"இலங்கை – சீன உறவுகள்: 1952ஆம் ஆண்டுக்கு திரும்பி ஓடிய பிரதமர் ரணில்! "-சச்சிதானந்தன்



இலங்கையின் தற்போதைய மேற்கத்தைய சார்புஅரசாங்கத்தின் ஐக்கிய தேசியக்
கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஏப்ரல் மாதத்தில்தான் விரும்பாத ஒரு நாட்டுக்குஅதாவது மக்கள் சீனத்திற்குபிச்சா பாத்திரம் ஏந்தி ஒரு நடைபோய்விட்டு வந்திருக்கிறார். சுமார்ஒன்றேகால் வருடத்திற்கு முன்னர்இதே அரசாங்கத்தின் ஜனாதிபதி,
பிரதமர் உட்பட பெரும்பாலானதலைவர்கள் கிளப்பிய சீன விரோதவெறிக்கூச்சலைப்
பார்த்தவர்களுக்கு, பிரதமரின் சீனவிஜயம் ஆச்சரியத்தைக்கொடுத்திருக்கும் என நம்பலாம்.
வரலாறு சில தனிமனிதர்கள்விரும்பியவாறு செல்வதில்லை என்பதற்கு தற்போதைய இலங்கைஅரசாங்கத்தின் சீனா பற்றிய கொள்கையில் ஏற்பட்டுள்ள 180
பாகை பல்டியடிப்பு ஒரு உதாரணம்.

2015 ஜனவரி 08ஆம் திகதிஇலங்கையில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்ற போது,
முன்னொருபோதும் இல்லாத வகையில் சீனாவுக்கு எதிரானபிரச்சாரம் உச்சத்தை எட்டியது.
பாரம்பரியமாக சோசலிச எதிர்ப்பிலும், சீன எதிர்ப்பிலும் மூழ்கி எழுந்த ஐ.தே.க. மட்டுமின்றி,
எதிரணி ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு
ஆதரவாக மாறிய, சீன நட்புறவைஎப்போதும் பேணி வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சில
உறுப்பினர்கள் கூட சீன எதிர்ப்பு வாந்தி எடுத்தனர்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இலங்கையை சீனாவின் கொலனியாக மாற்றிவிட்டதாக
அவர்கள் கூச்சல் போட்டனர். தாம் ஆட்சிக்கு வந்தால் மகிந்த அரசு சீனாவுடன் செய்து கொண்டுள்ள  அத்தனை ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யப்போவதாகவும்
சூளுரைத்தனர். அவ்வாறே ஜனவரி 8இல் மைத்திரி ஜனாதிபதியாகத் தெரிவானதும், சீனாவின்  உதவியுடன் நிர்மாணிக்கப்படவிருந்த கொழும்பு துறைமுக நகரத்
திட்டத்தை நிறுத்தி வைத்தனர். அதுபோல சீன உதவியுடன் நிறுவப்பட்ட அம்பாந்தோட்டை
துறைமுகம், மத்தள சர்வதேச விமான நிலையம் உட்பட பல சீன உதவித் திட்டங்களையும் நிறுத்தி வைத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும்
இடையிலான உறவுகள் தீவிரமாக வளரத் தொடங்கின. இலங்கை அரச தலைவர்கள் இந்த
நாடுகளுக்கு அடிக்கடி போய்வந்தனர். அந்த நாடுகளின் உயர்மட்டத் தூதுவர்கள் ஒருவர்
பின் ஒருவராக இலங்கைக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். இலங்கையின்
பொருளாதார நெருக்கடியைத்  தீர்ப்பதற்கு மேற்கு நாடுகளிடமும் இந்தியாவிடமும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள்
என்பனவிடமும் இலங்கை யாசகம் செய்தது. ஆனால் எதிர்பார்த்த பயன் ஏதுவும்
ஏற்படவில்லை. இலங்கையில் திட்டமிட்ட முறையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தமக்குச் சார்பான அரசொன்றை ஆட்சியில் இருத்திய மேற்கு நாடுகளும், இந்தியாவும், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உதவத் தயாராக இருக்கவில்லை.
இந்த நிலைமையிலேயே வெட்கத்தை விட்டு தாம் எட்டி உதைத்த சீனாவிடம் இலங்கை
பிச்சைக் காவடி எடுக்க வேண்டி  ஏற்பட்டது.

தற்போதைய மைத்திரி  ரணில் அரசு எடுத்த முட்டாள்தனமான சீன விரோத நிலையால், சீன அரசாங்கத்துக்கு மட்டுமின்றி, இலங்கை அரசாங்கத்துக்கும் பல நூறு கோடி ரூபாக்கள் நஸ்டம் ஏற்பட்டதைப் பற்றி அரசாங்கம் எதுவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. முன்னைய
அரசு பல கோடி ரூபாக்களை  வீணடித்ததாக குற்றம் சாட்டும் தற்போதைய அரசு, தனது
முட்டாள்தனத்தால் ஏற்பட்ட நஸ்டம் குறித்து கவலை ஏதும் இன்றி இருக்கின்றது.
இவர்களுடைய நடவடிக்கையைப் பார்க்கும் போது, இவர்கள் வரலாற்றிலிருந்து எந்தவிதமான பாடங்களையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
சீனா இலங்கையின் எல்லா நெருக்கடிகளின் போதும் தன்னலமற்று உதவிய வரலாற்றையும் புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை.

