே.கவைச் சேர்ந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கீழுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சுக்கு
2017இற்கான வரவு செலவுத் திட்டத்தில் 19,782 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் 2017 செப்ரெம்பர் 30 வரை 6,000 மில்லியன் ரூபா மட்டுமே
பயன்படுத்தப்பட்டதாகவும், மிகுதிப்பணம் செலவழிக்கப்படாமல் திறைசேரிக்குத் திரும்பிவிட்டதாகவும் ரத்னாயக்க குறிப்பிட்டிருக்கிறார்.


அதேபோல, ஜனாதிபதியின் கீழுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுக்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3,532 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 325 மில்லியன் ரூபா மட்டுமே – அதாவது 9 சதவீதம் - பயன்படுத்தப் பட்டதாகவும், மிகுதி திரும்பிவிட்டதாகவும் ரத்னாயக்க குறிப்பிட்டிருக்கிறார்.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் திருப்பியது சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் தவறு என்றும், எனவே சம்பந்தப்பட்ட
அமைச்சர்களும் அவர்களுக்குப் பொறுப்பான ஜனாதிபதியும் தமது தவறை ஏற்றுப் பதவி விலக வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க
கோரியிருக்கிறார்.

மூலம்: வானவில் -இதழ் 84 -மார்கழி 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...