ஒப்பந்தங்கள் மற்றும் பிணைமுறிகளை மீறிய மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

 


மொரட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து கல்விக்கான விடுமுறையைப் பெற்று வெளிநாடு சென்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 35 பேர் ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமுறிகளை மீறியமையால் 2021 டிசம்பர் 31ஆம் திகதியாகும்போது அறவிடப்படவேண்டிய தொகை 51,649,961 ரூபா என அரசாங்கப் பொறுப்புகள் பற்றிய குழுவில் புலப்பட்டது.

ஒப்பந்தங்கள் மற்றும் பிணைமுறிகளை மீறி 8 வருடங்களுக்கு முன்னர் குறித்த பிணை தொகையை செலுத்தாத விரிவுரையாளர்கள் 16 பேரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை 23,190, 595 ரூபா என்றும் இங்கு தெரியவந்தது.

ஒப்பந்தங்கள் மற்றும் பிணைமுறிகளை மீறிய விரிவுரையாளர்களின் முறிகளின் பெறுமதியை அறவிடுவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உபவேந்தர், மேலே குறிப்பிடப்பட்டவர்களில் ஐவரிடமிருந்து அறவிடப்பட்டிருப்பதாகவும், 112பேரிடமிருந்து தவணை முறையில் அறவிடப்படுவதாகவும், 11 பேருக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சரித ஹேரத் (Prof. Charitha Herath) தலைமையில் கடந்த ஜுன் 8ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன. 

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான மொரட்டுவை பல்கலைக்கழகம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயலாற்றுகை அறிக்கைகள் குறித்து இதில் ஆராயப்பட்டது.

மொரட்டுவை பல்கலைக்கழத்தில் பிரதானமாக கணிதம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகள் கற்பிக்கப்படுவதாக உபவேந்தர் பதில் வழங்கினார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இதுவரை இரண்டாம் வருடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், அடுத்த கல்வியாண்டுக்காக மாணவர்களை உள்ளீர்ப்பதற்குப் போதிய கட்டடங்கள் இல்லையென்றும் உபவேந்தர் தெரிவித்தார். மருத்துவ பீடத்தின் மூன்றாம் கல்வியாண்டு மற்றும் இறுதிக் கல்வியாண்டுக்குப் போதியளவு கல்விசார் ஊழியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உபவேந்தர் கோரிக்கை விடுத்தார்.

நாகொட வைத்தியசாலைக்கு அருகில் விரிவுரையாளர்களுக்கான பிரிவொன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், களுத்துறை நாகொட பகுதியில் 15 ஏக்கர் காணியை சுவீகரித்துத்  தேவையான கட்டிடங்களை அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை சுவீகரிப்பதற்கான ஒதுக்கீடு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக வங்கிக் கடன் பெறவும் அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பணிப்புரை விடுத்தார்.

காலத்துக்கு காலம் செயற்படும் அரசியல் அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமைய கல்விசாரா ஊழியர்களை பல்கலைக்கழகங்களுக்கு நியமிப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் கோப் (Committee on Public Enterprises- CopE) குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்குள் இயங்கும் யூனி கென்சல்டன்சி நிறுவனம் இதுவரை அமைச்சரவையின் அனுமதியைப் பெறாமை குறித்து கோப் குழு விசாரணை நடத்தியதுடன், பல்கலைக்கழக மானியங்களின் அறிவுறுத்தலின் பேரில் அதற்கான ஆவணங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார். இச்செயற்பாடுகள் காலதாமதமானது குறித்து அதிருப்தி தெரிவித்த தலைவர், அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணித்தார்.

மேலும், மொரட்டு பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமான Lk Domain Registry குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

2004.03.05ஆம் திகதி மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் உரிமையை இழந்தமை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த நிறுவனத்தை தேசிய பெறுமதி மிக்க நிறுவனமாகக் கருதுமாறு கோப் (CopE) குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

பல்கலைக்கழகங்களுடன் இணைந்த அத்தகைய நிறுவனங்களின் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், யூனி கென்சல்டன்சி நிறுவனம் மற்றும் LEARN ஆகியவை தொடர்பான அறிக்கையை மூன்று மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார். முழு பல்கலைக்கழக துறையையும் உள்ளடக்கிய ஆலோசனை நிறுவனங்களுக்கான பொதுவான வழிகாட்டுதல்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்

பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் திட்டத்தை உரிய நேரத்தில் சமர்ப்பித்தமை, வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் கணக்காய்வு, முகாமைத்துவ குழுக் கூட்டங்களை நடாத்தியமைக்காகப் பல்கலைக்கழக முகாமைத்துவக் குழுவை கோப் (CoPE) தலைவர் பாராட்டினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஸ்பகுமார, ஜயந்த சமரவீர, இரான் விக்கிரமரத்ன, (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, தொலவத்த மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். source : chakkaram..comஜூன் 13, 2022

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...