வடக்கு கிழக்கு - 13 வது திருத்தச் சட்டம் - தேசம் சஞ்சிகை கலந்துரையாடல்-29/06/2008

"13 வது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும் , களைவதற்கான விடயங்கள் ஆராயப்ப வேண்டும் ": சையட் பசீர் (ஸ்ரீ லங்கா முஸ்லிம் மையத்தின் முன்னணி உறுப்பினர் , மனித உரிமைகள் சட்டத்தரணி ) 

இந்த விவாதம்  20 வருடங்களாக விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இருக்கவில்லை .இப்போது கிழக்கில் ஒரு மாகான சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான விவாதங்கள் கிளம்பி உள்ளது. 13 வது திருத்தச்சட்டம் பற்றிய விமர்சனங்களை வைக்க 20 வருடங்கள் இருந்தது. ஆனால் வைக்கப்படவில்லை, அதனை ஏற்படுத்தியதும் மீண்டும் கிழக்கு மாகாணம் தான்
 


கிழக்கு மாகாணத்தில் ஒரு ஆட்சி அமைக்கப்பட்டு உள்ளது மக்களால் தெரிவு செய்யப்பட்டு உள்ளது . இது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால் இந்த ஆணையை வழங்கிய மக்களால் எவ்வாறு பார்க்கப்படப் போகின்றது என்பதுதான் என்னுடைய கேள்வி. இந்த ஆட்சி தாயகக் கோட்பாடு , சுயநிர்ணய உரிமை எல்லாவற்றையும் சர்ச்சைக்குரியதாக்கி உள்ளது. இவை முஸ்லிம்களை புறக்கணித்து , முடிந்தால் புதைகுழிக்கு அனுப்பி , அங்கிருந்து விரட்டிய புலிகளுடைய நடவடிக்கையால் முஸ்லிம் தாயகம் முஸ்லிம்களுடைய சுயநிர்ணய உரிமை என்பன வலுப்பெற்றிருந்த காலம் இருந்தது. இதற்கு அப்பால் இப்போது தமிழ்-முஸ்லிம் மக்கள் வாக்களித்து ஒரு ஆட்சியை உருவாக்கி இருக்கிறார்கள் .இந்த ஜனநாயகப் போக்கு தமிழ் மக்களுக்கு கருத்தியல் வழிப்பட்ட அசைவினை ஏற்படுத்த வழியை ஏற்படுத்தி உள்ளது.
 


இந்த 13 வது திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் அதனை களைவதற்கான விடயங்கள் ஆராயப்பட வேண்டும் .இதில் டக்லஸ் தேவானந்தா அவர்களும் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை ஏற்படுத்தி 13வது திருத்தத்தை அமுல்படுத்த முயற்சிக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்.
 

நாம் இலங்கைக்கு போனதற்கான நோக்கம் கிழக்கு மாகாணசபையின் நிர்வாகம் எவ்வாறு அமைந்திருக்கிறது அங்குள்ள தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவுகள் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை நேரில் காணவே . மேலும் அமைக்கப்பட்ட நிர்வாகத்தில் பங்கேற்று உள்ளவர்களுக்கு இந்த தீர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் உள்ளதா என்பதையும் கேட்டு அறிந்து கொண்டோம். அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடினோம்.இவை பற்றிய அறிக்கைகள் நிச்சயம் வெளி வரும்.
 

தமிழர்களும் முஸ்லிம்களும் இன்று தங்கள் கசப்பான அனுபவங்களை மறந்து ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள் . அதற்கு அடிப்படையாக மாகாணசபையை பலப்படுத்த வேண்டும் .கூடுதலான அதிகாரங்களை பெற முயற்சிக்க வேண்டும் , அதற்கான விடயங்கள் ஆராயப்படுகிறது. கிழக்கில் இவாறான ஆய்வுகள் தீவிரமாக இடம்பெறுகிறது. அரசியல் கட்சியகுள் மட்டுமல்ல பல்வேறு ஸ்தாபனங்களும்  13வது திருத்தத்தை படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கான தேவை ஒன்று உருவாகி இருக்கிறது.  

இந்த கிழக்கு அரசை 60 வீதமான மக்கள் வாக்களித்து உருவாக்கி இருக்கிறார்கள் .இது  தேர்தலிலும் அதிகமானவர்கள் வாக்களித்து உள்ளனர்.இவர்கள் எவ்வாறு தங்களை முன்னோக்கி நகர்த்தப் போகிறார்கள் என்பதே முக்கியம். இது தோல்வியடைந்தால் அதற்க்கான  விலையை இலங்கை அரசு செலுத்த வேண்டி இருக்கும். கடந்த கால போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதில் அர்த்தம் இல்லை. அது வெறும் குறும் தமிழ் தேசியவாத போராட்டமாக தோல்வி அடைந்த ஆயுதப் போராட்டமாகவே உள்ளது.


நன்றி : தேசம் சஞ்சிகை

அரசியல் கலந்துரையாடல் : வடக்கு கிழக்கு - 13 வது திருத்தச் சட்டம் - குறித்து தேசம் சஞ்சிகை-29/06/2008 அன்று நடத்திய கலந்துரையாடலில் கூறிய கருத்துச் சுருக்கம். 

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...