61 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட லுமும்பாவின் பல்- இந்து குணசேகர்


 Photograph of Patrice Lumumba in 1960

 Courtesy: Wikipedia

 பெல்ஜியத்தால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட கொங்கோவின் விடுதலை
நாயகன் பற்றிஸ் லுமும்பாவின் (Patrice Lulumba ) ‘பல்’ 61 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பற்றிஸ் லுமும்பா... ஆப்பிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர்களில் மறுக்க முடியாத பெயர்.

 


1925 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், பெல்ஜிய கொங்கோவின் ஒனாலுவா (Onalula ) என்ற கிராமத்தில் பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர்தான்
பற்றிஸ் லுமும்பா. சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக பெல்ஜியத்திடம்
கொங்கோ அடிமைப்பட்டு இருந்த காலக்கட்டம் அது. பற்றிஸ் தனது இளம் வயதிலேயே கடின உழைப்பாளியாக இருந்தார். படித்துக்கொண்டே கொங்கோவிலிருந்த பெல்ஜிய கொம்பனிகளில் வேலையும் செய்து வந்தார். சிறுவயதிலே பற்றிஸுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வமே அவரை
அரசியல் நோக்கி அழைத்தும் சென்றது.
 

கொங்கோ ஐரோப்பாவின் காலனியாக இருந்ததை பற்றிஸ் ஒருபோதும்
விரும்பியதே இல்லை. கொங்கோ விடுபட்டு சுதந்திரமாக, அதேநேரத்தில்
ஐரோப்பாவுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதனைத்தான் தனது கட்டுரைகளிலும், கவிதைகளிலும் அவர் தொடர்ந்து எழுதி
வந்தார். பற்றிஸ் தனது 20 ஆவது வயதுக்குப் பிறகுதான் கொங்கோவின்
விடுதலைக்கான அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கி, அதில் தீவிரமாக ஈடுபட்டார். கொங்கோவில் பழங்குடிகள் இனவாதத்தால் பிரிவினைக்கு உள்ளாகி இருப்பதை பாட்ரிஸ் உணர்ந்தார். இந்த இனவாதம்தான் கொங்கோவின் சுதந்திரத்திற்கு எதிரியாக இருப்பதை கண்டறிந்து, காங்கோ மக்கள் அனைவரும் பொது தேசிய நலனுக்காக ஒன்றுபட வேண்டிய காலக்கட்டம் இது.. ஒன்றுபடுங்கள் என்று மக்களை நோக்கி கேள்வி எழுப்ப தொடங்கினார்.
பற்றிஸின் அரசியல் வளர்ச்சி அங்கிருந்துத்தான் தொடங்கியது. அதன்பின்னர் கொங்கோவின் அரசியல் முகமானார் பற்றிஸ். ஐரோப்பிய நாடுகளும் அவரை அவ்வாறே அறிமுகம் செய்தது. பல போராட்டகளுக்கு இடையே 1958 ஆம் ஆண்டு
கொங்கோ தேசிய இயக்கம் (ஊழபெழடநளந யெவழையெட அழஎநஅநவெ) என்ற கட்சியை பற்றிஸ் ஆரம்பித்தார்.
 அதனைத் தொடர்ந்து எழுந்த வலுவான தேசியவாத முழக்கம் காரணமாக
பெல்ஜியத்தின் கை பணிந்தது. விளைவு... 1960 ஆம் ஆண்டு கொங்கோ குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஜனநாயக முறையில் நாட்டின் பிரதமராக பற்றிஸ் லுமும்பா பதவியேற்றார். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையுடனான உடன்பாட்டில் ஐரோப்ப நாடுகளின் கண்காணிப்பில் கொங்கோ இருப்பதை பற்றிஸ் எதிர்த்தார்.
மேலும் பெல்ஜியம் - கொங்கோ உடன் ஏற்படுத்தப்பட்ட நட்பு  உடன்படிக்கையையும் அவர் இரத்து செய்தார். பற்றிஸின் இந்த நடவடிக்கை
பெல்ஜியத்தை கோபமடையச் செய்தது. இதனைத் தொடர்ந்துதான் வரலாற்றில்
மன்னிக்க முடியாத குற்றத்திற்கு பெல்ஜியம் தன்னை உடன்படுத்திக்
கொண்டது. பாராளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருந்தும் அரசின்
சொத்துகளை பற்றிஸ் சட்டத்துக்கு புறமாக பயன்படுத்திக்கொண்டார் என்று
போலியான குற்றம் சுமத்தப்பட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த ஆட்சி
கவிழ்ப்பின் பின்னணியில் பெல்ஜியம் இருந்தது. பற்றிஸ் கைது செய்யப்பட்டார்.
1961 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கொங்கோ பாதுகாப்புப் படையால் பற்றிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளர்கள் அத்துடன் நிற்கவில்லை.
பற்றிஸ் மரணத்திற்கு தடயம் இருக்கக் கூடாது என்று கருதி அவரது உடலை
கூறாக்கி அமிலத்தில் கரைத்தனர். அவர் உடலில் மீதமிருந்த தங்கப் பல், பெல்ஜியம் வசம் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்தது. வரலாற்றில் பற்றிஸ் லுமும்பாவின் மரணம், கொடூரமான மரணமாகவே அறியப்படுகிறது.


61 ஆண்டுகளுக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்ட பல்: பற்றிஸின் உடல் உறுப்பில் தங்கத்தினாலான அவரது ஒரே ஒரு பல் மட்டுமே மிச்சம் இருந்தது. அதனை திங்கட்கிழமை பெல்ஜிய அரசு, அரசு மரியாதையுடன் பாட்ரிஸின் குடும்பத்தாரிடம் ஒப்படைந்தது. நிகழ்வில் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸாண்டர் டி க்ரூ (யுடநஒயனெநச னுந ஊசழழ) பேசும்போது, “பற்றிஸ் கொலைக்கு
தார்மிகமாக பொறுப்பேற்கிறேன். இது மிகவும் வலி மிகுந்தது. மறுக்க முடியாத
உண்மை. இவை நிச்சயம் பேசப்பட வேண்டும். ஒருவர் தனது அரசியல்
நம்பிக்கைகளுக்காகவும், வார்த்தைகளுக்காகவும், சிந்தனைகளுக்காகவும் கொல்லப்பட்டார்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். பற்றிஸ் குடும்பத்தினர் கூறும்போது, “அவரது இறுதிச் சடங்குகளை இனியாவது நாங்கள் முடிப்போம்” என்று தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க விடுதலை வரலாற்றில் பற்றிஸ் லுமும்பா பெயர் அழுத்தமாக
நிலைத்துவிட்டது. அதற்கான காட்சிகளை காங்கோவின் முக்கிய வீதிகளில் நாம் காணலாம். சுரண்டலுக்கு எதிராக பாட்ரிஸின் குரல் கொங்கோவின் இளம் தலைமுறை மூலமாக தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கிறது.


“வரலாறு பேசும் அந்த நாள் வரும். ஆப்பிரிக்கா தன் வரலாற்றை எழுதும்.
அது பெருமையும் கண்ணியமும் கொண்ட வரலாறாக இருக்கும்” - 

                                                                                                             பற்றிஸ் லுமும்பா 

பற்றிஸ் லுமும்பா கூறியதுபோலவே
அந்த நாள் வந்தது....

Source: Vanavil 138 June 2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...