எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை ....... (2) கலாநிதி. தயான் ஜயதிலக

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும் அதேவேளை அதில் தோல்வியுற்ற ரணில் மற்றும் சந்திரிகாவுக்கு வெகுமதி வழங்குவது
 கலாநிதி. தயான் ஜயதிலக
(2)
உள்நாட்டிலும் மற்றும் வெளி நாட்டிலும் செயற்படுத்துவதற்காக எதிரணியினால் வடிவமைக்கப் பட்டுள்ள புதிய மூலோபாயகட்டமைப்பில் திரு.சிறிசேனவின் எஞ்சிய தலைமைத்துவம் கட்டமைப்பு ரீதியாக தீர்க்கமான மிகச் சிறந்த அதிகார மையமாக இருக்காது இருக்கவும் முடியாது. பிரதமராலும் மற்றும் அமைச்சரவையினாலும் மட்டுமே அது இயலும். ஈர்ப்பு மேலாதிக்கமுள்ள அரசியல் முனைகளாக திரு.ரணில் விக்கிரமசிங்க மற்றும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆகியோர் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.


தனிப்பட்ட ரீதியில் எனக்கு அவர்களுடன் ஒரு மோதலோ அல்லது பிரச்சினையோ கிடையாது  மற்றும் உண்மையில் பல்வேறு சமயங்களில்  விமர்சன ரீதியாக என்றாலும் அவர்களை  நான் பகிரங்கமாக ஆதரித்துள்ளேன் (ரணிலை 1994 – 1996  லும், சந்திரிகாவை 1999 – 2004 லும்). எனது பிரச்சினை என்னவென்றால் ஒரு அரசியல் விஞ்ஞானி என்கிற வகையில் அது எனது தொழில். மக்களின் நலன் நோக்கியதான ஒரு அரசாங்கத்தின் முதற்கடமை அதிக அளவிலான நல்லாட்சி மட்டுமல்ல, அதிக இருத்தியலின் அடிப்படையில்  ஒரு வன்முறை மூலமும் உறுதியுடன் இரக்கமின்றி சூறையாடும் எதிரியிடமிருந்து வாழ்வுக்கும் மற்றும் அங்கங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும்தான்.
அந்த முக்கியமான பரீட்சையில் சந்திரிகாவும் மற்றும் கிட்டத்தட்ட ரணிலும் பரிதாபகரமாக தோற்றுப் போனார்கள் அதேவேளை மகிந்த ராஜபக்ஸ சிறந்த பெறுபேற்றுடன் அதில் சித்தியடைந்தார். அவர் இந்த நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாத்து பிரபாகரனின் பயங்கரவாத ஆட்சியிலிருந்து நம்மை விடுதலை பெற வைத்தார். ஆகவே ஒரு அரசியல் மாணவன் என்கிற வகையில் மகிந்த ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்பும் அதேவேளை அதற்குச் சமமாக ரணில் மற்றும் சந்திரிகாவை அதிகாரமும் செல்வாக்குமுள்ள ஒரு முன்னணி நிலைக்கு கொண்டு வரும் ஒரு விளைவை என்னால் பரிந்துரைக்க முடியாது – அதே போல திரு. சிறிசேனவும் அதனை விஞ்சிய அளவில் இல்லை. எல்லாவற்றையும் விட வினோதமாக, தனக்கு சமமாக உள்ளவர்களிடையே அதிகாரம் மற்றும் பொறுப்பு விடயத்தில் திரு. விக்கிரமசிங்கவே முதன்மையானவர் என்று திரு. மங்கள சமரவீர முழுமனதுடன் அறிவித்திருக்கிறார்
நாம் தெரிவு செய்யவேண்டிய மாற்றத்தின் வகை நாம் வாழும் இந்த வரலாற்று காலத்தை பொறுத்ததாக இருக்கவேண்டும். ஸ்ரீலங்கா யுத்தத்தை கடந்து இன்னமும் வெறுமே ஐந்து ஆண்டுகள்தான் ஆகிறது. நாங்கள் யுத்தத்துக்கு பின்னான ஒரு காலத்தில் இருக்கிறோம். இது யுத்தத்துக்கு பிந்திய ஒரு காலம் மற்றும் நாங்கள் இனிமேலும் யுத்த கால மங்கல் பார்வைக்குள் அடைபட்டு கிடக்கக் கூடாது என்பதை ராஜபக்ஸக்கள் உணர்ந்து கொள்ளத் தவறி விட்டார்கள். கூட்டு எதிரணியும் இது பிந்திய யுத்தக் காலம், இந்த யுத்தம் வரலாற்று மற்றும் உளவியல் திருப்புமுனையை வரையறை செய்யும் ஒன்றாக உள்ளது என்பதை விளங்கிக் கொள்ளத் தவறி விட்டார்கள்.
