இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21 ஆம் திகதி) இஸ்லாமிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிலரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்து லங்கா சமசமாஜக் கட்சி பின்வரும் அறிக்கையை விடுத்திருக்கிறது:


இந்த தாக்குதல் குறித்து குற்றப் புலனாய்வுப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டு அவர் (அதிமுக்கியஸ்தர்கள் உட்பட)
சம்பந்தப்பட்ட பாதுகாப்பு உத்தியோகர்களுக்கு அறிவித்திருந்தார்.
ஏப்ரல் 11 ஆம் திகதியிட்ட கடிதத்தில் தாக்குதலுக்கான திகதி பற்றியும்,
தாக்கப்படப்போகும் இலக்குகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கோ, தாக்குதலுக்குள்ளான ஹோட்டல் நிர்வாகிகளுக்கோ அறிவிக்கப்பட்டு இருக்கவில்லை. அவ்வாறு
அறிவிக்கப்பட்டிருந்தால் உயிர் இழப்புகளையும் சேதங்களையும்
தவிர்த்திருக்க முடியும். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இதுபற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறகின்றது. ஆனால் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தகப்பனார் மூலம் இது பற்றி முன்னரே தான் அறிந்திருந்தாகவும், அதனால் தான் அன்றைய காலை பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் உத்தியோகபூர்வ தகவல்  வழங்கப்பட்டிருக்காவிடினும் அவர் 


இந்த விடயத்தை பிரதமருக்கோ  அமைச்சரவைக்கோ ஏன்
தெரிவிக்கவில்லை?  அரசாங்கத்துக்கு இது தெரியுமென்பது தெளிவான விடயமாகையால் அது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டும். கேள்வி என்னவென்றால், அது ஏன் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கையை
எடுக்கவில்லை. புலிகள் இல்லாத சூழலில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத
சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, 1983 கறுப்பு யூலையில் அரங்கேற்றியது போன்ற ஒரு நிகழ்வை அரங்கேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு இருந்ததையே இது காட்டுகிறது. மக்களின் கோபத்துக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் தேர்தல்கள் நடத்துவதை சாத்தியமற்றதாக்குவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த முழு தாக்குதல்களும். அமெரிக்காவின் சிஐஏ காரணம் காட்டும் வெளிநாட்டில் நடைபெற்ற சம்பவங்களுடன் ஒத்த மாதிரியைக் கொண்டுள்ளன. அமெரிக்காவினதும் அதன் சிஐஏவினதும் சிந்னைக்குழாம் அரசாங்கத்தின் உதவியுடன் இங்கு செயற்படுவது நன்கு தெரிந்த விடயம்.

தேர்தல்களை நடத்தாமல், கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தின்
உதவியுடன் பொலிஸ் இராஜ்யம் ஒன்றை உருவாக்கி, எவ்வித இடையூறுமின்றி இலங்கையை அமெரிக்காவின் நவ காலனியாக மாற்றுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தைத்
தொடர்வதற்கான முயற்சியே இத்தாக்குதலின் பின்னணியாகும்.
No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...