சையிட் பசீரின் “குருக்கள் மடத்துப் பையன் குருக்கள் மடத்துப் பையன்”நூல் வெளியீடு நூல் வெளியீடு


புலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் கேட்பார் எவருமின்றி கோலோச்சிய

காலத்தில் தமிழ் இனத்தையும் விடச் சிறிய இனமாகவும்ää அதேவேளையில்

ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்களுடன் பின்னிப் பிணைந்து 

வாழ்ந்தவர்களான முஸ்லீம் மக்கள் மீது நடாத்திய இனச் சுத்திகரிப்பு 

படுகொலைத் தாக்குதல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

அவ்வாறான படுகொலைகளில் ஒன்று, கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு

சென்ற வாகனங்களை குருக்கள் மடத்தில் மறித்து அவற்றில் பயணம் செய்த 

69 முஸ்லீம்களைப் படுகொலை செய்த சம்பவமாகும். இந்தச் சம்பவத்தை

மையமாக வைத்து லண்டனில் வசிக்கும் முற்போக்கு சிந்தனையாளரான 

சையிட் பசீர் என்பவர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடை

செய்திருந்தாலும்ää லண்டன் நகரம் இன்னமும் புலிச் செயற்பாடுகளின்

குருசேத்திரமாகத் திகழ்கின்றது. அதன் காரணமாக இந்த நூல் வெளியீட்டைத்

தடுப்பதற்கு புலி ஆதரவாளர்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்ட 

போதிலும், நூல் வெளியீடு லண்டனில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது.


புலிகள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட ஏராளமான இனச்

சுத்திகரிப்பு பாசிசச் செயற்பாடுகளில் சில கீழே தரப்பட்டுள்ளது.


1990 யூலை 12 மட்டக்களப்பு

குருக்கள் மடத்தில் 69 முஸ்லீம்

பயணிகள் படுகொலை.

1990 ஆகஸ்ட் 01 மூதூர் முஸ்லிம்கள்

வெளியேற்றம்.

1990 ஆகஸ்ட் 03 காத்தான்குடி

மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள்

படுகொலை.

1990 ஆகஸ்ட் 05 அம்பாறை

முல்லியன்காடு 17 முஸ்லிம் விவசாயிகள்

படுகொலை.

1990 ஆகஸ்ட் 06 அம்பாறை 33 முஸ்லிம்

விவசாயிகள் படுகொலை.

1990 ஆகஸ்ட் 12 ஏறாவூர் 116 பேர்

முஸ்லிம் கிராம மக்கள் படுகொலை.

1992 ஒக்ரோபர் 15 பலியகொடல்லா 285

கிராம வாசிகள் படுகொலை.

1990 ஒக்ரோபர் 30 வட மாகாணத்தில்

இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம். 

Source: Vaanavil 98 -2018.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...