பித்தனாய் !எஸ்.எம்.எம்.பஷீர்

சுவீகரித்த
பதவியும்
பட்டமும்
சுமையாக ,
மூடிய
ஆடையும்  
அணிகலனும் அருவருப்பாக,
தொட்டிலில் கிடத்திய  
பிறந்த பாலகனாய்
செட்டை  கழட்டிய பாம்பாய்
அசிங்கமாய், அழகாய் 
சிந்தை சிதைந்து சிரிக்கையில்
சிலர் பித்தனே என்றார்
எனையடிக்க கல் தேடினார்.

ஏகாந்தம் எனது புகலிடமாக
எட்டிய பூமியும்
ஏழு வானமும்
எல்லைபோட
வானத்து மேகங்களை 
எனது போர்வையாக்கி 
நான் மூடிக் கொள்ள
என்னச் சுற்றிய மனிதர்கள்
நிர்வாணியாய்
நிசப்தமாய்
கலைந்து போயினர். 

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்