மோடியின் கோட்பாடான “பிரிக்கமுடியாத பரஸ்பர பாதுகாப்பு” ஸ்ரீலங்காவின் தேசிய நலன்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது கலாநிதி.தயான் ஜயதிலகா


பிரதம மந்திரி மோடியின் ஸ்ரீலங்காவுக்கான இரண்டு நாள் விஜயம் அரசியல் சார்பற்றது என்று dayan jayatilakaகூறப்பட்டது. இருந்தம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த சர்வதேச வெசாக் மாநாட்டில் அவர் உரையாற்றும்போது, இந்தோ - லங்கா உறவுகளுக்கு அதுவும்  விசேடமாக ஸ்ரீலங்காவுக்கான மோடியின் கோட்பாட்டை நிலை நிறுத்தினார்.
அவருடைய செய்தி அரிதாக அரசியல் அல்லாத ரீதியிலோ அல்லது முற்றிலும் கலாச்சாரம் மற்றும் நாகரிக ரீதியில் இருந்தது என்று சொல்வதை விட தர்ம அசோகனுடையதாக இருப்பதைக் காட்டிலும் அதிகம் கவுட்டிலியனுடையதாகவே இருந்தது. நாட்டின் உயர் தலைமைகள்  தற்போதைய அரசாங்கம் - எதிர்க்கட்சி என்பனவற்றுக்கு அவர் நாட்டின் இறையாண்மை இருப்புகளின் வரம்புகளை பரிந்துரைத்தார்.
இப்படித்தான் அவர் சொல்கிறார் “பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புஃமூலோபாயம் ஆகியன நாடுகளுக்கு இடையேயான அதிகார உறவுகள் என்னும் ஒரே அம்சத்தின் கூறுகளாக உள்ளன:

ஸ்ரீலங்காவுடன் நாம் கொண்டுள்ள உறவுகள் காரணமாக பெரிய வாய்ப்புகளை பெறும் கணத்தில் நாம் உள்ளதாக நான் நினைக்கிறேன். பல்வேறு துறைகளிலும் எங்கள் பங்காளித்துவம் உயர்ந்தளவு பாய்ச்சலை எட்டும்.
சுதந்திரமாக பாயும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் எங்கள் எல்லைகளினுடான எண்ணங்கள் என்பன பரஸ்பர நலன்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
உட்கட்டமைப்பு, இணைப்பு, போக்குவரத்து மற்றும் சக்தி என்பனவற்றில் எங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உயர்த்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
விவசாயம், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம்,போக்குவரத்து, மின்சாரம், நீர், தங்குமிடம், விளையாட்டு மற்றும் மனித வளங்கள் போன்ற மனித செயற்பாடுகளின் ஒவ்வொரு துறைகளிலும் எங்கள் அபிவிருத்தியின் கூட்டாண்மை நீண்டுள்ளது.
ஸ்ரீலங்கா மக்களின்  பொருளாதார மற்றும் சமூக நலன்கள் 1.25 பில்லியன் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
நிலம்அல்லது இந்து சமுத்திரம் என்கிற நீர் எதுவானலும் சரி எங்கள் சமூகங்களின் பாதுகாப்பு பிரிக்கப்பட இயலாதது”.
(மோடி: இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா என்பனவற்றின் பாதுகாப்பு பிரிக்கப்படவியலாதது” த ஐலன்ட், மே 13, 2017 பக்.1, தலைப்பு செய்தி)
பிரதமர் மோடி எங்களுக்கு என்ன சொல்கிறார்?
1.எங்கள் உறவுகளில் ஒரு தரம் சார்ந்த பாய்ச்சல் இருக்கப் போகிறது.
2.இது வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், மற்றும் எல்லைகளினுடான எண்ணங்கள் என்பனவற்றின் சுதந்திரமான ஓட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.
3.உட்கட்டமைப்பு, இணைப்பு, போக்குவரத்து மற்றும் ஆற்றல் என்பனவற்றில் நாங்கள் எங்கள் உறவுகளை உயாத்த வேண்டும்.
4.விவசாயம், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம்,போக்குவரத்து, மின்சாரம், நீர், தங்குமிடம், விளையாட்டு மற்றும் மனித வளங்கள் போன்ற மனித செயற்பாடுகளின் ஒவ்வொரு துறைகளிலும் அநேகமாக எங்கள் அபிவிருத்தியின் கூட்டாண்மை நீண்டுள்ளது.
