“பாசாங்குத்தனம் நிறைந்த கொழும்பு உயரடுக்கினர் மகிந்த ராஜபக்ஸவை ஒரு துன்பியல் நாடகத்தின் வில்லனாக.....

“பாசாங்குத்தனம் நிறைந்த கொழும்பு உயரடுக்கினர் மகிந்த ராஜபக்ஸவை ஒரு துன்பியல் நாடகத்தின் வில்லனாக கருதி நிந்தனை செய்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்” - கலாநிதி. தயான் ஜயதிலகா ராமன் மற்றும் ராவணனுக்கு இடையே நடந்த யுத்தத்தில் துயரமான கSri-Lanka-President-Mahindaதாநாயகன் மற்றும் வில்லனது தொடர்ச்சியான ஆதரவாளனாகிய நான் ஒரு இலங்கையன் என்ற வகையில் ராவணனுக்கு ஆதரவளித்து அவரையே பாதுகாப்பேன். நான் ராவணணின் பக்கமே இருப்பேன் ஒரு போதும் விபீஷணானக மாறமாட்டேன். அதனால்தான் நான் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்தேன் மற்றும் அதனால்தான் நான் மகிந்தவுக்கு ஆதரவு அளிக்கிறேன்.



 எனது இனிய நண்பரான ரஜீவ விஜேசிங்கவுக்கு நினைவிருக்கலாம், எனது கொள்கைகள், சித்தாந்தக் கோட்பாடுகள், கட்டமைப்புகள், கொள்கை நடைமுறைகள் போன்றவற்றால், அரசாங்கம் மற்றும் நாட்டிலுள்ள பிரமுகர்களை நான் மிகவும் மோசமாக விமர்சித்த போதிலும், எப்போதும் அந்த விமர்சனங்களிலிருந்து மகிந்த ராஜபக்ஸவை வெளிப்படையாகத் தவிர்த்திருக்கிறேன், அவரது பாவங்கள் இதற்கு விதிவிலக்கு. இது என்னுடைய பகிரங்க உச்சரிப்புகளில் மட்டுமல்லாது தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் சமூக நிகழ்வுகளின்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அப்படியிருக்கும்போது, மகிந்த ராஜபக்ஸவை தோற்கடிப்பது மற்றும் அகற்றுவது பற்றி நான் ஒருபோதும் வாதாடியதில்லை, அப்படிச் செய்திருந்தாலும்கூட அது சஜித் மற்றும் கருவுக்கு நியமனம் வழங்கும் விடயத்தில் மட்டுமே சொல்லியிருப்பேன், (அதாவது சஜித் அல்லது கரு வேட்பாளராகவும் ஏனையவர்கள் பிரதமராகவும்). அப்போதும் கூட சில மாதங்களுக்கு முன்பு கரு ஜயசூரியவிடம் நான் சொன்னது, கொள்கையளவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து அதிகாரத்தை பாராளுமன்றத்திடம் ஒப்படைப்பதற்கு நான் எதிராகவே நிற்பேன் என்று. மேலும் விகிதாச்சார தேர்தல் முறையை பெரும்பான்மை அடிப்படையிலான கலப்பு முறைக்கு மாற்றுவது அல்லது அதை நீர்த்துப்போகச் செய்வது போன்றவற்றையும் கூட நான் பகிரங்கமாக எதிர்க்கிறேன். எந்த நேரத்திலும் மகிந்தவுக்கு பின்னான ஒரு ஆட்சியையோ அதை ரணில் மற்றும் சந்திரிகா போன்ற பிரமுகர்களின் மேலாதிக்கத்தில் விடுவவதைப் பற்றி சாதகமாகவோ அல்லது பாவம் பார்த்தோ நான் நினைத்துப் பார்த்ததில்லை. அத்தகைய ஒரு வாய்ப்பு பிற்போக்கான ஆபத்துள்ள ஒரு வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியாகி பின்னர் டி.பி.