எரியிற வீ ட்டிலை புடுங்கிறது இலாபம் என நினைக்கும் அரசாங்கம் ! - புனிதன்


இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால்
மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் பலர் உயிரிழந்தும்ää
ஏராளமானோர் காயமடைந்தும் உள்ள நிலையில், நாட்டு மக்கள் மத்தியில்
பெரும் சோகமும் பயமும் கலந்த ஒரு சூழல் நிலவுகின்றது.
குறிப்பாக, “இது முடிவல்ல, தொடக்கம்” என ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ள
நிலையில்ää இலங்கையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அத்துடன், இலங்கையில் நடத்தப்பட்ட
தாக்குதல் சிரியாவில் ஐ.எஸ்.அமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்கு
பதிலடி என்று ஐ.எஸ். தலைவர் அறிவித்துள்ள நிலையிலும், அண்மையில் நியுசிலாந்தில் இரு பள்ளிவாயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி என்றும் செய்திகள் வரும் சூழ்நிலையில்,  இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகின்றது.



இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகின்றது. அதாவ, பயங்கரவாதிகள் ஒரு நாட்டுக்குள் வரையறுக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் நாடு கடந்தவர்கள். அவர்கள் உலகம் முழுவதும் செயற்படுவதுடன், எங்கும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமையுடனும் இருக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் இருக்கின்ற அனைத்து  இனங்களையும்
சேர்ந்த மக்கள் மிகுந்த ஒற்றுமையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டிய
தருணம் இது. ஆனால் இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் ஏற்பட்ட பேரழிவைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி ஆளையாள்
குற்றஞ்சாட்டுவதிலும், ஆளுக்காள் சேறு பூசுவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகää ஆட்சியில் உள்ள அரசாங்கம் தனக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை ஊதாசீனம் செய்து இந்தப் பேரழிவுக்கு மறைமுகமாக
உதவியது என்ற வகையில் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இருக்க
வேண்டும். ஆனால் அரசு அவ்விதம் செய்யாதது மட்டுமின்றி, இந்தச்
சூழ்நிலையைப் பயன்படுத்தி தனது ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக்
கொள்ளும் கைங்கரியங்களில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை
நீக்கிவிட்டு அதன் இடத்தில் அதைவிட மிகவும் மோசமான சட்டம் ஒன்றைக்
கொண்டு வருவதற்கு எத்தனித்து வரும் இன்றைய அரசாங்கம்ää தற்போது
நடைபெற்றுள்ள குண்டுத் தாக்குதல்களை அதற்குச் சாதகமாகப்
பயன்படுத்த எத்தனிக்கிறது.

இந்தக் குண்டுத் தாக்குதல்கள் பற்றி கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கää புதிய பயங்கரவாத தடைச் சட்டம் ஏற்கெனவே அமுலில்
இருந்திருந்தால் இந்தத் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் எனக் கூறியிருப்பது அரசின் அந்தரங்க நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. இது அவர் புதிய சட்டத்தை இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்த எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் புதிய சட்டம் இருந்தால் எப்படி அது
பயங்கரவாதிகளின் செயற்பாட்டைத் தடுத்திருக்கும் என்று கேட்டால் அவரால் பதிலளிக்க முடியாது.

ஏனெனில்ää எந்தவொரு சட்டமும் செயற்பாடு நடந்தபின் அதைச்
செய்தவரைத் தண்டிக்க உதவுமே தவிர, அதைச் செய்வதற்கு முன் அதனால்
அதைத் தடுத்துவிட முடியாது. பிரதமரின் இந்த நோக்கத்தைப் புரிந்து
கொண்டதால் போலும்ää கொழும்பு மாவட்ட பேராயர் மதிப்புக்குரிய மல்கம்
ரஞ்சித் அவர்கள்ää “புதிய சட்டம் எதற்காக? தற்போது நடைமுறையில்
உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து
பயன்படுத்தலாமே?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரம் ஒருபுறமிருக்கää ஐ.தே.க. அரசாங்கம் இன்னுமோரு விடயத்திலும் அந்தரங்க நோக்கத்துடன் செயற்படுவதைக் காண முடிகிறது.
அதாவதுää முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க முற்படுகிறது. அவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதில் ரணில் அரசு ஏன் அக்கறை காட்டுகிறது என்பது புரியாத விடயமல்ல. 2009 இல் போர் முடிவுக்கு வந்தபின்னர், போரில் அரசு
வெற்றியீட்டுவதற்கு காரணமாக இருந்த அரசியல் தலைமையையும்ää
உண்மையான இராணுவத் தலைமையையும் இருட்டடிப்புச் செய்து,
பொன்சேகாவே போரின் வெற்றிக்கு முழுக் காரணமானவர் என்ற ஒரு

பிரச்சாரத்தை முன்னெடுத்து, அவரை 2010 ஜனாதிபதி தேர்தலில் போது
வேட்பாளராக நிறுத்தியது ஐ.தே.க. போரால் மிகவும் மோசமாகப்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதியான தமிழ் தேசியக்
கூட்டமைப்பும் ஆதரித்தும் கூட பொன்சேகா தோற்றுப்போனார்.
அதன் பின்னர் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகாää
பின்னர் தனது கட்சியைக் கலைத்துவிட்டு ஐ.தே.கவில் சங்கமமாகிவிட்டார். அதன் பின்னர் எதிர்க்கட்சியினரைத் துரத்தும் வேட்டை நாயாக பொன்சேகா ஐ.தே.கவினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றார்.

எமற்கெடுத்தாலும் ராஜபக்ச குடும்பத்தைக் கடித்துக் குதறுவதையே
பொன்சேகா தனது தொழிலாகச் செய்து வருகின்றார். இந்தச் சூழ்நிலையில் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்தால் அவர் எதிர்க்கட்சியினரை கூடுதலான பலத்துடன் வேட்டையாடுவார் என்பதுதான்
ஐ.தே.கவின் திட்டம். அதை மறைத்து பொன்சேகா அந்தப் பதவிக்கு
நியமிக்கப்பட்டால், பயங்கரவாதத்தை கொஞ்ச நாட்களில் நாட்டிலிருந்து
விரட்டியத்துவிடுவார் என சால்ஜாப்பு காட்டுகிறது அரசாங்கம்.
ஆனால் அவரோ தான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டால் இரண்டு
வருடங்களில் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்து விடுவதாகத
தன் கையாலாகாத்தனத்தை பறைசாற்றி நிற்கிறார்.

இப்பொழுது நமது நாட்டு மக்கள் இரண்டு விதமான பயங்கரவாதத்தை
எதிர்நோக்கி நிற்கின்றனர். ஒன்று,வெளிநாட்டு அதரவுடன் செயற்பட்டு
வரும் மதப் பயங்கரவாதம். இன்னொன்றுää ஐ.தே.க. அரசால் நாட்டு
மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்போகும் அரச பயங்கரவாதம். இரண்டுமே
மக்களுக்கு நாசம் விளைவிக்கக் கூடியவை. இதில் அரச பயங்கரவாதம்
கூடுதலான நாசத்தை விளைவிக்கக் கூடியது. ஏனெனில், வெளியில் இருப்பவன் செய்யும் அநீதியை விட ஆட்சியில் இருப்பவன் செய்யும் அநீதி
ஆபத்தானது.

மூலம் : வானவில் இதழ் 101 -2019

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...