புலிகள் வடக்கு முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை மட்டும் கண்டனம் செய்தால் போதாது! சாரங்கன்


1990 ஒக்ரோபர் 30இல் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லி;ம் மக்களை வெளியேற்றி, இனச் சுத்திகரித்துச் செய்ததின் 25ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து சிறீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் அண்மையில் கொழும்பில் கருத்தரங்கொன்றை நடாத்தியது.
இந்தக் கருத்தரங்கில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில், வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை
புலிகள் வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு என்று தெரிவித்து, அதற்காக வருத்தமும்
தெரிவித்துக் கொண்டார். அத்துடன், இந்தச் செயலை வடக்கு மாகாணசபையும் கண்டனம் செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் பின்னர் கேட்டிருந்தார். (சுமந்திரன்
முன்னரும் ஒரு தடவை இதே மாதிரியான கருத்தை ஏறாவூரில் நடைபெற்ற கூட்டமொன்றில்
தெரிவித்திருந்தார்)


சுமந்திரனின் இந்தக் கருத்து, அவர் சார்ந்திருக்கும் தமிழரசுக் கட்சி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பனவற்றின் உத்தியோபூர்வ கருத்தா அல்லது அவரது சொந்தக் கருத்தா என்பது தெரியவில்லை. அத்துடன், அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்ததிற்கு ஏதாவது அரசியல் பின்நோக்கம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. எதுஎப்படியிருப்பினும்,
முதல்தடவையாக தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக புலிகளின் இந்த பாசிசத்தன்மை வாய்ந்த (ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகச் செய்தது போன்ற), மிலேச்சத்தனமான நடவடிக்கையைக் கண்டித்ததை வரவேற்காமல் இருக்க முடியாது.

ஆனால், சுமந்திரனின் வேண்டுகோளை ஏற்று வடக்கு மாகாணசபை இன்றுவரை
இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை. ‘வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்’ எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரும்
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து
புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் விடயத்தில் மௌனம் காப்பது புதிராக இருக்கின்றது. (இதேபோன்ற ஒரு மௌனத்தைத்தான், மியன்மாரில்
முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சம்பந்தமாக அந்நாட்டின் ஜனநாயகத் தலைவி என வர்ணிக்கப்படும் ஆங் சாங் - சூயியும் கடைப்பிடிக்கிறார்)

வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சிதான் இந்தக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டாலும், எதிர்க்கட்சியாவது ஒரு தீர்மானத்தை முன்வைத்திருக்கலாம். அப்பொழுது முதலமைச்சரினதும், அவரது சகாக்களினதும், ஆசாடபூதித்தனம்
அம்பலத்துக்கு வந்திருக்கும். இன்னமும் காலம் கடந்துவிடாதபடியால், இனிமேலாவது அத்தகைய ஒரு தீர்மானத்தை வட மாகாணசபையின் எதிர்க்கட்சி கொண்டு வந்து, புலிகளால்
நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு இழைத்த வரலாற்று கறையை நீக்க வேண்டும்
அதேநேரத்தில், சுமந்திரன் இந்தக் கண்டனத் தீர்மான விடயத்தை வடக்கு மாகாணசபையிடம் மட்டும் முன்வைத்தால் போதாது. தான் சார்ந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் முன்வைத்துக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வைப்பது அவசியம். இந்தக் கருத்தைச்
சொன்னதால், அண்மையில் சுமந்திரன் அவுஸ்திரேலியா சென்றிருந்த வேளையில் அங்குள்ள புலி ஆதரவாளர்களால் சுமந்திரனை நோக்கி ‘துரோகி’ என தூசிக்கப்பட்டாலும், சுமந்திரன் தனது கருத்தில் அவர் உளப்பூர்வமாக இருந்தால், அதைத் தொடர்ந்து வலியுறுத்துவது அவசியம்.

ஏனெனில் ஆண்டாண்டு காலமாக மற்றவர்களை நோக்கி விரல்களை நீட்டிய தமிழ் தலைமை, இனிமேல் தன்னை நோக்கி நீட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. புலிகளின் பாசிச நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில், முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை ஒரு விடயம்
மட்டுமே. அதைவிட இன்னும் ஏராளமான மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், அரச அதிகாரிகள், சமய – சமூகத் தலைவர்கள், தொழிற்சங்கத்
தலைவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், சக போராளிகள், மாற்றுக் கருத்தாளர்கள் என, சுமார் 30,000 பேரை தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் கொன்றொழித்திருக்கிறார்கள்.

புலிகளின் அப்படியான செயல்களின் போது தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ, ஒருபோதும் அவர்களை நோக்கி ஒரு கண்டன வார்த்தை கூடச் சொன்னது
கிடையாது. பதிலுக்கு, “புலிகள்தான் அதைப்பற்றியெல்லாம் பிரேமச்சந்திரனோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இதர தலைவர்களோ ஒருபோதும் வாய் திறப்பதில்லை. ஆனால் அடிக்கடி அரச சித்திரவதைகள் பற்றி மட்டும் பேசுவது எந்த வழியில்
ஜனநாயகமானது.

அதுவும் வரணியில் இருந்த இராணுவத்தினரின் சித்திரவதை முகாம் பற்றித் தெரிந்த
பிரேமச்சந்திரனின் கண்களுக்கு, அதே வரணியில் எருவன் என்ற இடத்தில் புலிகள் அதி உச்சபட்ச சித்திரவதைகள் நடந்த ‘இறைச்சிக் கடை’ அல்லது ‘மேல்வீடு’ என்று
அழைக்கப்பட்ட மிக முக்கியமான சித்திரவதைக்கூடம் இருந்த விடயம் எப்படித் தப்பியது? அல்லது ஆனைக்கோட்டையில் புலிகளின் சிறைக்கூடப் பொறுப்பாளர் காந்தி
என்பவனின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த ராங் - 2 (வுயமெ – 2) என்ற சித்திரவதை முகாம் எப்படித் தெரியாமல் போனது? புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளன் ஒவ்வொருவனின் தலைமையிலும் ஒவ்வொரு சித்திரவதை முகாம்கள் இறுதிக்கட்டப் போர் வரை
செயல்பட்டன என்பதை எப்படி பிரேமச்சந்திரன் மறைக்க முடியும்?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் யுத்தம் நடந்த
காலத்தில் பிரேமச்சந்திரன் முக்கிய பொறுப்பு வகித்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் இந்தியப் படையுடன் சேர்ந்து செயல்பட்டது. அந்தக் காலத்தில் இந்திய அமைதிப்படையால்
புலிகள் மீது மட்டுமின்றி, தமிழ் பொதுமக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட சித்திரவதைகள்,
கொலைகள், பெண்கள் மீதான பாலியல் வதைகள் பற்றி ஏன் பிரேமச்சந்திரன் பிரஸ்தாபிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் தமிழ் இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவர்களால்
‘மண்டையன் குழு’ என்றொரு கொலைக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு பலரைத் தேடிப்பிடித்து ‘மண்டையில்’ போட்டதே? அந்தக் குழுவைப் பற்றி ஏன் பிரேமச்சந்திரன்
பேசுகிறாரில்லை? இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில், பிரேமச்சந்திரனின்
பார்வையில் ஏதோ ஒரு கோளாறு இருப்பது புலனாகிறது. அது ஒற்றைக்கண் பார்வையா அல்லது மாறுகண் பார்வையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
நன்றி : வானவில் மார்கழி -2015

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...