ஒருவேளை ஜெனரல் சரத் பொன்சேகாதான் இந்த வெற்றிக்கான பிரதான ஓட்டுனர் என்பது உண்மையாக இருக்கலாம் ஏனென்றால் தரைப்போர் புதுமையாக வடிவமைக்கப்பட்டு அவரால் தீர்க்கமாக இயக்கப்பட்டது. இந்த நிருவாகம் அவரை மிகவும் இழிவாக நடத்தியது என்பதும் சற்றும் குறையாத உண்மை. எனினும் ஜெனரல் பொன்சேகா, ஜானக பெரேரா மற்றும் காமினி ஹெட்டியாராய்ச்சி போன்றவர்கள் சந்திரிகாவின் இரண்டு தவணை ஜனாதிபதி ஆட்சியில் அவரது இராணுவத்தில் இருந்தவர்கள்தான் இருந்தாலும் யுத்தத்தை வெற்றி கொள்வதில் அவர் தோல்வியுற்றார் – ஏனென்றால் அதை வெற்றி கொள்ள முடியும், பிரபாகரனை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியும் என்று அவரால் நினைக்க முடியவில்லை.
மகிந்த ராஜபக்ஸ யுத்தத்தை எங்களுக்காக வென்றார் ஏனென்றால் அவரிடம் அரசியல் மன உறுதி மற்றும் தெளிவு என்பன இருந்தன மற்றும் அவரிடம் போரை சுறுசுறுப்பு அர்ப்பணிப்பு மற்றும்அறிவு என்பனவற்றுடன் திறமையாக வழி நடத்தும் கோட்டபாய என்கிற சகோதரரும் இருந்தார். அவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் யுத்த முயற்சிகளை சீர்குலைத்த கசப்பான ஆயுதப்படைக்குள் இருந்த உட்பூசல்கள் (வைத்தியரத்ன – கொப்பேகடுவ) மற்றும் போட்டிகளை தணிக்க இயலுமானதாக இருந்தது.
யுத்தத்தில் மிகவும் முக்கியமான கட்டம் எதுவாக இருந்தது? 1987ல் நடந்த அந்தக் கட்டத்தை மீண்டும் நினைவு கூருவோமானால், ஸ்ரீலங்கா ஆயுதப் படைகள் ஒப்பறேசன் லிபறேசன் நடவடிக்கை மூலம் பிரபாகரனை வெற்றி கொள்ளும் தறுவாயில் இருந்தது, ஆனால் ஜனாதிபதி ஜெயவர்தனா இந்திய தூதர் ஜே.என் டிக்சிட் இடமிருந்து தடுத்து நிறுத்தும் எச்சரிக்கையைப் பெற்றார். 2009ல் ஜனாதிபதி ராஜபக்ஸவும் கிட்டத்தட்ட அதே நிலையில் இருந்தார், இதை நான் அவரிடமிருந்து மட்டுமல்ல ஆனால் மிகவும் நம்பிக்கையானதும் நேரடியானதுமான தகவல்களை நோர்வே தூதுவர் ரொரே ஹாட்ரம் மற்றும் அந்த நேரம் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரான பேனாட் கௌச்சர் மூலமாகவும் அறிந்து கொண்டேன்.
