மேதினத்தன்று காலிமுகத்திடலில் திரண்ட சன சமுத்திரம் சொல்லும் சேதி என்ன ? தோழர்மணியம்



தென்னாசிய நாடுகளிலேயே  இலங்கையில்தான் மேதினம் வெகுசிறப்பாகக் கொண்டாடும்  வழக்கம் உள்ளது எனச் சொல்லலாம். அதேநேரத்தில்
இங்குதான் தொழிலாளர்களின் கட்சிகள ; மட்டுமின்றி, கடைந்தெடுத்த  முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக்க ட்சியும் பிற்போக்கு தமிழ் கட்சிகளும் மேதினத்தைக் கொண்டாடும் விந்தையும்
நடைபெறுகிறது. ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியம்  இலங்கையை
அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் மட்டுமின்றி,  1948இல் இலங்கைக்கு
சுதந்திரம் கிடைதத்த பின்னர் ஐ.தே.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட  19656இல் எஸ் . டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சி அமையும் வரை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மேதினத ;தை சுதந்திரமாகக் கொண்டாட ஐ.தே.க. அரசு அனுமதிக்கவில்லை.
பண்டாரநாயக்க ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னரே மேதினம் சம்பளத ;துடன் கூடிய விடுமுறை தினமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட 1966இல் அப்போதைய ஐ.தே.க. தலைமையிலான அரசில் பிற ;போக்கு தமிழ் கட்சிகளான
தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ ; கட்சியும் இணைந்திருந்ததால் அக்கட்சிகளின் தூண்டுதலால் யாழ்ப்பாணத்தில் மட்டும் மேதினம் தடை
செய்யப்பட்டது. ஆனால் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அந்தத  தடையையும் மீறி யாழ்ப்பாணத ;தில் மேதின ஊர்வலத ;தையும், பொதுக் கூட்டத ;தையும் நடாதத்தியது.




அதேபோல அதே அரசாங்கம் 1969இல் மேதினமும், வெசாக் தினமும் ஒரே நாளில் வந்ததைக் காரணம் காட்டி நாடு முழுவதும் மேதினத்தை மே முதலாம் திகதி நடாத்தக்கூடாது எனத்  தடை செய்தது. அந்த முறையும்
புரட்சிகர கம்யூனிஸட் கட்சி மட்டும் தடையை மீறி கொழும்பிலும்
யாழ்ப்பாணத ;திலும் ஊர்வலங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடாத்தியது. அதுமட்டுமின்றி, 1977இல் ஜே.ஆர.ஜெயவர்த்தன
தலைமையில் ஐ.தே.க. அரசு அமைந்தபோது அவரது அரசு இடதுசாரிக் கட்சிகளையும் தொழிற ;சங்கங்களையும்   அவர்கள் நடாத்திய பத்திரிகைகளையும் தடைசெய்ததுடன்,  தொழிலாளர்கள்
அக்கட்சிகளின் மேதின நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வதற்காக அன்றைய தினம் நாடு முழுவதுமுள்ள சினிமாக் கொட்டகைகளில் கட்டணம் எதுவுமின்றி படம் பார்ப்பதற ;கு ஏற்பாடு செய்ததுடன், வட இந்தியாவில் இருந்து சினிமா நடிகர்களையும் பாடகர்களையும் அழைத்து  வந்து காலிமுகதத் திடலில்
களியாட்டங்களையும் நடாத ;தியது. இருந்த போதிலும் தொழிலாளி
வர்க்கத ;தின் மேதின உணர்வுகளைத் தடுக்க முடியவில்லை.


புலிகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரிகள ; தலைமையிலான தொழிற் சங்கக் கூட்டுக் குழுவைத்  தடை செய்ததுடன்   தம்மைத்  தவிர வேறு எவரும் மேதின நிகழ்வுகளை நடாத்தக்கூடாது எனத ;தடையும் விதித்தனர்.அதுமாத்திரமின்றி, வடக்கின்
இரண்டு பிரபல்யமான இடதுசாரித ;தொழிற் சங்கவாதிகளான
எஸ ;.விஜயானந்தன் ஆ.க.அண்ணாமலை ஆகியோரைச் சுட்டுப் படுகொலையும் செய்தனர்.இலங்கையைப் பொறுத ;தவரை இன்று மேதினம் என்பது அதன் சர்வதேசத் தன்மையையும் புரட்சிகரத்  தன்மையையும் இழந்து அரசியல் கட்சிகளின் பலத்தைக் காட்டும் களியாட்ட விழாவாக மாறியுள்ளது. தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடன் தாமாகவே மேதின நிகழ்வுகளில் கலந்து கொள ;ளும் நிலைமை மாறி, கட்சிகள ; தமது ஆதரவாளர்களுக்கு மதுபானம்,  உணவுப் பார்சல்
பணம் என்பன கொடுத ;து வாகனங்களில் அழைத்து வந்து மேதின நிகழ்வுகளை நடாதத்தும் இழிவான நிலை தோன்றியுள்ளது.