எஸ் ஜெயராஜினால் ‘சிறிசேனவுக்கான வாக்கு ரணிலுக்கான வாக்கு’ என்கிற தலைப்பில் மறுபிரசுரம் செய்யப்பட்ட தமரா குணநாயகத்தின் கட்டுரையின் துல்லியமான வாசிப்பை நானும் ஏற்றுக்கொள்கிறேன். மைத்திரி ஜாதிக ஹெல உருமயவுடன் செய்துள்ள உடன்படிக்கை, நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒரு திருத்தத்துக்கான வாய்ப்பை வழங்குகிறது என நான் நம்புகிறேன், அதாவது நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு பதிலாக அதன் அதிகாரங்களை குறைப்பது என்கிற மாற்றம், மற்றும் இதைப்பற்றி நான் டிசம்பர் 7ந் திகதி (ஜனாதிபதி ராஜபக்ஸவுடன் எனது மதிய நேர உரையாடல் நடைபெற்ற அன்று) மைத்திரியுடன் இடம்பெற்ற எங்கள் கலந்துரையாடலின்போது அவரிடமும் சொன்னேன். ஆனால் அந்த நம்பிக்கை, டிசம்பர் 10, மனித உரிமைகள் தினத்தின்போது சிவில் சமூகத்தினருடன் அவர் நடத்திய தனிப்பட்ட பேச்சின் மூலம் பொய்யானது, மைத்திரியின் தேர்தல் விஞ்ஞ}பனம் (14ம் பக்கத்தில் கட்டம் கட்டிய கொட்டை எழுத்துக்களில் ‘நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல்;’ என எழுதப்பட்டுள்ளது) மற்றும் சமீபத்தில் நடைபெற்ற வர்த்தக கருத்தரங்கில் ரணில் வெளியிட்ட விளக்கமும் இதை உறுதிப்படுத்துகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தலை நான் முற்றாக எதிர்ப்பதுடன், அதை தக்க வைப்பதற்காக திருத்தப்பட்ட வடிவத்தையும் (17வது திருத்தத்தை மறுசீரமைப்பு செய்ததையும்) நான் முற்றாக எதிர்க்கிறேன். ஜெயவர்தனா ஆட்சிக்கு ஆயதம் ஏந்திய தீவிர இடதுசாரிகள் எதிர்ப்பு காட்டிய வருடங்களில், அதன்போது பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பனவற்றின் கீழ் நானும் தண்டிக்கப் பட்டிருந்தேன் ஆனாலும் அப்போது கூட நிறைவேற்று ஜனாதிபதி முறை எங்களது அரசியல் மற்றும் கருத்தியல் தாக்கத்துக்கு இலக்கானதில்லை. அநேகமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் வேறு இடங்களிலுள்ள அனைத்து இடது மற்றும் முற்போக்கான நிருவாகத்தவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஆதரிப்பவர்களாகவும் மற்றும் தற்போது பதவி வகிப்பவர்களாகவும் உள்ளார்கள். நிறைவேற்று ஜனாதிபதி முறை என்பது தாராண்மைவாதம் – முதலாளித்துவ வாதம் ஆகிய இரண்டுவித சிந்தனைகள் மற்றும் தீவிரவாதம் என்பனவற்றின் முற்போக்கான அரசியல் சிந்தனைகளின் புரட்சியினால் உருவாக்கப்பட்ட விளைவு, அல்லது உப விளைவு ஆகும். எனவே புரட்சிகரமான அரசியல் பாரம்பரியம் கொண்ட அந்த சமூகங்களின் சாட்சியாக, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா என்பன உள்ளன. இதற்கு முரணாக ஒப்பீட்டளவில் பிரித்தானியாவின் புரட்சியற்ற பழமைவாத பாரம்பரியத்துடன் தொடர்புள்ள பாராளுமன்ற அமைப்பு உள்ளது. எனக்கு வெகு தெளிவாகத் தெரிவது, 2014 டிசம்பர் 10ன்படி அதாவது மைத்திரியுடனான எனது கலந்துரையாடல் நடந்து மூன்று நாட்களின் பின்னர், அதி விரைவாக (100 நாள்) நிறைவேற்று ஜனாதிபதி நிர்வாகம் மற்றும் அதிகாரத்தின் சரணடைவு பற்றிய ஒரு தீவிர அர்ப்பணிப்பு உருவாகியுள்ளது, மற்றும் இப்படியான ஒரு நிலையில் நாம் காணக்கூடியது அநேகமாக நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக இருக்கப் போகிறவர் மைத்திரி அல்ல ஆனால் துல்லியமாக ரணில் அல்லது சந்திரிகாதான் என்பதையே. நீண்ட நாட்களாக அவதானித்து மற்றும் கொடுக்கப்பட்ட எனது கருத்துக்களின்படி, குறைவான தீமைகள் உள்ளதான மகிந்த ராஜபக்ஸ பக்கத்தை ஆதரிப்பதற்கு என்னிடம் இரண்டு பெரிய காரணங்கள் உள்ளன: - (1) நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் (2) ரணில், சந்திரிகா குழு. கோட்டபாயவை பொறுத்தவரை என்னுடைய கொள்கை விமர்சனங்கள் அப்படியே இரந்தாலும்கூட, ஆகக் குறைந்தது பிரிவினைவாத பாசிசவாதிகளான மேற்கத்தைய சார்பு சமாதானக் குழுவினரான ரணில் மற்றும் சந்திரிகா போல இல்லாமல் சந்தேகமின்றி; அவர் ஒரு நாட்டுப் பற்றாளர் ஆவார், மைத்திரி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து, ஏப்ரல் 20 ம் திகதியளவில் பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையிடம் அதிகாரத்தைக் கையளித்ததின் பின்னர் ரணில் மற்றும் சந்திரிகா ஆகியோரின் கைகள் ஓங்கியிருக்கும். முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும், அமெரிக்க குடியரசு கட்சி மற்றும் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி என்பனவற்றின் தலைமையின் கீழுள்ள உலகளாவிய வலது, மற்றும் சர்வதேச ஜனநாயக அமைப்பு என்பனவற்றின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ரணில் விக்கிரமசிங்க உள்ளபோது எனது தீர்மானத்தை ஆச்சரியப்பட்டு எதிர்க்க யாரால் முடியும், அதேவேளை மகிந்த ராஜபக்ஸ தேசிய இறையாண்மையை வலியுறுத்துவதில் தீவிர ஆதரவாளராக உள்ளார். 1990 களில் ரணில் சர்வதேச ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து எல்.ரீ.ரீ,ஈ பற்றிய ஐதேக வின் நிலைப்பாட்டை லியாம் பொக்ஸின் உடன்படிக்கையின்படி மாற்றியது முதல், ரணில் மீதான எனது விமர்சனம் மாறாமலே இருந்து வருகிறது. ரணிலை தொடர்ச்சியான நிலையிலேயே சித்தாந்த மற்றும் ஐதேகவின் வலதுசாரி வேலைத்திட்டங்களின் வலது மத்திய நிலையில் வைத்திருப்பதை ரஜீவவும் ஏற்றுக்கொள்வார் (பிரேமதாஸவின் ஜனாதிபதி காலமும் மற்றும் அதற்கு அடுத்த காலமும் தவிர). ஜே.ஆர் ஜெயவர்தனாவின் காலத்தில் ரணிலின் நடத்தையை பற்றி ரஜீவதான் எங்களுக்கு மிகவும் ஞ}பகமாக நினைவு படுத்துவார், அந்த நடத்தை அவரின் மதிப்புக்குரிய மாமனாரான ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்காவையே திகைப்படையச் செய்தது. அதிர்ஷ்ட வசமாக பட்டலந்தவுக்கு முன்பே அவர் காலமாகிவிட்டார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை என்பனவற்றைப் பொறுத்தவரை நான் எனது தெரிவை மகிந்த மற்றும் ஜி;எல் ஆகியோருக்கு சார்பாகவே எடுப்பேன் - மற்றும் ஆம் அந்த கலவையில் கோட்டாவை கூடச் சேர்த்துக் கொள்ளலாம் - மாறாக ரணில் அல்லது சந்திரிகாவின் கீழிருந்த மங்கள சமரவீரவை அல்ல, விசேடமாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மைத்திரி கூட்டு சேரா அல்லது அணி சேராக் கொள்கை பற்றி குறிப்பிடத் தவறியுள்ள நிலையில், மீண்டும் ஒரு முறை எதிர்க்கட்சி பிரசாரம் சீனா மற்றும் அதன் மக்கள் மீது அச்சமும் வெறுப்பும் அடையும் சைனோபோபியாவின் அடையாளத்தை கொண்டுள்ளது. பிரேமதாஸவின் மீது குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது நான் எடுத்த நிலைப்பாடு பற்றி வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதே கட்டாயம்தான் - மாறாக எந்த பரிசோ அல்லது தண்டனையோ அல்ல – என்னை தடைகளைத் தாண்டி