புலனாகிப் பொழுதாகி !




                                  எஸ்.எம்.எம்.பஷீர்

வைகறையில்
குழந்தையாய்
தொட்டிலில்
தொங்குகையில்
வானத்தைக்
காணவில்லை-வந்ததின்
சூட்சுமம்
புரியவில்லை !



காலையில்
விரல் சூப்பி
தத்தி
நடக்கையில்
பூமியில்
வீழ்ந்ததுண்டு - புரண்டதில்
பூலோகம்
தெரியவில்லை!

நண்பகல்
உஷ்ணத்தில்
நலிவற்று
நடக்கையில்
சாத்திரம்
கற்றதுண்டு -வாழ்வின்
சூத்திரம்
தெரியவில்லை!

மாலைப்பொழுதில்
மஞ்சள் வெயிலில்
மனசு மறுகவில்லை
மகிழ்ச்சிக்கு
எல்லைகள்
தெரியவில்லை -இளமையின்
தந்திரம்
புரியவில்லை

துயிலும் பொழுதில்
துடித்து எழுகையில்
துன்பங்கள்
நீங்கவில்லை
உறங்கி
உயிரறும் - கும்பகர்ண
வித்தை
பயிலவில்லை!

யாமத்தில்
நோயோடு
வெந்து துயர்கையில்
வல்லமை
ஏதுமில்லை
வாழ்வை வெல்லும்
மந்திரம்
கற்றதில்லை !


13 ஏப்ரல் 2016

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...