கட்சி தாவினால் இலஞ்சமாக அமைச்சுப் பதவி பெறலாம்!

உள்ளூராட்சித் தேர்தலில் தம்முடன்இணைந்து போட்டியிட மகிந்த ராஜபக்ச
தலைமையிலான கூட்டு எதிரணி முன்வரவில்லை எனக் கண்டதும்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டு எதிரணியிலுள்ளவர்களை கட்சி தாவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க ஆரம்பித்துளளார்.அந்த வகையில் விமல் வீரவன்சவின்தேசிய சுதந்திர முன்னணியில் இருந்த
சிலர் அண ;மையில் மைத்திரியின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய
வைக்கப்பட்டுள்ளனர்.அதன் பின்னர் கடந்த பொதுத் தேர்தலில்
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எதிரணித் தலைவர் தினேஸ் தலைமையிலான மக்கள ; ஐக்கிய முன்னணி (எம்.ஈ.பி) நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜஜேவிக்கிரமே கட்சி மாற வைக்கப்பட்டு, அவருக்கு உடனடியாகவே மாகாணசபைகள ; மற்றும் உள்ளூராட்சி பிரதியமைச்சர் பதவி மைத்திரியால் வழங்கப்பட்டுள்ளது .ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அநாகரிகமான நடைமுறை, கட்சி
தாவுபவர்களுக்கு இலஞ்சமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்ற நிலையைச் சூசகமாக வெளிப்படுத்தி உள்ளது.இப்படிப்ப  பதவி ஆசை காட்டுவதன் மூலம் கூட்டு எதிரணியில் உள்ள மேலும் சிலரை தனது பக்கம் இழுக்க மைத்திரி முயற்சிப்பபது அப்பட்டமாகத் தெரிகிறது.


கடந்த பொதுத் தேர்தலின் போது தாம் பதவிக்கு வந்தால் அமைச்சர்களின்
எண்ணிக்கை நாற்பதாகக் குறைக்கப ;படும் என இன்றைய ‘நல்லாட்சி’; ஆட்சியாளர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் ஏற்கெனவே அமைச்சர்களின் தொகை நூறைத் தாண்டியுள்ள நிலையில்
இவ்வாறாகக் கட்சி தாவுபவர்களுக்கும் அமைச்சுப்பதவி வழங்க ஆரம்பித்தால், இந்தச்ச  சூதாட்டம் எங்கே போய் முடியப் போகிறது?
கூட்டு எதிரணியைச்  சேர்ந்தவர்களை மட்டுமின்றி பதுளை மாவட்டத்தில்
ஐ.தே.கவைச் சேர்ந்த சிலரும் மைத்திரி முன்னலையில் கட்சி தாவ
வைக்கப்பட்டுள்ளனர்.அதிகாரத்தைக் தக்க வைத்துக் கொள்ள
மேற்கொள்ளப்படும் இந்த வகையான கட்சி தாவல் நடவடிக்கைகளால்
ஆட்சியிலுள்ளவர்களை  ஒருபோதும் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதை மக்கள் உரிய தருணத்தில் அதிகாரத்திலுள்ளவர்களுக்குப் புரிய வைத்தே தீருவர்.

மூலம்: வானவில் இதழ் 84 மார்கழி 2017

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்