மகிந்த ராஜபக்ஸதான் நோர்வேயின் அனுசரணையுடன் அமெரிக்கா நடத்தவிருந்த வெளியேற்ற நடவடிக்கை முயற்சியை இந்தியாவின் பின் துணையை கோரி தடுத்து நிறுத்தியவர். மிகவும் முக்கியமாக எங்கள் வீரர்கள் இறுதி வெற்றியை அணுகுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, மனிதாபிமான ரீதியில் யுத்தத்தை நிறுத்தவும் மற்றும் பேச்சு வார்த்தைகளை மீள ஆரம்பிக்கவும் அவர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோது, திமிர் பிடித்து கூச்சல்போட்ட டேவிட் மிலிபான்ட்டிடம்  ஸ்ரீலங்கா இப்போது ஒரு பிரித்தானியக் காலனி இல்லை என்று வெறுப்புடன் துணிந்து கூறியவர் மகிந்த ராஜபக்ஸ. (இந்தக் கதையை பாரிசில் வைத்து என்னிடமும் எனது மனைவியிடமும் கௌச்சர் விபரித்தபோது நான் ஆச்சரியம் அடையவில்லை, 2007ன் ஆரம்பத்திலிருந்து நடந்த கலந்துரையாடல்களில் நான் ஒரு அங்கமாகப் பணியாற்றியபோது ஜனாதிபதி ராஜபக்ஸ, அமெரிக்க ராஜாங்க உதவிச் செயலாளர் ரிச்சட் பௌச்சரிடம் “ என்னை மன்னியுங்கள் திரு. பௌச்சர், என்னிடம் உள்ள பயங்கரவாதிகள் இஸ்லாமியர்களாக இல்லாமலிருப்பதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்)
யுத்தத்தை நிறைவு செய்ததற்கான பெருமையைக் கோரும் சம்பிக்க ரணவக்க கூட அந்த பேச்சு வார்த்தைகளின் சுற்றாடலில் இருக்கவில்லை. ஜெனரல் சரத் பொன்சேகா அந்த அறையில் சமூகமளித்திருக்கவில்லை. கோட்டபாய ராஜபக்ஸ அந்த வட்டத்தில் இருந்தார் ஆனால் மேடையின் மையத்தில் இருக்கவில்லை. அந்த முடிவு கண் இமைக்கும் நேரத்தில் மேற்கொள்ளப் பட்டதல்ல, அரசியல் மற்றும் இருத்தியலில் என்னதான் பின் விளைவுகள் ஏற்பட்டாலும் யுத்தத்தை முடித்து வைப்பது என்கிற தீர்மானம் ஜனாதிபதி ராஜபக்ஸவினால்தான் மேற்கொள்ளப் பட்டது.
இறுதி ஆய்வுகளின்படி  அது கோட்டாவின் யுத்தமல்ல, அது மகிந்தவினுடையது, மற்றும் அவரது மனத்துணிவு மற்றும் மேற்கின் அழுத்தங்களை புறந்தள்ளியது போன்ற துணிகரச் செயல்களுக்காக ஒரு விலையை அவர் கொடுப்பதற்கான நிலையை எங்கள் கைகளினால் ஏற்படுத்தக் கூடாது. தங்களுடைய புலிகளைத் தோற்கடித்ததுக்காகவும் மற்றும் பிரபாகரனின் மரணத்துக்காகவும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் அவரைப் பழிவாங்க காத்திருக்கிறார்கள். மேற்கிற்கு மேலாக அவர் சீனாவையும் மற்றும் ரஷ்யாவையும் தெரிவு செய்ததுக்காக மகிந்தவை ஒரு உதாரணமாகக் காட்டி அவருக்கு தக்க பாடம்  புகட்ட மேற்கு விரும்புகிறது. இந்த இரண்டு நிர்ப்பந்தங்களும் மிகவும் வெளிப்படையாக ஜெனிவாவில் ஒன்று சேருகிறது.
இதை கவனமாக பரிசீலிக்கும்போது, ராஜபக்ஸ,  ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக  அதாவது அவர்களது முடிவை மீறியதற்காக சட்டபூர்வ விசாரணைகள் எதுவுமின்றி மேற்கினால் பழிவாங்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் ராஜசிங்கனாக (கண்டிய கடைசி மன்னன்) மாற்றப்படும் சாத்தியத்துக்கான ஆபத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாரா? எங்களது கூட்டு மனச்சாட்சிப்படி நாங்கள் அதை விரும்புகிறோமா? எங்களது வருங்கால சந்ததியினர் எங்களை அந்த வழியில்தான் பார்க்க வேண்டுமா? மாறாக வரலாறு நம்மை அந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமா என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது.