டெல்லியில் வைத்து பிரதமர் விக்கிரமசிங்காவுக்கும் அவரது இந்தியன் நண்பர்களுக்கும் மூடிய கதவினுள் என்னதான் விவாதிக்கப் பட்டிருந்தாலும் இந்த புதிய பங்காளித்துவத்தின் வடிவம், அதைப்பற்றி ஸ்ரீலங்கா மக்களுக்கு முன்பாக பிரதமர் மோடி பகிரங்கமாக குறிப்பிட்டதை இதுவரை ஸ்ரீலங்கா இந்தியாவுடன் கொண்டிருந்த சிக்கலான உறவுக்கு எதிராக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் அதன் பிராந்தியத்தில் உள்ளடங்கியிருக்கும் தமிழ்நாடு தொடர்ந்து இந்த நாட்டுக்கு விரோதமானதாகவே உள்ளது.
ஸ்ரீலங்கா பொருளாதாரத்தின் பல துறைகளில் இருந்தும் எக்டா(ஈரிசி.ஏ) ஒப்பந்தத்துக்கு எதிராக ஏராளமான எதிர்ப்புகள் வெளிப்பட்டிருந்கும் தருணத்தில் விசேடமாக எல்லைகள் ஊடாக சுதந்திரமான ஓட்டத்தை தொடர்புபடுத்தும் பொருளாதார உறவுகளின் தரத்தையும் அளவையும் மேம்படுத்துவதற்கும் உள்ள அறிவை யார் முடிவு செய்தார்கள். உலகின் பல முக்கியமான பகுதிகளில் இத்தகைய  “எல்லைகளுடாக சுதந்திரமாக பாயும்” கோட்பாடுகளை நடைமுறைப் படுத்துவதை நாடும் மற்றும் மக்களும் விலக்கி உள்ளார்கள், ஏனென்றால் தேசத்தைப் பொறுத்தவரை அவை பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன - மிகவும் பிரபலமான பிரித்தானியாவின் பிரிக்ஸிட்(பிரித்தானியா வெளியேற்றம்) உட்பட.
விசேடமாக குறிப்பிட வேண்டியது “உயர்ந்த அளவு”, “சுதந்திர”, “எல்லைகளின் ஊடாக” போன்ற ஓட்டத்தின் அடிப்படையிலான உறவுகளை மனித நடவடிக்கையின் ஒவ்வொரு துறையிலும் அருகிலுள்ள வலுவான பெரிய நாடு ஈடுபடுகிறது. இதுதான் விஷயம் என்றால், இந்த சிறிய தீவில வசிப்பவர்களான ஸ்ரீலங்கா குடிமக்களின் மனித நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கி, ஊடுருவி, வடிவத்தை மாற்றி மற்றும் ஒருவேளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைக்கூட பெருமளவில் மிகவும் சக்திவாய்ந்த அயலவரினால் மேற்கொள்ளப்படுமா? இத்தகைய ஒரு பரிந்துரை  நூற்றாண்டுகளாக மற்றும் நூறாயிரக்கணக்கான வருடங்களாக உள்ள ஸ்ரீலங்காவின் பழைய வரலாற்றில் கூட இருந்தது இல்லை ஏனென்றால் மக்களும் மற்றும் தலைவர்களும் “தசாப்தங்கள் செல்லும்போது நமக்கு என்ன நடக்கும்? நாங்கள் யாராக மாறிவிடுவோம்?” என்று அவர்கள் புத்திசாலித்தனமாக தம்மையே கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீலங்கா சிறிய நாடாக இருக்கலாம் ஆனால் அது எப்போதும் தனது பிரிவையும் மற்றும் தனித்துவ அடையாளத்தையும் அதன் மிகப்பெரிய அயலவரிடம் இருந்து மதிப்புடன் காப்பாற்றி வந்தது. இந்த தீவின் அளவு மற்றும் அமைவிடம் என்பனவற்றுக்கு மாறாக பல நூற்றாண்டுகளாக ஆதாயம் பெறும் நோக்கில், அதன்  சொந்த தலைவிதியை முடிவு செய்வது, அதன் வர்த்தக கூட்டாளிகளை கவனமாக தெரிவு செய்வது, மற்றும் உலகளாவிய ரீதியிலான வல்லரசுகளுடனான உறவை சாதுர்யமாக சமநிலைப் படுத்துவது என்பனவற்றில் சுதந்திரமான இடைவெளியை அது எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.
