எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும்........... கலாநிதி. தயான் ஜயதிலக

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும் அதேவேளை அதில் தோல்வியுற்ற ரணில் மற்றும் சந்திரிகாவுக்கு வெகுமதி வழங்குவது
(1)
 கலாநிதி. தயான் ஜயதிலக
ஸ்ரீலங்கா ஒரு எளிதான தெரிவை சந்திக்கவுள்ளதாக தோன்றுகிறது: தொடர்ச்சி அல்லது மாற்றம், நாங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பது மற்றும் நாங்கள் செல்லும் வழியிலேயே செல்வது அல்லது ஒரு புதிய பக்கத்தை திருப்புவது எனினும் அது ஒரு மாயை.
உண்மை அதுதான், ஸ்ரீலங்கா இரண்டு கோரமான தெரிவுகளுக்கு முகம் கொடுக்கிறது: தொடர்ச்சி மற்றும் தேக்கத்தினால் ஏற்படும் மரணம் அல்லது கட்டுப்படுத்த முடியாத தீவிர சீர்திருத்தத்தினால் ஏற்படும் மரணம், அதை திணற வைக்கும் மையப்படுத்தல் அல்லது மைய விலக்கின் கீழ்நோக்கிய சரிவினால் ஏற்படும் மரணம் என்று கூடச் சொல்லலாம்


இதுவரையுள்ள ராஜபக்ஸவின் நிலைப்பாட்டை பற்றி விமர்சனம் செய்யாத அவரது ஆதரவாளர்கள் கூட முதலாவதாகவுள்ள ஆபத்தைக் காண்கிறார்களில்லை. பொருள்களிலுள்ள நவீனத்துவத்தின் சாதாரண நேர்கோட்டு முன்னேற்றத்தை மட்டும்தான் அவர்கள் பார்க்கிறார்கள். அது ஒன்றில் அரசியல் கல்வி மற்றும் கலாச்சார நவீனத்துவத்துடன் இணையவேண்டிய தேவையில்லை, அல்லது பொருளை அடிப்படையாகக் கொண்ட நவீனத்துவம் தவிர்க்க முடியாதபடி அவர்களின் விழிப்பின்போது மாற்றமின்றி தேவையான ஏனைய நவீனத்துவங்களை தங்களிடம் கொண்டு வரும் என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
கூட்டு எதிரணியின் விமர்சனமற்ற ஆதரவாளர்கள் பொருள்களிலுள்ள நவீனத்துவத்தால் எந்தப் பயனும் இல்லை எனப் பார்க்கிறார்கள் அவர்களுக்கு அவை அனைத்தும் போலியானதும் மற்றும் ஆட்டம் காணும் பொருளாதாரமும் என்றாகிறது. இந்த சிந்தனைப் பள்ளியில் நடக்கும் எந்தவிதமான மாற்றமும் ஏதோ ஒரு வகையில் சிறந்ததுதான் மற்றும் வரப்போகும் ஜனாதிபதி தேர்தல்தான் எங்கள் வாழ்நாளில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்த கிடைத்துள்ள சாத்தியமான கடைசிச் சந்தர்ப்பம்., எனவே எந்த ஆபத்தையும் கையாள நினைப்பது பெறுமதியானது.
இரண்டு முகாம்களிலும் உள்ள பிரதான கருதுகோள்களுடனும் எனக்கு உடன்பாடில்லை. ராஜபக்ஸ ஆட்சியை பற்றி விமர்சனம் எதுவுமில்லாத ஆதரவாளர்கள் அரசியல் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியானது என்று கருதுவது தவறானது. தூய ஸ்திரத்தன்மை மூலம் பாதுகாப்பை சிறந்த முறையில் பெறமுடியும் மற்றும் அந்த ஸ்திரத்தன்மை முற்றான தொடர்ச்சி மூலமே சிறப்பாக உறுதிப்படுத்தப் படுகிறது என்று அவர்கள் சிந்திப்பது தவறு. அவர்கள் தவறு செய்கிறார்கள் ஏனெனில் அவர்களது வகையான ஸ்திரத்தன்மை தேக்கத்தை நோக்கி முன்னேறுகிறது அதன் பதில் விளைவு சீர்கேடு அடைந்துள்ளது அது நாங்கள் சந்தித்து சமாளிக்க வேண்டிய உள்ளக மற்றும் வெளியக இனப் பிரச்சினைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது, இது ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் விரிசல் அல்லது அதிக அழிவு ஏற்படுவதை பிரதிபலிப்பதாக அமையும்.
சாதாரணமாகச் சொன்னால் ஜனநாயகத்தில் மாற்றத்தை ஏற்படு;த்த முயலும் தற்போதைய முயற்சிகள் தோல்வியடையுமானால், அநேகமாக மேற்கு நிச்சயமாக கடுமையான தெரிவுகளை விரிவாக்க முற்படும்;, அதற்கான அடித்தளத்தை மார்ச் 2015 அமைப்பதற்கான தயாரெடுப்புகள் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றன.