மாற்றத்துக்கான தற்போதைய தருணத்தில் மாற்றத்துக்கான விடயம் பற்றி நாங்கள் விவேகமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தல் என்பது ஒருவர் புதிய அரசாங்கம் ஒன்றை தேர்வு செய்யும் நிகழ்ச்சி அல்ல, அது பாராளுமன்றத் தேர்தலினால்தான் நடைபெறுகிறது. குறிப்பாக நான் சிந்திப்பது என்னவென்றால் மறுசீரமைப்புக்கான உந்துகையை மேற்கொள்ளும் ஒரு புதிய அரசாங்கம்தான் நமக்குத் தேவை ஆனால் தவிர்க்க முடியாதபடி பாராளுமன்றத் தேர்தலில்தான் அது மிகவும் பொருத்தமாக நடைபெறும்.
கூட்டு எதிரணியின் தற்போதைய திட்டம் தீவிர அரசியல் - அரசியலமைப்பு மாற்றத்துக்கான வாய்ப்பு அதற்கு சற்றும் குறையாத தீவிர பொருளாதார மாற்றம் என்பனவற்றுடன் இணைந்திருக்கிறது. இந்த பொருளாதார மாற்றம் ரணில் விக்கிரமசிங்காவின் சித்தாந்தரீதியான பழமைவாத, நவீன தாராண்மைவாத, தனியார்மயம் மற்றும் பொதுச் செலவினங்களை சுருக்குதல் என்பனவற்றை மையமாகக் கொண்டது(இது அவர் பிரதமராக இருந்த குறுகிய காலத்தில் நிரூபிக்கப்பட்டது). ரஷ்யாவில் கோபர்ச்சேவ் மற்றும் யெல்ட்சின் காலத்திலும் மற்றும் சீனாவில் டெங் ஹசியோ பெங் காலத்திலும் நடைபெற்ற முரண்பாடான தலைவிதி எதை நமக்குச் சொல்கிறது,அது சொல்வது அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஒரே நேரத்தில் நடைமுறைப் படுத்தக்கூடாது என்று,
சுயமாக மறையவுள்ள சிறிசேனவின் ஜனாதிபதி ஆட்சியில், அதிகாரம் கொந்தளிப்பான ஒரு பாராளுமன்றத்திடம் மாற்றப்படுவது, பொருளாதார ரீதியாக நவீன தாராண்மைவாதியான விக்கிரமசிங்க பிரதமராவது, சோனியா காந்தி காரணியாக சந்திரிகா மாற்றமடைவது, பிடிவாதமான ஒரு வட மாகாணசபை, மேட்டுக்குடியான சிவில் சமூகம் - அரசு சாரா நிறுவனங்கள் - ஒத்துழைப்பு மற்றும் இணக்கம் சார்ந்த விடயங்களில் மேற்கின் அழுத்தம், சர்வதேச சட்டங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐநா விசாரணை, மற்றும் தீவிர தனியார்மயம் போன்றவை என்னை எச்சரிக்கை உணர்வால் நிரப்புகிறது, ஏனென்றால் மையவிலகல் காரணிகளைவிட மையநோக்கு காரணிகள் அதிகமாக உள்ளன.
ரணில் - சந்திரிகா – சொல்கைம் வருடங்களில் நாங்கள் வாழ்ந்த மேற்கு ஆதிக்கமுள்ள அரைக் காலனித்துவ ஸ்ரீலங்காவை நோக்கி நாங்கள் மீண்டும் செல்வதற்குத் தயாரா? அந்த இழிவான தசாப்தம் தேசிய இறையாண்மையை குறைத்து குழிதோண்டிப் புதைத்துவிட்டது. தவிர்க்க முடியாத அந்த பின்னடைவு முனைவாக்கம் மற்றும் தீவிரமயமாதலுக்கு நாங்கள் தயாரா?
