லெனின் மீது அவதூறு பொழியும் அமைச்சர் ராஜித!


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அன்பையும் ஆதரவையும் ஒருங்கு சேரப்பெற்ற  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன எப்பொழுதும்
இடக்குதத் தனமாகவும் துடுக்குத்தனமாகவும் பேசி சிக்கலில் சிக்குபவர் எனப் பெயர் பெற ;றவர்.
அத்தகைய அதிமேதாவி அண்மையில் சோவியத் ; மக்களின் மாபெரும் தலைவரும், உலகப்
புரட்சியாளருமான மாமேதை லெனின் அவர்களை வம்புக்கிழுத்து அவரை அவதூறு செய்திருக்கிறார்.
அதாவது, இன்றைய இலங்கை மாணவர்கள் சிலரின் நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கு
லெனின் இன்று உயிரோடு இருந்திருந்தால், அவர்களது நடவடிக்கையைபயங்கரவாதச்
செயல்கள்என வர்ணித்திருப்பார்  என ராஜித கூறியிருக்கிறார்.


நாட்டு மக்களால் வெறுக்கப்படும் சைட்டம்என்ற தனியார் மருதத் துவக் கல்லூரியை மூடி,
நாட்டின் இலவசக் கல்வியைப் பாதுகாக்கும்படி நாட்டின் அனைத்து மாணவர்களும், வைத் தியர்களும்,
பொதுமக்களும் கடந்த சில மாதங்களாக இன பேதமின்றிப் போராடி வருகின்றனர். இந்தப்
போராட்டங்கள் சம்பந்தமாக நல்லாட்சிஅரசாங்கம் பெரும் நெருக்கடியில் சிக்கித்திணறுகையில், சுகாதார அமைச்சர் ராஜித மட்டும் இந்தத் தனியார் மருத ;துவக் கல்லூரியை எக்காரணம் கொண்டும் மூட அனுமதிக்க மாட்டேன் எனச் சண்டித்தனம் செய்து வருகின்றார். மாணவர்கள் தமது போராட்டத்தில் பல்வேறு வகையான வழிமுறைகளைக் கைக்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக அண்மையில் சுகாதார அமைச்சை முற்றுறகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தை அரசாங்கம் பொலிசாரின் குண்டாந்தடிப் பிரயோகம் மூலம் கலைக்க  முயன்றதுடன், மாணவர் தலைவர்களையும் கைது செய்து சிறையில் போட்டது. மாணவர்களின் இந்த அமைதி வழிக்குட்பட்ட போராட்டத்தைக் கண்டிக்கும் போதே ராஜித லெனினை வம்புக்கு இழுத்துள்ளார்.

இந்த வகையான போராட்டத்தை லெனின் தனதுஇடதுசாரிக் கம்யூனிசம்: ஒரு சிறுபிள்ளைக்
கோளாறுஎன்ற நூலில் பயங்கரவாதம் எனக் குறிப்பிட்டுள்ளதாக ராஜித குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையின் மிக மோசமான ஏகாதிபத்திய பாதந்தாங்கியாகிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூட தனது
வீட்டு நூலகத்தில் மார்க்சியப் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்ததாகக் கூறுவார்கள ;.
ஆனால் அந்தப் புத்தகங்களை அடுக்கி வைத்ததுக்கொண்டு நாட்டில் என்ன செய்தார் என்பது
அனைவரும் அறிந்த சங்கதி.

அதேபோல இந்த ராஜித வகையறாக்கள் மார்க்சிய நூல்களை அரைகுறையாக வாசித்தவிட்டு அல்லது யாராவது சொல்வதைக் கேட்டுவிட்டு மாணவர்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்த 
லெனினை துணைக்கு அழைக்கும் அவலத்தை என்னவென்று சொல்ல? அதுவும் எதேச்சாதிகாரம் பிடித்த  ஜார் மன்னனது ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர், விவசாயிகள ;, மாணவர்கள ;
போராட்டங்கனை முன்னின்று நடாத்தி , இறுதியில் ஆயுதக் கிளர்ச்சியின் மூலம்
கொடுங்கோலன் ஜாரின் ஆட்சியைக் தூக்கியெறிந்து, சோவியத ; மண்ணில் மக்களாட்சியை உருவாக்கி
லெனினின் பெயரை ராஜித போன்ற மக்கள்  விரோதிகள் உச்சரிக்கவே அருகதையற்றவர்கள் என்பதே
உண்மையாகும்.

அன்றைக்கு இருந்த ரஸ்ய சூழ்நிலையில் படிமுறையான மக்கள் போராட்டத ;தைக் குழப்பிய சில
அதிதீவிரவாதிகளை விமர்சிக்கும் போதே லெனின் இளம்பிள்ளைக் கோளாறான கம்யூனிசம் பற்றி
விமர்சனம் செய்திருந்தார். அதை மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல அமைச்சர் ராஜித சேனரத்ன போன்றவர்கள் ; பேசுவது அவர்களது ஞானசூனியத்தைத்தான் எடுத் துக் காட்டுகிறது. முன்பொருமுறை இந்த நல்லாட்சியின் இன்னொரு இனவாத அமைச்சரான சம்பிக்க

ரணவக்கவும் தனது செய்கை ஒன்றை நியாயப்படுத்த சோசலிச கியூபாவை வம்புக்கு இழுத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்: வானவில் நவம்பர் 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...