Facebook "media player" dictating terms


  • Ajeevan Veer தேசம் ஈபீடிபியின் ஆதரவோடு மகிந்தவை வைத்து பல வியாபார திட்டங்களை செய்ய உதவிகளை செய்து வந்தது. அதன் நன்றிக் கடனுக்காக இந்தக் கட்டுரை வந்திருக்கிறது என நினைக்கிறேன். இது ஒரு சார்பு நிலைப்பாடாகவே தெரிகறது. லிட்டில் எயிட் என தேசத்தின் உதவி நிறுவன தகவல்கள் :http://littleaid.org.uk/

    LITTLEAID.ORG.UK
  • தேசம் கட்டுரை கீழ் உள்ள லிங்கில் உள்ளது.   

   Reply to Mr. Ajeevan from Mr. Jeyapalan ( thesam97@hotmail.com) 
அஜீவன் உங்கள் லொஜிக் எனக்கு விளங்கவில்லை. இலங்கையில் ஒரு உதவி அமைப்பு செயற்பட்டால் அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவகம் செய்யும் என்ற உங்கள் முடிவுக்கு லற்றில் எய்ட் என்ற இணையத்தை ஆதாரம் காட்டி உள்ளீர்கள். நீங்கள் புளொட் அமைப்பில் இருந்தவர். உமா மகேஸ்வரனை மிகவும் நேசித்தவர். அதற்காக உமாமகேஸ்வரனின் உட்படுகொலைக்கு நீங்களும் பொறுப்பாளி என்று எழுந்தமானமாக ஒருவர் குற்றம்சாட்டுவது ஒரு லொஜிக்கான கருத்தா?

ஒரு கருத்தை அந்த கருத்தின் அடிப்படையில் விவாதிக்கின்ற தகமையை நீங்கள் எப்போது இழந்தீர்கள். நீங்கள் பேசுகின்ற அரசியலுக்கு புறம்பான அரசியல் கருத்தை மற்றவர்கள் கொண்டிருக்கக்கூடாது என்பதைத்தான் புலிகள் காலம் காலமாக சொல்லி வந்தனர். இப்போது அதனை எப்போது நீங்கள் குத்தகைக்கு எடுத்தீர்கள்?

நீங்கள் உமாவோடு நிக்கும் போது நாங்களும் உமாவோடு நிக்க வேண்டும். நீங்கள் ஜெஎச்யூ வோடு நிக்கும் போது நாங்களும் உங்கள் பின்னால் வந்து நிக்க வேண்டும். நீங்கள் மைத்திரிக்கு சாமரசம் வீசினால் நாங்களும் சாமரம் வீச வேண்டும். சுவிஸ்லாந்து பொலிஸ் அரசு தான் ஆனால் அங்கு ஜனநாயகம் இருப்பதாகவே நம்புகிறேன். 

நீங்கள் காலத்திற்கு காலம் யார் யாருடன் நிர்பீர்கள் என்று பார்த்து அவர்களுக்குப் பின்னால் எங்களால் நிக்க முடியாது. நாங்கள் எந்த அரசியலை ஆதரிப்பது என்பதை நாங்களே முடிவு செய்யும் உரிமையை எங்களுக்கு மறுத்து உங்கள் ஜனநாயப் பண்பை தொலைத்து ஒரு படைப்பாளி என்ற விம்பத்தை நீங்களே கிளித்துக்கொள்ள வேண்டாம்.






No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...