எனினும் என்னைப் பொறுத்தவரை வரும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களிக்க முடிவெடுப்பதற்கு இந்த வாதங்கள் போதுமானதாகத் தோன்றவில்லை. எங்களுக்கு தெரிந்த அளவில் இந்தக் கட்டத்தில் எதிரணி பிரகடனப்படுத்தியுள்ள மூலோபாயம் மற்றும் கொள்கைகள் என்பனவற்றை வைத்து மகிந்த ராஜபக்ஸவை வெளியேற்ற நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
மாற்றம் அவசியம், அது கட்டாயமானதும் கூட. ஆனால் எந்த வகையான மாற்றம், எங்கே, எப்போ, மற்றும் யாருக்கு? மானிட சிந்தனையின் சூடானதும் மற்றும் குளிரான நீரோட்டங்கள் இணையும் இறுதி எண்ணிக்கைக்காக – யதார்த்தம் மற்றும் புரட்சிகர வைராக்கியம் என்பனவற்றுக்காக – நாங்கள் லெனினைப் பார்க்க வேண்டும். அவரைப் பொறுத்தவரை  முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவுகோல்”கிட்டோ கோகோ” எனும் ரஷ்ய சொற்றொடர் மூலம் விளக்கப்படுகிறது, அதன் அர்த்தம் “ யார் – யாருக்கு” என்பதாகும். அது பின்வருமாறு விளக்கப்படுகிறது ‘அரச அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டவர் யார் மற்றும் அதற்குப் பதிலாக அதிகாரத்தைப் பெற்றவர் யார்? வென்றது யார் மற்றும் தோற்றது யார்? ஆதாயம் பெற்றவர் யார்?’
தற்போதுள்ள தெரிவுகளை ஸ்ரீலங்காவில் பிரயோகித்தால் அந்த முக்கியமான கேள்விகளுக்கான பதில் பெரும் மனவேதனை தருமளவுக்கு எளிமையானது. சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ல் திரு. சிறிசேன ஒரு சிவில் சமூக கூட்டணியில் உரையாற்றி அதனையும் (மற்றும் தேசிய தொலைக்காட்சி ரசிகர்களையும்) உறுதிப்படுத்தியது, தான் “ஜனாதிபதி ஆசனத்தை கைப்பற்ற நினைப்பது அதில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக அல்ல, ஆனால் துல்லியமாக அதன்; அதிகாரங்களை அழிக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக மற்றும் அதன்பின் நான் வீடு செல்வேன்”
இப்போது அதே தொலைக்காட்சி தனது செய்தியில், ஜனாதிபதி நாற்காலியின் அதிகாரங்களை அவர் யாருக்கு மாற்றப்போவதாக வாக்குறுதியளித்தாரோ அந்த மனிதர்களின் அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டும் வண்ணம், அதே நேரம் அதே நமது கண்களின் முன்னால் அவர்கள் கட்சிமாறும் சங்கீதக் கதிரை விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைக் காட்டியது! எனவே நாங்கள் திரு.சிறிசேனவின் வாக்குறுதியை நம்ப வேண்டுமானால், ஜனாதிபதி நாற்காலியின் அதிகாரங்கள் இல்லாமல் ஆக்கப்படுவதை நாங்கள் எதிபார்க்க முடியும் (மற்றும் அதன் உரிமையாளரான திரு.சிறிசேனவையும்) அது எங்கள் நாட்டு குடிமக்களில் பெரும்பான்மையானோரின் ஜனநாயக ஒப்புதலுடன் (50.1 விகித வாக்குகள் மூலம்) பிணைக்கப் பட்டுள்ளது, மற்றும் ஒரு நிறுவனத்தின் அதிகாரம் இந்த சங்கீத நாற்காலி விளையாட்டால் பாதிப்புக்கும் உள்ளாகிறது.
விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்கிற தேர்தல் முறையை நீக்குவதாலும் மற்றும் கடந்த காலத்தில் இருந்த சௌகரியமான பெரும்பான்மையான தொகுதி முறைத் தேர்வுக்கு திரும்புவதாலும் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும் என்கிற எதிர்வாதம் முன்வைக்கப் படுகிறது, ஆனால் ஜே.ஆர். ஜெயவர்தனா பல தசாப்தங்களாக வெஸ்ட் மினிஸ்டர் அமைப்பின் மூலம் துல்லியமாக பெற்ற அனுபவத்தைக் கொண்டு, பாராளுமன்ற அங்கத்தவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட வலுவானதும் மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளதுமான நிறைவேற்று அதிகாரத்துக்காக வாதாடினார்.
சுய நலிவுற்றதும் எஞ்சிய நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டதுமான ஒரு தலைவர் ஒரு தொங்கு பாராளுமன்றத்தில் அரிதாகவே முதலிடம் பெறுவார், தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் பிரிவினைவாத வலையமைப்பினால் கூட்டாக உட்செலுத்தப்படும்  பணபலத்தின் காரணமாக அரசாங்கம் அதன் விருப்பப்படி இயங்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்வதாக வாக்குறுதி வழங்க நேரிடலாம்.
(தொடரும்)
மூலம் : http://www.thenee.com/html/191214.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...