வாங்கிய காசுக்காக சலங்கையைக் கட்டி ஆடும் கூட்டம் - வடபுலத்தான்

என்ன மாதிரியெல்லாம் தமிழ்ச் சனங்களை ஏமாற்றுகிறார்கள் இந்தப் பொ.iyngaranesan sritharanஐங்கரநேசனும் பொல்லாத சிறிதரனும் என்று கோபப்படுகிறார்கள் சனங்கள். கோபம் என்றால் அப்படியொரு கோபம். இருக்காதா பின்னே, தங்களுடைய சோற்றில் மண்ணை அள்ளிப் போடுகின்றவர்களைக் கண்டால் யாருக்குத்தான் கோபம் பொத்துக் கொண்டு வராது? இவர்கள் இருவரும் இவர்களுடைய கையாட்களும் சொல்கின்ற பொய்களைக் கொஞ்சம் நீங்களும் அறியுங்கள். 'ஆட்சி மாற்றம் கட்டாயம் வரப்போகிறது. நிச்சயமாக மைத்திரிதான் வெல்லப்போகிறார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வடக்குக் கிழக்கில் படைக்குறைப்பைச் செய்யப்போகின்றன. மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவோம். மன்னிக்கவும் தூக்குக்கு அனுப்புவோம். 100 நாட்களில் தமிழீழத்துக்கு நிகரான தீர்வு கிட்டும்....' இப்படி ஊர் ஊராகப் போய்ச் சனங்களைத் திரட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இது எவ்வளவு பொய்யான விசயம்? பொது அணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவோ, பொது அணியில் உள்ள ஏனைய கட்சியினரோ, பிற தலைவர்களோ இதைப்பற்றியெல்லாம் வாயே திறக்கவில்லை. இந்தப் பொது அணியில் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிற மனோ கணேசன் கூட இவற்றைப் பற்றிக் கதைக்காமல் அடக்கி வாசிக்கிறார். பொது அணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறந்தும் கூட இந்த விசயங்களைப் பற்றி ஒரு விடயம் கூட பேசப்படவில்லை. இதைவிட பொது அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், '100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத்திட்டங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில் 69 ஆவது விடயம் என்ன தெரியுமா? 'தற்போது புல்லு வெட்டுதல், பாதைகளைக் கூட்டுதல், வடிகால்களைச் சுத்திகரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களை அச்சேவையில் இருந்து விடுவித்து, இராணுவ சேவையின் வேலைத்திட்டங்களுக்கு மட்டும் ஈடுபடுத்துதல்' - என்று இருக்கிறது. அப்படியென்றால் இதனுடைய அர்;த்தம் என்ன? ஐயா...! ஐங்கரநேசனாரே! தம்பி சிறிதரனே....! இதற்கொரு விளக்கத்தைச் சொல்லுங்கோ பார்ப்பம்? துவக்கும் கையுமாகத் திரிந்த இராணுவத்தை – பீரங்கிகளோடு நின்ற படையினரை இந்த அரசாங்கமே – மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே இந்த மாதிரி பொதுச் சேவைகளில் ஈடுபடுத்தியது. அதாவது கையில் இருந்த துவக்குக்கும் பீரங்கிக்கும் பதிலாக இந்த மாதிரிப் பொதுச் சேவைகளுக்கான கருவிகளைக் கொடுத்து மக்கள் நலத்திட்டங்களில் படையினரை ஈடுபடுத்தியது. போருக்குப் பிந்திய நாடுகளில் இப்படித்தான் படையினர் மீள் கட்டுமானப் பணிகளிலும் பொதுச் சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதுதான் உலக வழமையும். ஆனால், இது வேண்டாம் என்றும் மீண்டும் படையினரை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதே தமது ஆட்சியின் நோக்கம் - திட்டம் என்றும் பொது அணி திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால், யாரோடு படை நடவடிக்கை? சீனாவோடா? இந்தியாவோடா? அல்லது தமிழர்களோடுதானா? இதற்கான விளக்கத்தை இந்த இரண்டு பேரும் சொல்ல வேணும். அல்லது இவர்களுக்குப் பின்னால் திரிகிற ஆட்கள் சொல்ல வேணும். இதைப்போல இதே விஞ்ஞாபனத்தில் 75 ஆவது விடயம் பின்வருமாறு சொல்கிறது- 'சட்டத்திற்குப் புறம்பாக தங்களின் குடியிருப்புகளில், காணிகளில் பல்வேறு காரணங்களைக் கொண்டு அவற்றிலிருந்து நீக்கப்பட்ட சகல மக்களுக்கும் நிவாரணம் அளித்தல்' இதை வெளிப்படையாகச் சொல்லாமல் மைத்திரி மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். ஏன் அவர் இதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாமே! படையினருக்காக பறிமுதல் செய்யப்படும் காணிகளுக்கு நிவாரணம் - நட்ட ஈடு வழங்கப்படும் என்று. காணிகளைக் கொடுப்பதற்குப் பதிலாக நிவாரணம் மட்டுமே கொடுக்கப்படும் என்று தெளிவாகச்சொல்லியிருக்கிறார் மைத்திரி. ஆனால், இதையெல்லாம் மறைத்துக் கொண்டு வாங்கிய காசுக்காக சலங்கையைக் கட்டி ஆடுகிறார்கள் இந்தத் 'துரோகக்' கும்பல். http://www.thenee.com/html/311214.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...