கொழும்பில் இந்திய பிரதமர் நடத்திய வெசாக் உரை இந்தியாவின் அயலில் உள்ள எந்த ஒரு நாட்டாலும் வரவேற்கப் பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியான ஒரு பேச்சில் ஸ்ரீலங்கா மக்களின் உணர்வுகள் மிகச் சரியாகப் பிரதிபலிப்பதுடன், இதே போன்ற ஒரு நேரத்தில் முந்தைய ஒரு நிருவாகத்தின் கீழ் இந்தியா தனது பாதச்சுவடுகளை ஸ்ரீலங்காவில் உறுதியாகப் பதிப்பதற்கு முயற்சி செய்த பொழுது, இந்தியாவின் நெருங்கிய ஒரு நண்பரும் கூட்டாளியுமான  விஜய குமாரதுங்க தனது இறுதி பேச்சில் (1988 முற்பகுதியில் கம்பல் பூங்காவில் வைத்து) சொன்னது. அவரது தலைகூட பச்சைப் புலிகளாலோ அல்லது ஜேவிபி யினாலோ துண்டு துண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டாலும் கூட “ஸ்ரீலங்கா அமெரிக்காவின் விளையாட்டு மைதானமாகவோ அல்லது இந்தியாவின் 26வது மாநிலமாகவோ மாற அனுமதிக்கப் போவதில்லை” என்று.
30 வருட பிரிவினைவாத போருக்கு பின்பு மற்றும் தமிழ்நாட்டின் அதிகரித்து வரும் பகைமைக்கு மத்தியிலும் மக்கள் தங்கள் சுதந்திரத்தை வலுப்படுத்துவதில் மிகவும் உறுதியாக உள்ளார்கள். சந்தர்ப்பவாத அரசியல் வாக்கம் ஒன்று அவர்களை காட்டிக் கொடுக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
மோடியின் கோட்பாட்டின் முக்கிய அம்சம் இரண்டே வரிகளில் அடங்கியுள்ளது, பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவங்களை ஒன்றாக கொண்டுவருவது என்பதைப்பற்றி  ஸ்ரீலங்கா மக்கள் சரியாக அச்சப்பட வேண்டியுள்ளது:
“ஏனென்றால் ஸ்ரீலங்கா மக்களின்  பொருளாதார மற்றும் சமூக நலன்கள் 1.25 பில்லியன் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. நிலம்அல்லது இந்து சமுத்திரம் என்கிற நீர் எதுவானலும் சரி எங்கள் சமூகங்களின் பாதுகாப்பு பிரிக்கப்பட இயலாதது”.
அறிவுமிக்க பொதுமக்களின் கருத்தில் இது இரண்டு துப்பாக்கி ரவைகள் எங்கள் இறையாண்மை சுதந்திரத்தின் இருப்பு என்பனவற்றை  இலக்கு வைத்து சுடப்பட்டதாகத்தான் பார்க்க முடியும். ஸ்ரீலங்கா அதன் பொருளாதார மற்றும் சமூக நலன்கள் 1.25 பில்லியன் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக ஒரு போதும் கருதவில்லை. ஸ்ரீலங்கா மக்கள் அந்தக் கருத்தை அனுமதிப்பது வெகு கடினம்.
நாங்கள் ஒரு காலத்தில் உலக மாதிரியான உயர்தரத்திலான சமூக நல அமைப்பை உதாரணமாகக் கொண்டிருந்தோம். பின்னர் நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை திறந்து விட்டோம், அது இந்தியா செய்வதற்கு ஒன்றரை தசாப்பதங்களுக்கு முன்பே செய்யப்பட்டது. நாங்கள் உயர் வளர்ச்சியை அடைந்தோம் அது சமீப காலம்வரை இந்தியாவை விட அதிகமாக இருந்தது. இந்த நாட்டின் நலன்கள் மிக அதிகமான சிக்கலான சமூகங்கள் நிறைந்த கூட்டாட்சியான இந்தியாவுடன் எங்கள் நாட்டின் பொருளாதார நலன்கள் தொடர்பு படவேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கருதவில்லை, அதன் சமச்சீரற்ற பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் அதன் தீவிர ஏழ்மையான சமூக விடயங்கள், அளவுக்கு மீறிய சனத்தொகை, ஆழமாக வேரூன்றி உள்ள சாதிய மனநிலை - ஒரு வகையான சமூக இனவெறி - மற்றும் பெயருக்காக மணமகளை எரிப்பது போன்ற பல அழுத்தமான சமூகப் பின்னடைவான விடயங்களை இந்தியா கையாள வேண்டியுள்ளது.
