காலந்தாழ்த்திய கரிசனைக்கு காலவகாசம் கோரும் அரசு!



ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை விவகாரம் மீண்டும் ஒருமுறை இலங்கை அரசியலில் விவாதப் பொருளாக வலம் வருகின்றது. கடந்த 6 வருடங்களாக இது ஒரு ‘மழை ஓய்ந்தும் தூவானம் நிற்காத’ கதையாகத் தொடர்கின்றது. தற்போது ஜெனிவாவில் ஐ. நா. சபை மனித உரிமை பேரவையின்
கூட்டம் நடந்து வருகின்றது. இதில் இலங்கைää ‘‘இலங்கையில் நல்லிணக்கம்ää பொறுப்பு கூறல்ää மனித உரிமைகள் மேம்படுத்துதல்’’ என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்துää போர்க்குற்ற
விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கேட்கின்றது. இந்தத் தீர்மானம் தொடர்பாக விரைவில் வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதுவரையில்
அமெரிக்காää பிரித்தானியா உட்பட 4 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.



தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இத்தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கக்கூடாதென இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள். 2015ம் ஆண்டு செப்டம்பரில் ஐ. நா. மனித உரிமை
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானதுää சர்வதேச மற்றும் இலங்கை நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற (hலடிசனை உழரசவ)
விசாரணைப் பொறிமுறையை உருவாக்கி போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்பதாகும். இலங்கை அரசின் அனுசரணையுடன் எந்த உறுப்பு நாடுகளினதும் எதிர்ப்பின்றி இத்தீர்மானம் ஏகமனதாக
அப்போது நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு
இடமில்லையெனக் கூறியிருக்கின்றனர். இலங்கை வெளிநாட்டமைச்சரோ இவர்கள் இருவரின் கருத்துக்கு முரணனான வகையில் போர்க்குற்ற
விசாரணையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதேவேளை பிரதமரால்
நியமிக்கப்பட்ட மனோரி சரத்முத்தட்டுகமவின் தலைமையிலான நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணிää போர்க்குற்ற விசாரணையில் ஆகக்குறைந்தது ஒரு வெளிநாட்டு நீதிபதியாவது
இருக்கவேண்டுமென அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்கு தேசிய ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்துக்கான பணியகத்தின் தலைவர்ää
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவோ போர்க்குற்ற விசாரணையே தேவையில்லையெனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையேää இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரில் 11 பேர் கையெழுத்திட்டு ஐ.நா.
மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்
சுமந்திரன் இந்தக் கடிதம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்ää கையொப்பமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள 11 பேரில்ää மூன்று பாராளுமன்ற
உறுப்பினர்கள் அதில் கையொப்பம் இடவில்லையென
தெரிவித்துள்ளார். அவரது இந்தக்கூற்று உண்மையானால்ää கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிப்பேர் கையொப்பம்
இட்டுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்துவதோடுää
அந்தக் கடிதம் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வமானதொரு கடிதமல்ல என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. மேலும் போர்க்குற்ற விசாரணை மற்றும் இலங்கைக்கு காலவகாசம் வழங்குவது தொடர்பாக கூட்டமைப்பினரிடையே ஒத்த கருத்துக்கள் நிலவவில்லையென்பதையும் இது தெளிவாகக் காட்டுகின்றது.

ஐ. நா. சபை மனித உரிமை பேரவையில் தற்போது போர்க்குற்ற விசாரணையைக் கோரி நிற்கும் இந்தியா உட்பட பல மேற்கத்தைய நாடுகள் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக தடைசெய்திருந்தன. இந்த
மேற்கத்தைய நாடுகள் புலிகளை மாத்திரமல்ல யுடஞயனையஇ
ஐளு போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களையும் பயங்கரவாதப்பட்டியலில் இணைத்து அவற்றின் மீது போர் புரிந்தும் வருகின்றன. இந்தப்போரில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர். அதற்கு இந்த நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இது தவிர்க்கமுடியாதென்றே நியாயம் கற்பித்து வருகின்றன. ஆனால் இலங்கையோ புலிகளுக்கு
எதிரான யுத்தத்தில் பொதுமக்களுக்கு ஒரு கீறல் விழாமல் நடாத்தியிருக்க வேண்டுமென்று இவர்கள் போர்க்குற்ற விசாரணையைக் கோருவதோடு
நின்றுவிடாதுää அது உள்ளக விசாரணையாக இருக்க முடியாதெனவும் கூறி வருகிறார்கள்.

மேலும் இலங்கையின் இறுதியுத்தம் 33 மாதகாலம் நீடித்தது.
இந்த நீண்டகாலப்பகுதியில் மக்கள் பேரழிவினை தடுத்து நிறுத்த இவர்களாலும் ஐ.நா. சபையாலும் பல நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். போரின் இறுதிக்கட்டத்தின்போதுää ஐ.நா. சபை அக்கறை
காட்டவில்லையென முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் ஒப்புக்கொண்டுமுள்ளார். உரிய நேரத்தில் எதனையும் செய்யாதுää நடந்து முடிந்த பின்னர் விசாரணை கோருவதிலிருந்துää இந்தக் கோரிக்கை கபடத்தனம் கொண்டது என்பது தெளிவாகத் தெரிகின்றது. காலந்தாழ்த்துவதால் கபடத்தனத்தை வெல்ல முடியாது.

மூலம்: வானவில் இதழ் 75, கட்டுரை 3

மார்ச் 22, 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...