சமாதானமான ஜனநாயக ஆட்சி மாற்றம் என்கிற ஒரு விடயம் உள்ளது, ஆனால் பல தசாப்தங்கள் பழமையான நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு தற்போதைய ராஜபக்ஸ ஆட்சியினால் என்ன செய்ய முடியும் அது ஒரு அரசாங்க அமைப்பு?
1987ம் ஆண்டில் 13வது திருத்தத்துக்கு சாதகமான குறுகிய தீர்ப்பில் ஸ்ரீலங்கா உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பது, இது ஒரு சீர்திருத்தக் கட்டமைப்பு, ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பு என்கிற வரம்புக்குள் அது மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்குகிறது, ஏனென்றால் நிறைவேற்று ஜனாதிபதிக்குள்ள மாகாணசபையின் மீதான அதிகாரங்கள் ஆளுனர் மூலமாக நிறைவேற்றப்படுகிறது.
ஒரு மைய ஈர்பு;பு விசையை வழங்குகிற காந்தம் போன்ற தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாது போனால், மைய நோக்குக்கு சாத்தியமான மாகாணசபைகள் அதிலிருந்து விலகுவதுடன் அவற்றின் மைய விலகல் திறன் அதிகரி;த்துச் செல்லும் சாத்தியம் தோன்றும். இது கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ள திட்டத்தில் சந்தேகமில்லாமல் தோன்றியுள்ள மற்றுமொரு எதிர்பாராத ஆபத்து.
ஒரு ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பு மாற்றத்துக்கான ஒன்றல்ல. அது ஒரு தலைவரை நாட்டுக்கு, அரசாங்கத்துக்கு - இன்னும் அதிகம் அடிப்படையாக சொன்னால் கூட்டு, சமூகம், பழங்குடி(நீங்கள் மானுட இருத்தியலை விரும்பினால் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) – தேர்ந்தெடுக்க நடத்தப்படுவது. தனது மக்களையும் நாட்டையும் எதிரியிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பு என்கிற முக்கிய பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்த தலைவரை அவரது சேவையிலிருந்து அகற்ற எனக்குத் தயக்கமாக உள்ளது.
ஸ்ரீலங்கா மக்களின் பிரதான எதிரி மகிந்த அல்ல, அதேபோல ரணில் மற்றும் சந்திரிகா ஆகியோர் நிச்சயமாக ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு அவரை விடச் சிறந்த நண்பர்களுமில்லை. ஒரு வலுவான தலைவரை மிகவும் முக்கியமான விடயத்தில் வெற்றியை நிரூபித்த ஒரு வரை வீழ்த்திவிட்டு அவருக்குப் பதிலாக நிரூபிக்கப்படாத ஒருவரை கொண்டு வருவது எனக்குத் தயக்கமாக உள்ளது, ஒரு தைரியமுள்ள நேர்மையான மனிதர் தனது அதிகாரத்தின் பெரும்பகுதியை தோல்வியாளர்கள் என நிரூபித்துக்காட்டிய இருவருக்காக விட்டுக் கொடுப்பது எனும்போது இன்னும் அதிகம் தயக்கமாக உள்ளது.
மாற்றங்கள் தந்திரமானவை மற்றும் இது நிச்சயமாக நாங்கள் யுத்தத்துக்கு பின்னான ஒரு மாற்றக் காலத்தில் அதுவும் ஒரு தேசிய தலைமைத்துவ மட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கவேண்டிய ஒன்றல்ல. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தனது மரணம் வரை தேசிய மற்றும் சர்வதேச அரசியலிலுள்ள முதிர்ந்த அரசியல் அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எனது தந்தையான மேர்வின் டி சில்வா ஒரு முறை இதேபோன்ற நிலமையைப் பற்றி தீர்க்கதரிசனத்துடன் எச்சரிக்கை செய்திருந்தார்.” அளவுக்கு மீறிய சந்தேகங்கள் அளவுக்கு அதிகமான மாறிகளை தரும்” என்று.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
மூலம் : http://www.thenee.com/html/201214.html


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...