இம்முறை மேதின நிகழ்வுகளுக்காக ஆட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும் இந்த அரசாஙத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் பங்கு வகித்த த ஜே.வி.பியும்  மொத்தமாக 5000 பஸ் வண்டிகளைத் தமது மேதின
நிகழ்வுகளுக்கு தமது ஆதரவாளர்களை ஏற்றிச் செல்வதற்காக ஏற ;பாடு
செய்திருந்தனர் என்பதிலிருந்தே நிலைமையைப் புரிந்து
கொள ;ளலாம் இந்த நிலைமையைப் பார்க்கும் போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1970களில் எமது புரட்சிகர கம்யூனிஸட் கட்சி
யாழ்ப்பாணத ;தில் ஒரு மேதினத்தன்று ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் அங்குள ;ள முற்றவெளி மைதானத்தில் பொதுக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. கிளிநொச்சியிலிருந்து நாம் பெருமளவில் அதில் பங்குபற்றினோம். யாழ்ப்பாணம் போனபின்னர்தான் எமக்கு ஒரு விடயம் தெரிய வந்தது. கிளிநொச்சி கனகபுரம் படித்த  வாலிபர் திட்டத்தைச் சேர்ந்த நவரதத்தினம் என்ற ஒரு தோழர் பஸ்ஸுக்குப் பணமின்மையால் எமக்குத்  தெரியாமலே கிளிநொச்சியிலிருந்து
யாழ்ப்பாணம் வரை கால்நடையாக மேதின நிகழ்வில் கலந்துகொள்ள
வந்திருக்கிறார்!

இன்றைய நிலைமைகள் இவ்வாறு இருப்பினும் நீண்டகாலத ;தின்
பின்னர் மிகவும் உணர்ச்சிகரமானதும் பிரமாண்டமானதுமான ஒரு
மேதினக் கூட்டம் கொழும்பு காலிமுகத ;திடலில் கூட்டு எதிரணியினால் நடாத ;தப்பட்டது மனநிறைவைத் தருகிறது. அரசாங்கம் திட்டமிட்டே
எதிரணிக்கு காலிமுகத ;திடலை ஒதுக்கியது. ஏனெனில் எத ;தனை
ஆயிரம் மக்கள் கூடினாலும் அந்த இடத ;தில் கொஞ்சப்பேராகவே
காட்சியளிப்பர். அவவளவுக்கு அந்த இடம் மிகவும் பிரமாண்டமானது. ஆனால் அரசாங்கம் மட்டுமின்றி, கூட்டத ;தை ஒழுங்கு செய்த எதிரணியே
எதிர்பார்த்திருக்காத அளவுக்கு திடல் முழுவதும் மக்களால் நிரம்பி
வழிந்தது. ஒரு பக்கத ;தில் சமுத்திர வெள ;ளம் என்றால்,  மறுபக்கத ;தில்
சன வெள்ளம். அவ்வளவும் தாங்களாகத் தீர்மானித்து  வந்த
உணர்வுமிக்க மக்கள் கூட்டம். ஐ.தே.க., சிறி லங்கா .சு.க,  ஜே.வி.பி.
ஆகியவற்றின் கூட்டங்களுக்குத ; திரண்ட முழு மக்கள ; தொகையையும் விடக் கூடுதலான மக்கள் எதிரணியின் மேதினக் கூட்டத்தில்  மட்டும் திரண்டனர்.

இதுபற்றி என்னிடம் கருத ;துத  தெரிவித ;த கொழும்பிலுள்ள ஒரு
மூத்த  இடதுசாரித் தொழிற ;சங்கவாதி, 1963ஆம் ஆண்டு இடதுசாரி ஐக்கிய
முன்னணி தொழிலாளர்கள் சார்பாக 21 கோரிக்கைகளை விலியுறுத ;தி காலிமுகத ;திடலில் நடாத ;திய பிரமாண்டமான பொதுக்கூட்டத ;திற்குப் பின்னர் இந்தமுறை கூட்டு எதிரணி நடாத ;திய மேதினக் கூட்டமே
பிரமாண்டமானது எனக் கூறினார். அன்றைய இடதுசாரி ஐக்கிய
முன்னணிப் பொதுக்கூட்டத ;தில் சுமார் 15 இலட்சம் மக்கள ; கலந்து
கொண்டதாக பத்திரிகைகள் மதிப்பீடு செய்திருந்தன. இடதுகாரி
முன்னணியினர் நடாத்திய  ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க
மூன்றரை மணித ;தியாலங்கள் எடுத ;தது! கூட்டு எதிரணியின் இந்தப்
பிரமாண்டமான மேதினக் கூட்டம் இலங்கை அரசாங்கத்துக்கும் உலகத்துக்கும் ஒரு செய்தியை விடுத்துள்ளது. அதாவது தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் தலைமை தாங்கப்படும் இந்த மேற ;கத ;தைய சார்பு அரசாங்கம் மக்கள்
செல்வாக்கை இழந்துவிட்டதால் , அது உடனடியாகப் பதவி விலகி,
பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் புதிய அரசு ஒன்று அமைவதற்கு
வழி செய்ய வேண்டும் என்பதே அந்தச் செய்தியாகும்.

- தோழர்மணியம்

 வானவில் வைகாசி 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...