ஊடகங்கள மீது அமைச்சர் மங்கள பாய்ச்சல்! --பி.வி


அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய நிதி மற்றும் ஊடக அமைச ;சர் மங்கள சமரவீர,ஊடகங்களின் தலைவர்களையும்,அவற்றின் ஆசிரியர்களையும் கடுமையாகச்
சாடியிருக்கிறார். அவரது கோபத்துக்குக் காரணம், சமீபத்தில் யுனெஸ்கோ
(UNESCO) ஆதரவுடன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு அவர்களுக்கு
அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தும் அவர்கள ; யாரும் அதில் கலந்து
கொள்ளாததே. இதுபற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் மங்கள,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  அவர்கள்  ; கலந்து கொள்ளாதது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதுபற்றி நான் விசாரித்த போது ஊடகங்களின் தலைவர்கள ; மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது தெரிய வந்தது.இருந்தும் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டார்.
இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இது அரசியல் அல்ல, ஊடகம் சம்பந்தமானது எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், “உண்மை என்னவென்றால் சில ஊடகங்களின் தலைவர்கள ; நாட்டை முன்னைய சகாப்தத்திற்கு பின்தள்ளப் பார்க்கிறார்கள்.சில பத்திரிகைகள் ; பொய்ச்  செய்திகளைப் பிரசுரிக்கின்றன” என்றார். தொடர்ந்து பேசிய அவர், தனியார் ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் அரச ஊடகங்கள் முன்னேற்றகரமாக இருப ;பதுடன், பக்கச்சார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுகின்றன என்றும், தனியார் ஊடகங்களைக் கவனிப்பதற்கு
முன்னால் அரச ஊடகங்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த
வேண்டும் எனப்  பலர் கூறுவதாகவும் தெரிவித்தார்.


ஆனால் அமைச ;சர் மங்கள இப்படி தனியார் ஊடகங்களைத் தாக்கினாலும்,
இன்றைய அரசாங்கத்தைப ; பதவிக்குக் கொண்டு வருவதில் அவைதான் பெரும் பங்களிப்புச்  ;செய்தன என்பதை அவர் மறுக்க முடியாது. மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசு ஊடக சுதந்திரத்தை நசுக்குகிறது, ஊடகவியலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது எனப்
பெருமெடுப்பில் பிரச ;சாரம் செய்தே இன்றைய அரசு பதவிக்கு வந்தது.
ஆனால் உண்மை என்னவெனில், இந்த ‘நல்லாட்சி’ அரசு பதவிக்கு வந்த பின்னர் தனது மக்கள் விரோதச ; செயற்பாடுகளை மறைப்பதற்காக ஊடகங்களைக் கட்டுப்படுத்த முற்பட்டதினால் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையில் பாரிய விரிசல் ஏற்பட்டது. ஜனாதிபதி,பிரதமர், ஊடக அமைச்சர், இதர அமைச்சர்கள் என எல்லோருமே அடிக்கடி ஊடகங்களைத் திட்டுவதிலேயே காலத்தைக் கழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த அரசின் கீழேயே ஊடகவியலாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டும் வருகின்றனர்.
-பி.வி

வானவில் இதழ் 84 மார்கழி 2017 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...