1952இலும் அன்று ஆட்சியிலிருந்த டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க.
அரசாங்கத்தை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து சீனா எப்படிக்
காப்பாற்றியது என்பதைக்கூட மறந்து இவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள்.
1952இல் இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஒன்று உருவானது. 1948இல்
சுதந்திரமடைந்த இலங்கையை ஆட்சி செய்த ஐ.தே.க. தலைமையிலான அரசு முழுக்க


முழுக்க மேற்கத்தைய சார்பாக இருந்தது. அந்தக் காலத்தில் இலங்கையில் நபர் ஒருவருக்கு
வாராவாரம் 2 றாத்தல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டுவந்தது. ஆனால் இரண்டாம் உலக
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாகவும், இலங்கையில்அரிசி உற்பத்தி வீழ்ச்சிஅடைந்ததினாலும், உலகச்சந்தையில் அரிசி விலை
அதிகரித்ததினாலும், இலங்கையில் அரிசிக்குப் பெரும் தட்டுப்பாடுநிலவியது. ஆனால் இலங்கைக்கு அது ஆதரித்த எந்த மேற்கு நாடும் இன்றுபோல் அன்றும் உதவ
முன்வரவில்லை. அதுமாத்திரமின்றி, இலங்கைக்கு அந்நியச் செலாவணி ஈட்டித்தந்த
இயற்கை இறப்பரையும் உலகச் சந்தையில் செயற்கை இறப்பர்வந்ததால் விற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இலங்கை வேறு நாடுகளிடமிருந்து அரிசியைஇறக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணியும் இருக்கவில்லை. மறுபக்கத்தில், சீனா இலங்கையை
விட ஒரு வருடம் பிந்தி 1949இல் விடுதலை அடைந்தபோதும், அது சோசலிச நாடாக இருந்ததால், மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அரிசியில் தன்னிறைவு அடைந்திருந்தது. ஆனால் மேற்கத்தைய சார்பான இலங்கை சோசலிச சீனாவுடன் இராஜதந்திர
உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. (1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தபின்னர்தான் இலங்கை, சீனா, சோவியத் யூனியன் போன்ற சோசலிச நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தியது)  இத்தகைய ஒரு சூழ்நிலையில் டட்லியின் அரசில் வர்த்தக அமைச்சராக இருந்த ஆர்.ஜீ.சேனநாயக்க (பிற்காலத்தில் தீவிர சிங்கள இனவாதியாக
அறியப்பட்டவர்) ஒரு துணிச்சலான செயலில் இறங்க முன்வந்தார். அவர் டட்லியின் அனுமதியைப் பெற்று சீனாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவிடமிருந்து
அரிசி பெறுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை மிகச் சாதுரியமாகச் செய்து முடித்தார்.


வரலாற்றில்“ இலங்கை –  சீன அரிசி –  ரப்பர் ஒப்பந்தம் ”  எனக் குறிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் 1952 டிசம்பர் 18ஆம் திகதி கையெழுத்தானது. ஓப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சோசலிச சீனாவின் புகழ்மிக்க முதலாவது பிரதமர் சௌ என்லாய் நேரடியாகக் கலந்து
கொண்டார். இந்த ஒப்பந்தம் முதலில் 5 வருடங்களுக்கெனச் செய்துகொள்ளப்பட்ட போதும்,
பின்னர் 6 தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் அமுலில் இருந்து, 1982இல்
காலாவதியானது. இதில் இன்னொரு விசேட அம்சம் என்னவெனில் சீனா உலகச்
சந்தை விலையைவிட இலங்கைக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்கியதுடன்,
இலங்கையிடமிருந்து உலகச் சந்தை விலையைவிட கூடுதலான விலைக்கு இறப்பரை
வாங்கியதுதான்.

இவ்வாறு இலங்கை தனது  உணவுத் தேவைக்கு தத்தளித்த போது தன்னலம் பாராது உதவி
புரிந்த சீனாவுடன்தான் மைத்திரி – ரணில் அரசு நன்றியில்லாமல்  போக்கரித்தனமாக நடந்து
கொண்டது. என்றாலும் தானேவெட்டிய குழிக்குள் விழுந்த இலங்கை அரசு, திரும்பவும் சீன
அரசின் உதவியுடன்தான் மேலே எழும்பி வரவேண்டி இருந்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தால், வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்றுக் கொள்ளாத இலங்கை அரசின் ஐ.தே.க. பிரதமர், திரும்பவும் 1952ஆம் ஆண்டுக்குத் திரும்பி ஓடி, சீனாவின் உதவியைப்
பெற்றிருக்கிறார். இனிமேலாவது இலங்கை அரசு மேற்கத்தைய சக்திகளினதும், இந்தியாவினதும் பூகோள நலன்களுக்கு தாளம் போடாமல் தனது உண்மையான
நண்பர்களை இனம்கண்டு நடந்து கொள்ளுமா என்பதைச் சற்றுப்
பொறுத்திருந்து பார்ப்போம்.

 வானவில், வைகாசி  2016

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...