பிரதமர் மோடி அயலவர்கள், அல்லது தெற்காசியா அல்லது இன்னும் சிறப்பாக ஆசியா அல்லது ஈரோயேசியா என்று சொல்லியிருந்தால் ஸ்ரீலங்கா மக்கள்  பிராந்தியம் மற்றும் உலகப் பொருளாதாரம் என்பன பரந்த திசையை நோக்கித் திரும்புகிறது என்று  புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் வெறுமே 1.25 பில்லியன் இந்தியர்கள் என்றே சொன்னார். தங்களது விதியும் மற்றும் வாழ்வாதாரமும் இந்தியாவின் தேர்ச்சக்கரங்களில் பூட்டப்பட்டு இழுபடுவது போலிருப்பதால் ஸ்ரீலங்கா மக்களுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது இந்திய பொருளாதாரத்தின் அலகினைச் சார்ந்ததாக இருப்பதால் ஸ்ரீலங்காவை ஆபத்துக்குள் தள்ளிவிடுகிறது. ஸ்ரீலங்காவாசிகள் 1.25 பில்லியன் இந்தியர்களில் தங்கியிருப்பது புத்திசாலித்தனம் ஆகாது மற்றும் அவர்களால் விழுங்கப்பட்டு விடுவார்கள்.
பாதுகாப்பை பொறுத்தவரை எந்த ஒரு இறையாண்மையுள்ள, சுதந்திரமான நாட்டினதும் பாதுகாப்பானது மற்றொரு நாட்டிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்காது. இதனால்தான் நாங்கள் தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பு என்று பேசுகிறோம். எந்தவொரு நாட்டினது பாதுகாப்பும் மற்றொரு நாட்டினால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும்போது அல்லது ஆளாகும்போது அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றொரு நாட்டிலிருந்து பிரிக்க முடியாதது என்று சொல்ல முடியாது, மற்றும் அந்த நாடு கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் 80 மில்லியன் மக்கள் இந்த சிறிய நாட்டில் இருந்து 18 மைல் தூரத்தில் இருந்து கொண்டு இந்த நாட்டுடன் பகைமை பாராட்டும் போது, எப்படி பிரிக்க முடியாதது என்று சொல்ல முடியும்.
கவுட்டியலின் அர்த்த சாத்திரத்தின்படி, ஒரு நாட்டின் பாதுகாப்பு தவிர்க்க முடியாதபடி மற்றும் தெளிவான அச்சுறுத்தலுக்கு ஆளாவது அதன் அயல் நாட்டினாலேயே - அதன்படி ஒரு நாட்டுககு வழங்கும் பாதுகாப்பு பிரிக்கக்கூடியது மாறாக அதன் அயலவரினால் பிரிக்கமுடியாது என்று கூறப்படுவது சரியல்ல.
ஸ்ரீலங்கா தனது பாதுகாப்பு மற்றொரு நாட்டிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று என ஒருபோதும் கருதியதில்லை. நாடுகளின் பாதுகாப்பு நலன்கள் ஒருங்கிணையலாம், ஒத்துழைக்கலாம் - அது ஒத்துழைப்பு, கூட்டாண்மை, மற்றும் கூட்டணியின் பல்வேறு நிலைகளுக்கு வழி வகுக்கின்றன. ஆனால் அது ஒவ்வொரு நாட்டினதும் இறையாண்மையை பொறுத்த விடயம். தனது சொந்த பாதுகாப்பு  பிரிக்க முடியாததாக உள்ளபோது எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் பாதுகாப்புக்கு கட்டளையிட முடியாது. அது துல்லியமாக பிரிக்கக் கூடியது, ஏனென்றால் அவை இரண்டு நாடுகள், இரண்டு அரசாங்கங்கள் மற்றும் பிரிக்க கூடிய எல்லைகளையும் மற்றும் தனித்துவமான இலக்கினைக் கொண்ட இறையாண்மையுள்ள வெவ்வேறு அமைப்புகள்.
ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாது என்று கருதுவது இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் அதன் ஷரத்துகளுக்கு அப்பாற்பட்டதாகும், அது பூகோள அரசியல் யதார்த்தத்தை அங்கீகரிக்கிறது அது ஸ்ரீலங்கா தனது பெரிய அயலவருக்கு மூலோபாய ரீதியில் தீங்கு விளைவிக்கவோ அல்லது பகைமை பாராட்டக்கூடிய எதையும் செய்யக்கூடாது என்கிற சமச்சீரற்ற தன்மையை விளக்குகிறது.
