ஹக்கீமுக்கு ஏற்பட்ட காலம் பிந்திய ஞானோதயம்! -இத்திரீஸ''இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ அமைப்பினால் கொண்டுவரப்பட்ட
பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளாமை சர்வதேச ரீதியாக தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது.
பாலஸ்தீனம் தொடர்பிலான எமது நிலைப்பாட்டை நாம் அறிவிக்க வேண்டும். பாலஸ்தீனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. இவ்விரு நாடுகளுக்குமிடையிலான நட்பு பலமாகக் காணப்படுகிறது. அந்நாட்டு மக்களின் குறிக்கோள்கள் தொடர்பாக எமது வெளிநாட்டுக் கொள்கையிலும் பிரதானமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் மேற்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது
இலங்கை அரசு புறக்கணித்தமையானது இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு
ஆதரவளிக்கும் வகையில் இருக்கின்றது.” இவ்வாறு நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்திருக்கிறார் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும்ää அமைச்சருமான  ரவூப் ஹக்கீம்.

இலங்கையின் தற்போதைய மேற்கத்தைய சார்பு அரசின் இஸ்ரேல் சார்பான போக்கை ஐ.நாவில் யுனெஸ்கோ தீர்மானத்தில் இலங்கை வாக்களிக்காமல் ஒதுங்கிய போதே ‘வானவில்’ சுட்டிக் காட்டியிருந்தது. ஆனால் முஸ்லீம்
மக்களின் ஏகப் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் முஸ்லீம் காங்கிரசின்
தலைவருக்கு இலங்கை அரசின் இந்த பாலஸ்தீன விரோதப் போக்கைப் பற்றிப் பேசுவதற்கு பல மாதங்கள் எடுத்திருக்கிறது. அதுவும் அரசுக்கு
நோகாத வகையில்தான் ஹக்கீம் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இங்கேää அரசின் பங்காளியான அவருக்கு தனது அரசு இஸ்ரேலுக்குச் சார்பாகச் செயல்படப் போகின்றது என்பது எவ்வாறு தெரியாமல்
போனது என்ற கேள்வி எழுகின்றது.

மாறிமாறி வரும் அரசுகளில் ஏதாவது சாக்குப் போக்குகளைச் சொல்லி
இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுää தமது சொந்த
சொத்துச் சுகங்களைப் பாதுகாப்பவர்கள், மக்கள் பிரச்சினைகள் என்று வரும்போது மட்டும் மாதக்கணக்கில் சிந்திக்கிறார்கள் போலும்!


வானவில் வைகாசி 2017

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்