இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடாதீர்கள் : மேற்கு நாடுகளிடம் கொழும்பு பேராயர் வேண்டுகோள். !!

Image result for ranjith malcolm

இலங்கையில் மதம் மற்றும் இனம் சம்பந்தமான சில பிரச்சினைகள்
இருக்கின்றன. இவை எமது மதங்கள் போதித்த ஆன்மீக வழிகாட்டல்கள் மூலம் தீர்வு காணப்படக்கூடியவை. இந்த விடயங்களில் தேவையில்லாத அந்நியத் தலையீடுகள் விரும்பத்தகாதவையாகும். இவ்வாறு கூறியிருக்கிறார் கொழும்பு மறை மாவட்டப் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித். வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ தேரோவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கொழும்பு பேராயர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிடுகையில் மேற்கு நாடுகள் இலங்கை ஒரு தீவிர நாடு என சிணுங்கிக் கொண்டும், முனகிக் கொண்டும்,  தமது பொருளாதார பலத்தைச் சக்திப்படுத்துவதற்காக நாசகார விடயங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாடுகள் இலங்கையை மேலும் சீரழிக்காமல் தமது சொந்த விவகாரங்களைக் கவனித்துக் கொள்வது நல்லது.
வெளிநாடுகள் இலங்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக
நடைபெறும் சில சம்பவங்களை வைத்துக் கொண்டுää இலங்கையில்
வாழும் மக்கள் காட்டுமிராண்டிகள் என முத்திரை குத்தி இலங்கையின்
பிம்பத்தைக் கெடுக்கப் பார்க்கிறார்கள். இது ஒரு மோசமான நிலைமையாகும்.

இலங்கையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சார்ந்தவர்கள்
வாழ்ந்த போதிலும் அவர்கள் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர். ஒருசில சம்பவங்களைத் தவிர எந்தவொரு மதமும் தாக்குதலுக்காக இலக்கு வைக்கப்படுவதில்லை. மக்கள் மத்தியில் உள்ள வேற்றுமைகள் காரணமாகவே சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அதை வைத்துக் கொண்டு இந்த நாடு மற்றைய மதங்கள் மீது வேறுபாடு காட்டும் அபாயகரமான ஒரு நாடு என படம் பிடித்துக் காட்ட முயல்கின்றனர். இந்த மாதிரியான சிறிய விடயங்கள் மற்ற நாடுகளிலும் இல்லாமல் இல்லை.
ஆனால் சில நாடுகள் இத்தகைய சம்பவங்களை வைத்துக் கொண்டு
இலங்கை ஒரு தீவிரவாத நாடு என்றும்,  பௌத்த மதம் ஒரு தீவிரவாத
மதம் என்றும் காட்ட முயல்கின்றனர்.

நாங்கள் இந்த நாட்டில் மத நல்லிணக்கத்துடன் வாழ்கின்றோம்.
மற்றவர்களின் தேவைக்காக நாம் பிரிந்து நிற்க முடியாது. இந்த நாட்டை ஒரு மரத்துக்கு ஒப்பிட்டால் பௌத்த மதம் அதன் அடிமரம் போன்றது. மற்றைய மதங்களைப் பின்பற்றுபவர்களால் உருவாக்கப்பட்டுள்ள கிளைகள் அடி
மரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் சமாதானமாக
இந்த நாட்டில் வாழ்கின்றோம்.

எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவையும்,  பொய்யானவையும் என நாம் உலகின் முன் பிரகடனம்
செய்கின்றோம். எனவே எங்கள் மீது அவ்வாறான குற்றச்சாட்டுகளைச்
சுமத்தாதீர்கள். எமது மதங்கள் வழங்கும் வழிகாட்டலின் அடிப்படையில் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும். எனவே எமது நாட்டை காட்டுமிராண்டித்தனமான நாடு என்று சொல்லாதீர்கள். எம்மிடம்
காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரம் இல்லை. அப்படிச் சொல்பவர்கள்
எமக்கிடையில் உள்ள பிரச்சினைகளைப் பயன்படுத்தி தமது ஆயுதங்களை
எமக்கு விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது. அவர்கள் எமது நாட்டின்
அடையாளத்தை மதிக்க வேண்டும்.

இதை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். சமாதானம் மற்றும் சகவாழ்வு சம்பந்தமான பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். நீங்கள் எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டிய தேவை இல்லை.
உங்களால் முடிந்தால் எமக்கு உதவுங்கள். முடியாவிட்டால் உங்கள்
விவகாரங்களைக் கவனியுங்கள். எமது நாட்டுக்கு வந்து நிலைமைகளைக்
குழப்ப வேண்டாம். இதையே நாம் உலகத்துக்குச் சொல்ல விரும்புகிறோம்.
இவ்வாறு கொழும்பு மறை மாவட்டப் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித்
தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : வானவில் இதழ் 97 ஜனவரி 2019 

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...