என்னைத் தொடரும் இராட்சசன் யாரோ ?






எஸ்.எம்.எம்.பஷீர்

"நீ யார்?"என்றேன் !
"நான்தான்" என்றான்
"நானென்றால்" 
"நீ  யார் ?"என்றேன்!
"நான்தான்
நீ" என்றான் .

"நீ அல்ல நான்
நான் நானே 
நீ "நீ" யே" என்றேன் 
நகைத்தான்.
"நீ தான் நான்" என்றான் !


"எதற்காக என்னைத்
சுற்றுகிறாய் ?"என்றேன்
"நான் இல்லை
நீ தான் என்னைச் 
தொடர்கிறாய் !" என்றான்.

"என்னைவிட்டு
எட்டிப்போ "என்றேன்  
"என்னை விட்டு
நீயே அகன்று போ" என்றான்
தத்துப் பித்தென்று உளறினேன் 
"தத்துவங்கள் வேண்டாம்
படித்தவைகள்
குழப்பம்" என்றான்!   


"அப்படித்தான் தெரிகிறது"
என்றேன் .
"இருவருமே அகன்று போவோம்
அதற்கு நீ சம்மதமா ? "என்றான்
இல்லை என்றேன் 
எட்ட நின்றேன்
கிட்ட வந்தான் !
 
"இப்பொழுதே நம் முடிவு" என்றான்
"எப்போது நாமானோம்" என்றேன்
"உன் கருவோடு
ஜனித்தவன் நான்
உன் "கபுரோடு"
கரைந்து போவேன்" என்றான் 

தொண்டைக் குழிக்குள்
நாக்கு விறைத்தது
வார்த்தைகள் உறைந்தன
நடை தளர்ந்தது 
பிடரில் ஏதோ ஊர்ந்தது
பிரக்ஞை பிசகியது
அவனைக் காணவில்லை
கண்கள் மூடியது 
எனக்கும்  நானில்லை !
அவனுக்கு ம் நானில்லை!

கபுர்: மனிதன் இறந்தபின் அடக்கம் செய்யப்படும் குழி

2 comments:

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...