எனினும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது என்கிற கோட்பாடு, ஸ்ரீலங்காவால் ஏற்றுக்கொள்ளவோ மற்றும் அங்கீகரிக்கவோ முடியாத ஒரு அளவுக்கு அப்பாலும் செல்கிறது.  ஸ்ரீலங்கா எப்போதும் தனது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும், பாதுகாப்பு பங்காளரை முடிவு செய்யும் உரிமையை எப்பொழுதும் கொண்டுள்ளது. எல்லைகளுக்கு அப்பால், நாடுகளுக்கு அப்பால் என்று தன்னிச்சையாக வரையறுத்து பிரிக்கமுடியாத பாதுகாப்பு என்று குறிப்பிடுவது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கருத்து அது எல்லாவற்றிற்கும் மேலாக தனது சொந்த தேசிய நலன்களைப் பற்றி அக்கறை கொள்வதை தடுக்கிறது.
கடலைப் பற்றிய குறிப்பு தெளிவாக அர்த்தப்படுத்துவது சீனாவின் கப்பல்கள் ஸ்ரீலங்கா வழியாக பயணிப்பதை இந்தியா ஒரு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பதைப் போன்றது, அதாவது  சீனாவின் நலன்களுக்கு கப்பல் பயணம் இன்றியமையாதது, சீனா இந்தியாவை போலல்லாது ஸ்ரீலங்காவுக்கு வலுவான ஒரு நண்பனாகும். அதன் பொருளாதாரச் செழிப்பு ஸ்ரீலங்காவுக்கும் ஆசியாவின் இதர பகுதிக்கும் மிகவும் முக்கியமானது. இந்தியா மற்றும் அதன் மாநிலமான தமிழ்நாடு என்பன காண்பிக்கும் மேலாதிக்க போக்கை ஈடு கட்டுவதற்கு ஸ்ரீலங்காவுக்கு சீனாவும் முக்கியமான ஒரு சமநிலைக் காரணியாகும். ஸ்ரீலங்கா மக்கள் தங்கள் அரசாங்கங்கள் அவர்களது  விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக தங்கள் கூட்டு உரிமையை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த சுதந்திரத்தின் இலட்சியம் மற்றும் பெருமையான ஸ்ரீலங்கா மக்களின் விருப்பம் என்பன சிறிமாவோ பண்டாரநாயக்கா, ரணசிங்க பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி மற்றும் ஏன் அனுர பண்டாரநாயக்கா போன்றவர்களின் ஆளுமையில், இறையாண்மையை வலியுறுத்துவதில் மற்றும் மீதமுள்ள உலகத்தினரைக் கையாள்வதிலும் நன்கு பிரதிபலித்தது, ரோகண விஜேவீரவை இதில் குறிப்பிடவில்லை.
அதேவேளை அவர்கள் தற்போதுள்ள அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்களைப் போலில்லாது கடுமையானவர்களாக இருந்தார்கள், ஸ்ரீலங்கா மக்கள் அந்த இலட்சியத்தை தக்க வைத்துக்கொண்டு விழிப்பாக உள்ளார்கள், எங்களால் பார்க்க முடிவதுபோல பல தொழில் முறை அமைப்புகள், தொழிற் சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் இந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்துள்ளார்கள்.
எந்த ஒரு இந்திய தலைவர் அல்லது கொள்கை வகுப்பாளர் ஆகியோர், தேர்தல் ரீதியாக பலவீனமடைந்துள்ள அரசியல்வாதிகள் தாங்கள் வழங்கிய உத்தரவாதங்கள் பாதிப்புக்கு உள்ளானபோது அரசியல் வாழ்க்கையை தொடருவதற்காக மற்றும் மதிப்புகள் மற்றும் செழிப்பான ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு சமூகத்தில் வெற்றி பெறுவதற்காக கிசுகிசுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் படி வலியுறுத்த வேண்டும். அதுதான் வடிவமைக்கும் இலட்சியம், அதுதான் இந்த பழமையான தீவு தேசத்தின் நெறிமுறை, இந்த தேசமானது அதன் சுதந்திர அடையாளத்தை வலியுறுத்தி உள்ளதுடன் மற்றும் அதன் தனித்துவமான இருப்புகளையும் பரந்த துணைக் கண்டத்தின் வெகுஜனங்களுக்கு முரணாகக் காட்டியுள்ளது, அது இறுதியில் எல்லாவற்றையும் மீறி வெற்றி நடை போடும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

 Source: http://www.thenee.com/160517/160517.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...