வெளிப்பட்டு மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு அளிக்க வைத்தது. நான் நினைக்கிறேன் மகிந்தவுக்குப் பதிலாக சஜித் பிரேமதாஸவை தேர்தல் மாற்றீடு செய்வதற்கு நான் ஆதரவளித்துள்ளது எப்போதும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது, அதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதையும் ரணில் மற்றும் சந்திரிகாவை வெற்றியாளராக்குவதற்கும் மைத்திரிபால சிறிசேன விரும்பியிருக்காவிட்டால் நிச்சயமாக அவரையும் நான் கருத்தில் கொண்டிருப்பேன். ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அதைப்பற்றியதும் மற்றும் அதேநேரத்தில் தனிப்பட்ட, சித்தாந்த மற்றும் கருத்தியல் மீதான குறிப்பும் தேவை, பிரேமதாஸவை கருதியது போலவே மகிந்தவையும் பாசாங்குகாரர்களான கொழும்பின் மேல்தட்டு வர்க்கத்தினரால் நிந்திக்கப்படும் ஒரு துயரமான கதாநாயகனாகவே நான் கருதுகிறேன். மற்றும் பிரேமதாஸ மற்றும் மகிந்த ஆகியோருக்கான எனது ஆதரவு பற்றி, எனது சித்தாந்த ரீதியான மனநிலை பற்றி சரியாக மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ராதிகாவின் பிறந்த நாள் விழாவில் வைத்து நாங்கள் மேற்கொண்ட முதல் முக்கிய உரையாடலுடன் ஒத்திருப்பதை ராஜீவ விஜேசின்கா நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். எனது முன்னோக்கு மற்றும் விரிவான கருத்துரு என்பனவற்றில் பிரதான பிரிவானது நாடு – மக்கள் - கதாநாயகன் ஆகிய மூன்று விடயங்களில் தங்கியுள்ளது, இந்த மூன்று வகையும் அரசியல், தத்துவம் அதேபோல இலக்கியம் என்பனவற்றின் பழமையான வேர்களைக் கொண்டவை. ரஜீவ மற்றும் எனக்கும் இடையே உள்ள அரசியல் பிரிவினை வழிகள், எனக்கும் மற்றும் முன்னாள் கருத்தியல் தோழர்களுக்கும் இடையே உள்ளதைப் போல உள்ளது, அவர்களிடையே 2005ல் மகிந்த தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ததிலிருந்து அவருக்கு முன்னரங்க எதிர்ப்பை வெளிப்படுத்திய சீரான வரலாற்றைக் கொண்ட நன்கு மதிக்கப்பட்ட வர்ணனையாளர்கள் பின்வரும் தன்மையானவர்களாக இருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: அவர்களது முன்னோக்கு அடிப்படையில் சிவில் சமூகம், மற்றும் ஆட்சியின் சலுகைகள் பிரச்சினை, பற்றியதாக இருந்த அதேவேளை என்னுடையது நாட்டை மையப்படுத்தியதாகவும் மற்றும் அது நாடு மற்றும் தனிப்பட்ட (துயர) கதாநாயகன் ஆகியோரின் இயக்கவியல் அச்சில் செயல்படுகிறது. ஒரு கத்தோலிக்க பாடசாலையின் உற்பத்தியும் மற்றும் ஒரு இத்தாலிய கிறிஸ்தவ சபையான ஜேசுயிற் மூலம் வழிநடத்தப்பட்டவரும் மற்றும் வரலாற்று ஆசிரியருமான பிதா விட்டோ பேர்ணியோலா (காலஞ்சென்ற எனது தாய் லக்ஸ்மியின் ஆன்மீக ஆலோசகர்), மைத்திரி – சந்திரிகா – ரணில் மீதான எனது அணுகுமுறை இக்னேசியஸ் லயோலா மேற்கொண்ட புரட்டஸ்ட்டண்ட் சீர்திருத்த கிளர்ச்சியை போலுள்ளது என்கிறார். நான் பரிசுத்த பாப்பரசருக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பதுடன் ‘கருத்துக்களின் யுத்தத்தில்’ வலுவான தலையீட்டை செலுத்தி அவருக்கு உதவுவேன். தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...